Word |
English & Tamil Meaning |
---|---|
இரத்தமூத்திரம் | iratta-mūttiram n. <>id.+. Presence of blood in the urine; haematuria; சிறுநீருடன் இரத்தமொழுகும் நோய். |
இரத்தமூலம் | iratta-mūlam n. <>id.+. Bleeding piles; ஆசனத்திலிருந்து உதிரம் வடியும் மூலநோய். (மூ.அ.) |
இரத்தமேகம் | iratta-mēkam n. <>id.+. See இரத்தவெட்டை. . |
இரத்தவடி | iratta-vaṭi n. <>id.vaṭī. Smallpox; வைசூரி. (மூ.அ.) |
இரத்தவமனம் | iratta-vamaṉam n. <>id.+. Vomiting of blood; haematemesis; இரத்தவாந்தி. |
இரத்தவலிப்பு | iratta-valippu n. <>id.+. Convulsions caused by too great fullness of blood; இரத்தமிகுதியா லுண்டாகும் இசிவுநோய். (மூ.அ.) |
இரத்தவழலை | iratta-vaḻalai n. <>id.+. A snake causing by its bite vomiting of blood, prob. Russell's viper; விஷப்பாம்பு வகை. |
இரத்தவள்ளி | iratta-vaḷḷi n. <>id.+. Purple yam. See செவ்வள்ளி. (W.) |
இரத்தவாதபித்தகுன்மம் | iratta-vāta-pitta-kuṉmam n. <>id.+. Painful menstruation; dysmenorrhea; பெண்களுக்கு வரும் நோய் வகை. |
இரத்தவாந்தி | iratta-vānti n. <>id.+. Vomiting of blood; haematemesis; இரத்தமாக எடுக்குஞ் சத்தி. |
இரத்தவிந்து | iratta-vintu n. <>rakta-bindu. Corundum alumina in a crystalline state; மாணிக்கவகையாகிய குருவிந்தம். (சிலப். 14,186,உரை.) |
இரத்தவிரியன் | iratta-viriyaṉ n. <>id.+. Russell's Viper; Vipera russellii, as causing vomiting of blood by its bite; பாம்புவகை. |
இரத்தவீசம் | iratta-vīcam n. <>id.+bīja. Pomegranate. See மாதுளை. (மலை.) |
இரத்தவெட்டை | iratta-veṭṭai n. <>id.+. Gonorrhoea with discharge of blood; இரத்தங்கலந்து ழத்திரம் வெளிப்படும் நோய்வகை. |
இரத்தவெறி | iratta-veṟi n. <>id.+. Fury arising from drinking blood; இரத்தங்குடித்தனால் உண்டாகும் வெறி. |
இரத்தவோட்டம் | iratta-v-ōṭṭam n. <>id.+. Circulation of blood; இரத்தம் தேகமெங்குஞ் செல்லுகை. |
இரத்தாகம் | irattākam n. <>raktaka. Castor plant. See சிற்றாமணக்கு. (தைலவ. தைல. 93.) |
இரத்தாசயம் | irattācayam n. <>rakta+ā-šaya. Heart; one of pacācayam, q.v.; இருதயம். |
இரத்தாட்சி | irattāṭci n. <>raktākṣa. Name of the 58th year of the Jupiter cycle; ஒரு வருஷம். |
இரத்தாதிசாரம் | irattāticāram n. <>rakta+ati-sāra. Dysentery; சீதபேதிவகை. |
இரத்தாம்பரம் | irattāmparam n. <>id.+ambara. Red clothes; செவ்வாடை. |
இரத்தி | iratti n. 1. Jointed ovate-leaved fig. See இத்தி. (சூடா.) 2. Subserrate rhomboid-leaved fig, m.tr., Ficus gibbosa tuberculata; 3. Jujube tree. See இலந்தை. |
இரத்தினகசிதம் | irattiṉa-kacitam n. <>ratna+khacita. That which is studded with gems; மணியிழைக்கப்பட்டது. |
இரத்தினகம்பளம் | irattiṉa-kampaḷam n. <>id.+. Carpet of variegated colours; சித்திர கம்பளம். (மூ.அ.) |
இரத்தினகம்பளி | irattiṉa-kampaḷi n. <>id.+. See இரத்தினகம்பளம். . |
இரத்தினச்சுருக்கம் | irattiṉa-c-curukkam n. <>id.+. 1. Name of a treatise giving similes drawn from nature suitable to describe the features of the fair sex, and other matters; மகளிர் உறுப்புவமைமுதலிய கூறும் ஒரு நூல். 2. Name of a treatise on medicine; |
இரத்தினசபை | irattiṉa-capai n. <>id.+. Dancing hall of Naṭarāja in the shrine at Tiru-v-ālaṅgāṭu, in the N. Arcot Dist., so called from its being roofed with gems; திருவாலங்காட்டு நடராஜசபை. |
இரத்தினத்திரயம் | irattiṉa-t-tirayam n. <>id.+traya. (Jaina.) The three gems, Right faith, Right knowledge and Right conduct which sum up the beliefs and tenets of the Jaina cult, viz., நன்ஞானம், நற்காட்சி, நல்லொழுக்கம். (சீவக. 374, உரை.) |
இரத்தினதீவம் | irattiṉa-tīvam n. <>id.+ dvīpa. Ancient name of Ceylon; இலங்கை. (மணி. 11,21.) |
இரத்தினப்பிரத்தம் | irattiṉa-p-pirattam n. <>id.+pra-stha. Name of the base of Mt. Kailāsa; கைலாயத்தின் தாழ்வரை. (சி.சி. 1, 52, மறைஞா.) |
இரத்தினப்பிரபை | irattiṉa-p-pirapai n. <>id.+pra-bhā. (Jaina Myth.) A hell strewn fully with sharp stones; one of ezu-narakam, q.v.; எழுநரகத்தொன்று. (சீவக. 2817, உரை.) |