Word |
English & Tamil Meaning |
|---|---|
| வாடல் | vāṭal n. <>வாடு-. 1. Withering; drying; becoming lean; fading; வாடுகை. 2. That which is faded, dried or withered; that which is stale or not fresh, as vegetables; 3. Faded flower; |
| வாடன்சம்பா. | vāṭaṉ-campā n. perh. vāṭa + சம்பா 1. An inferior kind of paddy; மட்ட நெல்வகை. |
| வாடாக்கடமை | vāṭā-k-kaṭamai n. <>வாடு- +ஆ neg.+. Permanently fixed tax; திட்டமான வரி. இவ்வாண்டுமுதல் வாடாக்கடமையாக நிறுத்துவித்து (S. I. I. V. 120). |
| வாடாக்குறிஞ்சி | vāṭā-k-kuṟici n. <>id.+ id.+. A plant whose flowers do not lose colour in withering; உலரும் நிலையினும் தன் இயற்கைநிறம் மாறாத பூவகை. (பிங்.) |
| வாடாக்கொடி | vāṭā-k-koṭi n. perh. id.+ id.+. Willow-leaved justicia. See கருநொச்சி, 1. |
| வாடாத்தாமரை | vāṭā-t-tāmarai n. <>id.+ id.+. Lotus-shaped ornament of gold, presented to bards by ancient kings; பண்டைக்காலவரசர் பாணர் அளிக்கும் பொற்றாமரைப்பூ. வாடாத்தாமரை சூட்டுவ னினக்கே (புறநா. 319). |
| வாடாமல்லி | vāṭā-malli n. <>id.+ id.+ மலலி 1. See வாடாமல்லிகை. Loc. . |
| வாடாமல்லிகை | vāṭā-mallikai n. <>id.+ id.+. Bachelor's buttons, Gomphrena globosa; பூச்செடிவகை. (W.) |
| வாடாமாலை | vāṭā-mālai n. <>id.+ id.+ மாலை 3. 1. Gold necklace, as not fading like the garland of flowers; [பூமாலை போன்று வாடாதது] பொன்னரி மாலை. வாடாமாலை பாடினி யணிய (புறநா. 364). 2. Garland made of rags, pith, etc.; |
| வாடாவஞ்சி | vāṭā-vaci n. <>id.+id.+வஞ்சி3. Karūr. See கருவூர், வாடாவஞ்சி வாட்டு நின் . . . நோன்றாள். (புறநா. 39). |
| வாடாவள்ளி | vāṭā-vaḷḷi n. <>id.+id.+. 1. A kind of dance; ஒருவகைக் கூத்து. வாடாவள்ளியின் வளம்பல தரூஉ நாடுபல (பெரும்பாண். 370). 2. Painting, picture; |
| வாடாவூட்டு | vāṭā-v-ūṭṭu n. <>id.+id.+. See வாடாக்கடமை. (Insc. Pudu. 287.) . |
| வாடி 1 | vāṭi n. <>id. A sensitive plant. See தொட்டால்வாடி, 1. (மூ.அ.) |
| வாடி 2 | vāṭi n. <>vāṭī. 1. Garden; தோட்டம். (W.) 2. Wall; 3. Courtyard; 4. House; 5. Fish-curing yard; 6. Village, hamlet; 7. Resthouse; 8. Hut of bamboo and grass; of kāṇi-k-kārar; 9. Enlosure, fenced place; 10. Yard, shed where firewood is stored for sale; |
| வாடிக்கை | vāṭikkai n. [T. vāduka, K.vādikē.] 1. Habit; வழக்கம். வேதங்களைக் கிளி வாடிக்கையாற் கற்று (இராமநா. அயோத். 22). 2. Custom, as in dealing; 3. Usage; 4. See வாடிக்கைக்காரன். |
| வாடிக்கைக்காரன் | vāṭikkai-k-kāraṉ n. <>வாடிக்கை + காரன் 1. 1. Customer; வழக்கமாக ஓரிடத்துப் பற்றுவரவு செய்வோன். 2. Customary supplier of goods; |
| வாடிகம் | vāṭikam n. A prostrate herb . See பிரமி 2. (நாமதீப.340.) |
| வாடிகை | vāṭikai n. <>vāṭikā. (யாழ். அக.) 1. See வாடகை 2,2,3,4.2. . 2.Resting place; |
| வாடிவாசல் | vāṭi-vācal n. <>வாடி 2+. Entrance hall of a palace or mansion; ஆசாரவாசல். Loc. |
| வாடிவேலி | vāṭi-vēli n. <>id.+. The boundary line of a village; கிராமத்தின் எல்லைக்குறி. Coim. |
| வாடு - தல் | vāṭu- 5 v. intr. [T. vādu, K. bādu, M. vāduga.] 1. To wither, fade, dry up; உலர்தல். பொதியொடு பீள்வாட (நாலடி,269). 2. To be emaciated; to become weak; 3. To pine away, grieve; 4. To turn pale; 5. To be defeated; 6. To perish; 7. To be removed; 8. To diminish, decrease; 9. To fall short in weight; |
| வாடு | vāṭu n. <>வாடு-. Faded flower; வாடற் பூ. ஈங்கைவா டுதிர்புக (கலித். 31). |
