Word |
English & Tamil Meaning |
|---|---|
| வாசிக்கல் | vāci-k-kal n. perh. வாசி5+. Black load-stone. See காகச்சிலை. (யாழ். அக.) |
| வாசிக்கோவை | vāci-k-kōvai n. <>id.+. A garland of small bells, round a horse's neck; குதிரைக்கிங்கிணிமாலை. (சூடா.) |
| வாசிககாரகம் | vācika-kārakam n. <>vācika-hāraka. Letter; கடிதம். (யாழ். அக.) |
| வாசிககாரகன் | vācika-kārakaṉ n. <>vācika-hāraka. Messenger; தூதன். (யாழ். அக.) |
| வாசிகதீட்சை | vācika-tīṭcai n. <>vācika+. (šaiva.) . See வாசகதீட்சை. (சைவச. ஆசாரி. 65, உரை.) |
| வாசிகந்தம் | vācikantam n. <>vājī-gandhā. Indian winter cherry. See அமுக்கிரா. (யாழ். அக.) |
| வாசிகபத்திரம் | vācika-pattiram n. <>vācika-pattra. Letter; கடிதம். (யாழ். அக.) |
| வாசிகம் | vācikam n. <>vācika. 1. That which is performed by the faculty of speech; வாக்காற் செய்யப்படுவது. மானதமே வாசிகமே காயிகமேயென . . . தவமூன்றாம் (திருவிளை. எழுகட. 6). 2. Word of mouth; message; 3. News; |
| வாசிகரணம் | vācikaraṇam n. vājī-karaṇa. 1. Developing virility; வீரியத்தை விருத்திபண்ணுகை. 2. Genuine love; ardent passion; |
| வாசிகன் | vācikaṉ n. <>vācika. Messenger; தூதன் |
| வாசிகாண்(ணு) - தல் | vāci-kāṇ- v. intr. <>வாசி+. 1. To be in excess; to yield more than the estimated quantity; மதிப்புக்கு மேலாக அளவு காணுதல். 2. To show improvement, as in health; |
| வாசிகை 1 | vācikai n. prob. vāsa. 1. Wreath, as of flowers, pearls, etc., worn on the head; சிகைமாலை. (பிங்.) 2. Garland; 3. Garland of flowers strung thickly together; |
| வாசிகை 2 | vācikai n. prob. vas. Residential quarters of vaišyas; வைசியர் வசிக்குஞ் சேரி. (பிங்.) |
| வாசிகை 3 | vācikai n. prob. bhāsakā. Ornamental arch over an idol. See திருவாசி, 1. |
| வாசிட்டம் | vāciṭṭam n. <>Vāsiṣṭha. 1. A Sanskrit text-book on Hindu law ascribed to Vasiṣṭha, one of 18 taruma-nūl, q.v.; தருமநூல் பதினெட்டனுள் ஒன்று. (பிங்.) 2. A Tamil translation of yōga-vāsiṣṭha. |
| வாசிட்டலைங்கம் | vācīṭṭalaiṅkam n. <>Vāšiṣṭha-laiṅga. A secondary Purāṇa, one of 18 upa-purāṇam, q.v.; உபபுராணம் பதினெட்டனுள் ஒன்று. (பிங்.) வாசிட்டலைங்கத் தேதமின்றிய சிலதெரிந்து (திருக்காளத். பு. நூல்வர. 2). |
| வாசிதம் 1 | vācitam n. <>vašita. Cry of birds, beasts, etc., புள் முதலியவற்றின் குரல். (யாழ். அக.) |
| வாசிதம் 2 | vācitam n. <>vāsita. (யாழ். அக.) 1. Knowledge; அறிவு. 2. Settling, peopling; |
| வாசிப்பு | vācippu n. <>வாசி2 -. 1. Learning, knowledge; கல்வி யறிவு. அவனுக்கு நல்ல வாசிப்புண்டு. 2. Reading; 3. (Nāṭya.) A kind of movement of the legs in tēci dance; |
| வாசிமேதம் | vācimētam n. <>vāji-mēdha. Horse sacrifice. See அசுவமேதம். வாசிமேத முதல மகங்களால் (சேதுபு. சேதுசரு. 64). |
| வாசியாதாஸ்து | vāci-yātāstu n. <>வாசி1+. Memorandum of the produce at a harvest; கண்டுமுதற்குறிப்பு. (W.) |
| வாசிரம் | vāciram n. <>vāšra. (யாழ். அக.) 1. Junction where four streets meet; நாற்சந்தி. 2. House; 3. Day; |
| வாசிராயனீயம் | vācirāyaṉīyam n. An Upaniṣad; ஒருபநிடதம். (W.) |
| வாசிரி | vāciri n. 1. Wilfulness; அகங்காரம். Tinn. 2. Respect; |
| வாசிவாரியன் | vāci-vāriyaṉ n. <>வாசி5+. One skilled in training horses; குதிரையைப் பழக்குவதில் வல்லவன். வாசிவாரியன் ஜந்து கதியையும் பதினெட்டுச்சாரியையும் பயிற்றுகையினாலே (மதுரைக். 389, உரை). |
| வாசினி 1 | vāciṉi n. <>vācinī. Mare; பெண் குதிரை. (யாழ். அக.) |
| வாசினி 2 | vāciṉi n. <>vācinī. Female resident; குடியிருப்பவள். மயானவாசினி (தக்கயாகப். 54, உரை). |
| வாசினை | vāciṉai n. <>வாசி2-. [K. bājane.] 1. Reading; படிக்கை. வாசகன் மற்றது வாசினை செய்தபின் (சூளா. சீய. 90). 2. Playing on a musical instrument; |
