Word |
English & Tamil Meaning |
|---|---|
| வனபத்தியம் | vaṉapattiyam n. <>vānaspatya. See வனபதி. (சங். அக.) . |
| வனபதி | vaṉa-pati n. <>vanas-pati. Tree that bears fruit without apparently flowering; பூவாது காய்க்கும் மரம். (சூடா.) |
| வனபந்தம் | vaṉa-pantam n. <>வனம்1+. Tank; தடாகம். (சங். அக.) |
| வனபலம் | vaṉa-palam n. Elephant pepper. See ஆனைத்திப்பலி. (சங். அக.) |
| வனபிப்பிலி | vaṉa-pippili n. <>vanapippalī. Long pepper. See காட்டுத்திப்பலி. (சங். அக.) |
| வனபோசனம் | vaṉa-pōcaṉam n. <>vana+. 1. Picnic or garden-party; தோட்ட முதலியவற்றில் நடத்தும் விருந்து. 2. A festival in which the uṟcavamūrtti of a temple is treated to a picnic; |
| வனம் 1 | vaṉam n. <>vana. 1. Forest; காடு. (சூடா.) வனமே மேவி . . . எவ்வாறு நடந்தனை (திவ். பேருமாள்தி. 9, 2). 2. Pleasure-grove, grotto about a town; 3. Cremation ground; 4. Water; 5. Waterfall; 6. Abode, residence; 7. Way; 8, Holy basil; 9. Ant-hill; |
| வனம் 2 | vaṉam n. cf. vanas. 1. Beauty; loveliness; அழகு. வனமுலை (கலித். 97). 2. Abundance; |
| வனம் 3 | vaṉam n. <>varṇa. See வன்னம்1. செவ்வனத் திகழ் (பாரத. வேத்திரதீப. 3). . |
| வனமடை - தல் | vaṉam-aṭai- v. intr. <>வனம்1+. To die; மரணமடைதல். Loc. |
| வனமரை | vaṉa-marai n. <>id.+மரை2. A pasture weed. See ஓரிதழ்த்தாமரை. (சங். அக.) |
| வனமல்லிகை | vaṉa-mallikai n. <>vanamallikā. 1. Wild jasmine. See காட்டுமல்லிகை. (மலை.) 2. Eared jasmine. |
| வனமா | vaṉamā n. (மலை.) 1. Ceylon leadwort. See கொடுவேலி. 2. East Indian satin-wood. |
| வனமாலி | vaṉamāli n. <>vana-mālin. 1. Viṣṇu, as wearing the vaṉa-mālai; திருமால். (பிங்.) 2. A prostrate herb. |
| வனமாலை | vaṉa-mālai n. <>vana-mālā. 1. A composite garland of flowers and tender leaves of various colours; பலவகை நிறமுள்ள மலருந் தழையுங் கொண்டு தொடுக்கப்பட்ட மாலை. 2. Garland of basil; |
| வனமுதம் | vaṉa-mutam n. <>vana-mūta. Cloud; மேகம். (யாழ். அக.) |
| வனமுரை | vaṉa-murai n. prob.வனம்1+ முதிரை. East Indian satin-wood. See முதிரை, 3, (சங். அக.) |
| வனமோசை | vaṉa-mōcai n. <>vana-mōcā. Wild plantain. See காட்டுவாழை. (சங். அக.) |
| வனரஞ்சனி | vaṉa-racaṉi n. Human milk; முலைப்பால். (சங். அக.) |
| வனராஜன் | vaṉarājaṉ n. <>vana-rāja. Lion; சிங்கம். (யாழ். அக.) |
| வனருகம் | vaṉarukam n. <>vana-ruha. Lotus; தாமரை. வனருக மடண்டப நாப்பண் (குற்றா. தல. 15, 10). |
| வனலட்சுமி | vaṉa-laṭcumi n. <>vanalakṣmī. Plantain; வாழை. (மூ. அ.) |
| வனவசம் | vaṉa-vacam n. prob. vana+vāsa. Sandalwood; சந்தனமரம். (மலை.) |
| வனவன் | vaṉavaṉ n. <>வனம்1. Forester, hunter, as dwelling in the forest; வேடன். ஒரு வனவன் யாளைகெட (தாயு. சிதம்பர. 28). |
| வனவாசம் | vaṉa-vācam n. <>vana-vāsa. Dwelling or residing in a forest; காட்டில் வாழ்கை. பஞ்சபாண்டவர் வணவாசம். |
| வனவாசனம் | vaṉa-vācaṉam n. <>vanavāsana. Civet cat; புனுகுப்பூணை. (யாழ். அக.) |
| வனவாசி | vaṉa-vāci n. <>vana-vāsin. Dweller in a forest; காட்டுள் வாழ்வோன். (W.) |
| வனவாந்தரம் | vaṉavāntaram n. See வனாந்தரம். (யாழ். அக.) . |
| வனவிலாசனி | vaṉa-vilācaṉi n. prob. vana+vilāsinī. A kind of grass, Andropogon auriculatus; ஒருவகைப் புல் (மூ. அ.) |
| வனாகி | vaṉāki n. <>vanākhu. Hare; முயல். (சங். அக.) |
| வனாந்தரம் | vaṉāntaram n. <>vana+antara. 1. The interior of a forest; காட்டின் உட்பிரதேசம். (W.) 2. Desert; |
