Word |
English & Tamil Meaning |
---|---|
அசாசி | acāci n. <>ajājī. 1. Black cumin. See கருஞ்சீரகம். . 2. Gulancha See சீந்தில். |
அசாணிமூலி | acāṇi-mūli n. Species of Daemia. See. வேலிப்பருத்தி. (மலை.) |
அசாத்தியம் | acāttiyam n. <>a-sādhya. 1. That which is impracticable, impossible of accomplishment; சாதிக்க முடியாதது. (சி.சி.அளவை. 1. சிவாக்.) 2. See அசாத்திய ரோகம். |
அசாத்தியரோகம் | acāttiya-rōkam n. <>id.+. Incurable disease, one of three rōkam, q.v.; தீர்க்கக்கூடாத நோய். |
அசாத்திரமுயற்சி | acāttira-muyaṟci n. <>a-šāstra+. Religious ceremonies in vogue though not sanctioned by Sāstras, dist. fr. சாத்திரமுயற்சி; சாத்திரவிதியின்றி ஆசாரம்பற்றிச் செய்யும் சடங்கு. (W.) |
அசாதாரணம் | a-cātāraṇam n. <>a sādhāraṇa. 1.That which is not common, special thing, rarity; சிறப்பானது. (ஈடு, 6,1,7.) 2. Fallacy of hētu being found neither in a place where sādhya exists nor in a place where it does not exist; |
அசாதி | acāti n. cf. aja-pati. Mars, as ruling the astrol. house Aries; மேடாதிபனாகிய செவ்வாய்க் கிரகம். (சங். அக.) |
அசாந்தன் | a-cāntaṉ n. <>a-sānta. Restless man, one without tranquillity; அமைதியில்லாதவன். விரவசாந்தர்கள் (ஞானவா. சுரகு.41). |
அசாமி | acāmi n. <>U. asāmī. An individual. See ஆஸாமி. Colloq. |
அசாயசூரன் | acāya-cūraṉ n. Dial. var. of அசகாய சூரன். . |
அசாரம் 1 | a-cāram n. <>a-sāra. 1. That which is sapless; சாரமற்றது. 2. That which is without strength or value, which is unsubstantial; |
அசாரம் 2 | acāram n. <>U. hazar. [T. ajāramu, K. ajāra.] Royal audience-hall; ஆஸ்தானமண்டபம். |
அசாரவாசி | acāra-vāci n. <>id.+. Watchman of the king's gate; அரசன்வாயில் காவலன். ஒருபூசல் உண்டென்று கூறிய அசாரவாசிக்கு (சீவக.430, உரை). |
அசாவிடு - தல் | acā-viṭu- v.intr. <>அசா+. To rest; இளைப்பாறுதல். இரைதேர்ந்துண் டசாவிடூஉம் புள்ளினம் (கலித். 132,3). |
அசாவு - தல் | acāvu- 5 v.intr. <>அயாவு-. To droop, languish, grow slack; தளர்தல். அருமை யுடைத்தென் றசாவாமை வேண்டும் (குறள், 611). |
அசாவேரி | acāvēri n. <>āsāvarī. (Mus.) A specific melody-type adapted for spring time; வசந்தகால ராகங்களூ ளொன்று. (பரத. இராக. 77.) |
அசாஸ்திரீயம் | a-cāstirīyam n. <>a-sāstrīya. That which is contrary to the Sastras; சாஸ்திர விரோதமானது. |
அசி 1 | aci n. <>asi. 1. Sword, knife; வாள். (திவா.) 2.Weapon; |
அசி 2 | aci n. <>hasi. Derisive laughter; அவமதிச்சிரிப்பு. (சூடா.) |
அசி 3 - த்தல் | aci- 11 v.intr. <>has. To laugh; சிரித்தல். புள்ளெலா மசிப்ப போன்று (சீவக. 659.) |
அசி 4 - த்தல் | aci- 11 v.tr. <>aš. To eat, consume; உண்டல். (தேவா. 867,3.) |
அசிகை | acikai n. cf. hāsikā. Mirthful conversation; நகைத்துப்பேசும் பேச்சு. கசுகுசென்னவே சொல் லசிகை யென்னடி (மதுரகவி.4). |
அசிங்கம் | aciṅkam n. <>a-sahya. 1. Uncleanness, impurity, as unbearable; அசுத்தம், அசிங்கமான இடம். Colloq. 2. Disorder, repulsiveness; |
அசித்தம் | acittam n. <>a-siddha. (Log.) Fallacy of hētu being unsustainable; ஏதுப்போலிகளூ ளொன்று. (மணி.29,192.) |
அசித்தி | acitti n. <>a-siddhi. Incompleteness, failure; கைகூடாமை. தாவறு மசித்தி சித்தி தம்மி லலையாதே (பிரபோத. 27,80) |
அசித்து | a-cittu n. a-cit. That which is non-intelligent, matter; சடப்பொருள். சித்த சித்தொ டீசனென்று செப்புகின்ற மூவகைத் தத்துவத்தின் (பாரத. பதினைந்.1). |
அசிதம் 1 | acitam n. <>a-sita. Blackness; கருமை. அசித வெங்கட லுண்டு (இரகு. குச. 83). |
அசிதம் 2 | acitam n. <>Ajita. An ancient Saiva Scripture in Sanskrit, one of 28 civākamam, q.v.; சிவாகமத்து ளொன்று. (சைவச பொது. 331, உரை.) |
அசிதர் | acitar n. <>id. Name of Jaina Arhat, one of 24 tīrttaṅkarar, q.v.; தீர்த்தங்கரருள் ஒருவர். (திருக்கலம். காப்பு, உரை.) |
அசிதாம்புருகம் | acitāmpurukam n. <>a sita+ambu-ruha. Blue water-lily. See நீலோற்பலம். (மலை.) |
அசிதாரு | aci-tāru n. <>asi+taru. Hell in which sword-like trees form instruments or torture; நரகவிசேஷம். (சிவதரு. சுவர்க்க. 115.) |