Word |
English & Tamil Meaning |
---|---|
அசுத்தம் | a-cuttam n. <>a-šuddha. 1. Impurity, foulness; சுத்தமின்மை. 2. Ceremonial impurity, pollution; 3. Inaccuracy, incorrectness; 4. Excrement; |
அசுத்தமாயை | a-cutta-māyai n. <>id.+. (Saiva.) Impure Māyā, the material cause of a-cutta-p-pirapacam, dist. fr. சுத்தமாயை, as tending to yield pain as well as pleasure; அசுத்தப் பிரபஞத்துக்கு முதற்காரணமான மாயை. (சி.சி.1,19, மறைஞா.) |
அசுத்தன் | acuttaṉ n. <>id. Person impure in body or mind; சுத்தமற்றவன். |
அசுத்தாத்துவா | acuttāttuvā n. <>id.+. adhavan. See அசுத்த தத்துவம். (ஞானா. கட்.) |
அசுத்தாவி | a-cuttāvi n. <>id.+ ஆவி. Unclean spirit, demon; பிசாசு. chr |
அசுத்தி | a-cutti n. <>a-šuddhi, Impurity, uncleanness; சுத்தமின்மை. |
அசுத்தை | a-cuttai n. <>a-šuddhā. Unchaste woman; ஒழுக்கமற்றவள். அசுத்தை யென்றே யறிந்துவைத் தவளை நீத்தோம் (உத்தரரா.சீதை.56). |
அசுப்பு | acuppu n. 1. Suddenness, quickness; சடிதி. அசுப்பிலே சாகிறது. (R.) 2. Spying; |
அசுபக்கிரகம் | a-cupa-k-kirakam n. <>a-šubha+. Malevolent planet; தீக்கோள். சுபா சுபக் கிரகம் (விதான. மரபி. 2, உரை). |
அசுபக்கிரியை | a-cupa-k-kiriyai n. <>id.+. Inauspicious rites or ceremonies, as for the dead; அமங்கல கருமம். ஈன்றோர்க் கன்றிப் பல் லசுபக் கிரியைசெயல் (திருவானைக். கோச்செங். 41). |
அசுபம் | a-cupam n. <>a-šubha. 1. Inauspiciousness, unpropitiousness; அமங்கலம். சுபாசுபங்க ளென்னுந் துன்றுமுளை (ஞானவா. உபசாந்தி.17). 2. Death; 3. See அசுபக்கிரியை. |
அசும்பு 1 - தல் | acumpu- 5 v.intr. 1. To flow; ஒழுகுதல். அசும்பு பொன்வரை (சீவக.533). 2. To spread, be diffused; |
அசும்பு 2 | acumpu n. <>அசும்பு- 1.Spring; ஊற்று. (பிங்.) 2. Well; 3. Ooze, exudation; 4. Soft mud; 5. Miry place, mudhole; 6. Minute drop of water; 7. Connection, adherence; 8. Blemish, fault; |
அசுமரி | acumari n. <>ašmarī. (Med.) Calculus; கல்லடைப்பு. (பைஷஜ.) |
அசுமலோஷ்டிரநியாயம் | acumalōṣṭira-niyāyam n. <>ašman+lōsta+. Maxim of the stone and clod, used to denote relative superiority and inferiority as clod is hard compared with cotton but soft compared with stone; ஒனறொடு சீர்தூக்கி ஒன்றற்குச் சிறுமை பெருமை கற்பிக்கும் நெறி. |
அசுமாரோபணம் | acumārōpaṇam n. <>id.+ārōpaṇa. Ceremony of the bridegroom's placing the bride's right foot on the grinding stone; அம்மி மிதிக்கை. (சீவக.2464, உரை.) |
அசுமாற்றம் | acumāṟṟam n. 1. Very slight indication, hint; சாடை. (J.) 2. Suspicion; |
அசுமானகிரி | acumāṉakiri n. <>U. āsmāngīrī. Canopy, tester; மேற்கட்டி. |
அசுயை | acuyai n. <>asūyā. Dial. var. of அசூயை. . |
அசுர் | acur n. <>asura. A class of demons. See அசுரர். அசுரை செற்ற... மாதவன் (திவ்.இயற்.திருவிருத்.67). |
அசுரகிருத்தியம் | acura-kiruttiyam n. <>id.+. Marvellous work, Herculean labour, as of demons; அசுரர் செய்தற்குரிய அருஞ்செயல். |
அசுரகுரு | acura-kuru n. <>id.+. Venus, as preceptor of the Asuras; சுக்கிரன் |
அசுரசந்தி | acura-canti n. <>id.+. Evening twilight; அந்திநேரம். |
அசுரநாள் | acura-nāḷ n. <>id.+. The 19th nakṣatra. See மூலம். (பிங்.) |
அசுரம் | acuram n. <>asura. Acquirement of a bride by the successful performance of some valiant deed enjoined by her father, as the seizing of a wild bull; கொல்லேறு கோடல் முதலிய வீரச்செயல் புரிந்து மகட்கோடல். (தொல்.பொ.93,உரை.) |
அசுர - மணம் | acura-maṇam n. <>id.+. See அசுரம். . |
அசுரமந்திரி | acura-mantiri n. <>id.+. Venus, as minister of the Asuras; சுக்கிரன். (திவா.) |
அசுரர் | acurar n. <>id. A class of demons at war with the gods, prob. dānavas as dist. fr. daityas, one of patineṇ-kaṇam, q.v.; பதினெண் கணத்துள் ஒரு கணம். (திவா.) |
அசுரவைத்தியம் | acura-vaittiyam n. <>id.+. Surgery; இரணவைத்தியம். (W.) |