Word |
English & Tamil Meaning |
---|---|
அசிதாலவனம் | aci-tāla-vaṉam n. <>id.+. Hell in which sword-like palmyra palms form instruments of torture; நரகவிசேக்ஷம். (சிவதரு சுவர்க்க. 145.) |
அசிதை | acitai n. <>asitā. (Saiva.) 1. A form of Parā-sakti, one of four; பராசத்திபேதம். (சைவச. பொது. 74, உரை.) 2. Indian indigo, See அவுரி. |
அசிந்திதன் | acintitaṉ n. <>a-cintita. One who is inconceivable or incomprehensible; மனத்துக்கெட்டாதவன். (சி.போ.சிற். 12,3,1.) |
அசிந்தியம் | acintiyam n. <>a-cintya. 1. That which is inconceivable; சிந்தைக்கெட்டாதது. 2. The number 1000 quadrillions; |
அசிபத்திரகம் | acipattirakam n. <>asipatraka. Sugar-cane. See கரும்பு. (மலை.) |
அசிபத்திரம் | acipattiram n. <>Asi-patra. Hell where trees have leaves as sharp as swords; நரகவிசேக்ஷம். அசிபத்திரமெனும்...நரகிடை (குற்றா தல. கவுற்சன. 67). |
அசிபத்திரவனம் | acipattira-vaṉam n. <>id.+. See அசிபத்திரம். (சேதுபு.தனுக். 3.) |
அசிர் - த்தல் | acir- 11. v.tr. <>அயிர்-. To doubt; சந்தேகித்தல். தாய்வழியை நினைத்து அசிர்த்தாரிறே (ஏடு,6,7,1). |
அசிரி | aciri n. <>a-šri. Dirty fellow; ஆபாசமானவன். Loc. |
அசினம் | aciṉam n. <>ajina. Hairy skin of an animal, esp. black buckskin, used as a seat or covering and for other purposes; விலங்குகளின் தோல். நன்னூ லுடன்பூ ணசினத்தை (பாரத.நச்சுப்.17.) |
அசீதளம் | a-cītaḷam n. <>a-šītala. Camphor; கர்ப்பூரம். துல்லிய மசீதளம் பூலாங் கிழங்கசை (தைலவ.தைல.6.) |
அசீதி 1 | acīti n. <>ašīti. Eighty; எண்பது. அதற்கு நீள மசீதியு மைந்துமால் (சிவதரு.கோபுர.86). |
அசீதி 2 | acīti n. <>ṣad-ašīti. Beginning of the 3rd, 6th, 9th and 12th solar months, considered sacred; ஆனி புரட்டாசி மார்கழி பங்குனி மாதங்களின் பிறப்பு. (சைவச.பொது.15.) |
அசீர்த்தி | acīrtti n. <>a-jīrti. Indigestion; அசீரணம், அக்கினிதேவற் கசீர்த்தியென்று (ஒழிவி. கிரியைக்.3). |
அசீரணசுரம் | a-cīraṇa-curam n. <>ajīrṇa+jvara. Fever caused by indigestion. . |
அசீரணபேதி | acīraṇapēti n. <>id.+. Diarrhoea from indigestion undigested discharges. . |
அசீரணம் | a-cīraṇam n. <>a-jīrṇa. 1. Indigestion; செரியாமை. 2. That which is unimpaired; |
அசீரணவாயு | a-cīraṇa-vāyu n. <>id.+. Flatulence from indigestion. . |
அசீரியம் | acīriyam n. <>a-jīrya. That which is indestructible; அழியாதது. அக்கிராகிய மசீரியம் (சூத.எக்கிய.பிரம.10,13). |
அசீவம் | acīvam n. <>a-jīva. (Jaina.) Things inanimate, opp. to சீவம், one of navapatārttam, q.v.; நவபதார்த்தங்களூ ளொன்று. (சீவக. 2814, உரை.) |
அசுக்காட்டு - தல் | acu-k-kāṭṭu- v.tr. <>has+. To ridicule, mock; பரிகசித்தல். (திவ்.திருப்பா. 28,வ்யா.) |
அசுகம் | a-cukam n. <>a-sukha. Illness; அசௌக்கியம். |
அசுகுசு - த்தல் | acukucu- 11 v.intr. 1 To feel disgust; அருவருத்தல். (W.) 2. To suspect; |
அசுகுணி | acukuṇi n. 1. A small insect breeding and feeding on plants; செடிப்பூச்சி வகை. (W.) 2. Kind of eruption, chiefly about the ears; |
அசுகை | acukai n. 1. Dial. var. of அசூயை . 2. Conjectural circumstance; |
அசுசி | acuci n. <>a-šuci. Impurity, uncleanness; அசுத்தம், தேறா ரசுசியென் றகல்வார் (நல்.பாரத.உமாமகே. 58). |
அசுணம் | acuṇam n. A creature believed to be so susceptible to harmony that when it is fascinated by notes of music, a sudden loud beat of the drum causes its instantaneous death; இசையறிவதோர்விலங்கு. (நற்.304.) |
அசுணமா | acuṇa-mā n. See அசுணம். (சீவக. 1402.) |
அசுணன் | acuṇaṉ n. <>lašuna. Garlic. See வெள்வெண்காயம். (மலை.) |
அசுத்ததத்துவம் | a-cutta-tattuvam n. <>a-šuddha+. (Saiva.) Impure categories, one of three classes of tattuvam, q.v., comprising 4 அந்தக்கரணம், 5 ஞானேந்திரியம், 5. கருமேந்திரியம், 5 தன்மாத்திரை, 5 பூதம்; தத்துவவகை. (சிவப். கட்.) |
அசுத்தப்பிரபஞ்சம் | a-cutta-p-pirapacam n. <>id.+. (Saiva.) Impure universe evolved out of a-cutta-māyai and comprising the 30 categories from kalā-tattuvam to pirutivi-tattuvam; கலாதத்துவமுதற் பிருதிவிதத்துவ மீறாகிய தத்துவம். |