Word |
English & Tamil Meaning |
|---|---|
| வாசனைப்புல் | vācaṉai-p-pul n. <>id.+ புல்1. Citronella grass. See காவட்டம்புல். (பதார்த்த. 377.) |
| வாசனைப்பொடி | vācaṉai-p-poṭi n. <>id.+. 1. Scented powder; கந்தப்பொடி. 2. Scented snuff; |
| வாசனையூட்டு - தல் | vācaṉai-y-ūṭṭu- v. tr. & intr. <>id.+. . See வாசனைகட்டு-. |
| வாசஸ்தலம் | vāca-stalam n. <>vāsa+. . See வாசஸ்தானம். |
| வாசஸ்தானம் | vāca-stāṉam n. <>id.+. House, dwelling, habitation, mansion; இருப்பிடம். |
| வாசாகயிங்கர்யம் | vācā-kayiṅkaryam n. <>vācā instr. sing. of vāc+. 1. Service done by word of mouth; வாயினாற் செய்யக்கூடிய பணி. வாசாகயிங்கரிய மன்றியொரு சாதனம் . . . பழகியறியேன் (தாயு. பரிபூரண. 1). 2. Vain word, not followed by action; |
| வாசாகாரம் | vācākāram n. <>vāsāgāra. Inner apartment; bed-chamber; அந்தப்புரம். (W.) |
| வாசாங்கியம் | vācāṅkiyam n. <>vāsa + prob. aṅgika. Black pepper; மிளகு. (மலை.) |
| வாசாஞானம் | vācā-āṉam n. <>vācā+. 1. Speculative knowledge; அனுபவமின்றி வாயாற் பேசும் ஞானம். (W.) . |
| வாசாடம் | vācāṭam n. <>vācāṭa. . See வாசாலகம். (யாழ். அக.) |
| வாசாதி | vācāti n. cf. vāsādanī Malabarnut See ஆடாதோடை. (மலை.) |
| வாசாப்பு | vācāppu n. Corr. of வாசகப்பா. (W.) |
| வாசாமகோசரம் | vācāmakōcaram n. <>vācām gen. pi. of vāc+a-gōcara. That which is beyond the reach of words; வாக்கிற்கெட்டாதது. நின்னருளாம் வாசாமகோசரந்தான் வாய்க்கும் (தாயு. பராபர. 284). |
| வாசாலகம் | vācālakam n. <>vācāla-ka. Skill in speech; பேச்சு வல்லபம். வாசாலகத்திலுயர்மதியில் (பிரபோத. 11, 94). |
| வாசாலகன் | vācālakaṉ n. <>vācāla-ka. Persuasive speaker; man who is clever in speech; பேச்சுத்திறமையுள்ளோன். |
| வாசாலம் | vācālam n. <>vācāla. . See வாசாலகம். |
| வாசாலன் | vācālaṉ n. <>vācala. . See வாசாலகன். (கொண்டல்விடு. 236.) |
| வாசாலை | vācālai n. <>vācālā. Fem. of வாசாலன். Woman who is clever in speech; பேச்சுத்திறமையுள்ளவள். (யாழ். அக.) |
| வாசி 1 | vāci n. perh. bhāj. [T. K. vāsi.] 1. Difference; வேறுபாடு. ஈசனிலைமைக்கு மேனையிமையோர் நிலைக்கும் வாசியுரை (ஏகாம். உலா, 483). 2. Quality, nature; characteristic; 3. Fitness, propriety; 4. Good, improved condition; 5. Ground, cause; 6. Rate, as of interest; portion; 7. Discount, in changing money; |
| வாசி 2 - த்தல் | vāci- 11 v. tr <>vāc. 1. To read; படித்தல். ஓலையை . . . வாசி யென்றனன் (கம்பரா. எழுச். 3). 2. To learn; 3. To play on a musical instrument; |
| வாசி 3 | vāci n.<>வாசி2-. 1. Musical pipe; இசைக்குழல். (பிங்.) 2. Tune, musical song; |
| வாசி 4 - த்தல் | vāci- 11 v. intr. <>vās. To emit fragrance, smell; மணத்தல். மருவாசிக்குங் குழலைமுடி (தனிப்பா. i, 323, 18). |
| வாசி 5 | vāci n. <>vājin. 1. Horse; குதிரை. (பிங்.) ஏறினானவ் வாசியை (திருவாலவா. 28, 45). 2. The first nakṣatra; 3. Bird; 4. Arrow; 5. Breath; 6. Justice; |
| வாசி 6 | vāci n. <>vāsin. Dweller, inhabitant; வசிப்பவன். காசிவாசி. |
| வாசி 7 | vāci n. <>vācin. Expression; குறியீட்டுச்சொல். சதம் என்பது அநந்தவாசி (தக்கயாகப். 73, உரை). |
| வாசி 8 | vāci n. perh. bhāsin. Ornamental arch over an idol. See திருவாசி, 1. மாணிக்கவாசிமுந்து சிங்காதனம் (திருவாலவா. 37, 75). |
| வாசி 9 | vāci n. <>vāsi. Dwelling place; இருப்பிடம். (யாழ். அக.) |
