Word |
English & Tamil Meaning |
|---|---|
| வாணி 3 | vāṇi, n. prob. yavānī. Bishop's weed. See ஓமம்1. (மலை.) |
| வாணி 4 | vāṇi, n. <>pāṇi. Water; நீர். (W.) |
| வாணி 5 | vāṇi, n. (சங். அக.) 1. Rock-salt; இந்துப்பு. 2. Realgar. |
| வாணிகச்சாத்து | vāṇika-c-cāttu, n. <>வாணிகம்+சாத்து3. Caravan of traders; வாணிகர் திரள். வாணிகச்சாத்தோடு போந்து தனிமையால் யான் துயருழந்தேன். (சிலப். 11, 190, உரை) |
| வாணிகச்சி | vāṇikacci, n. Fem of வாணிகன். Woman of the trading caste; வைசிய சாதிப்பெண். |
| வாணிகம் | vāṇikam, n. <>vāṇijya. 1. Trade; வியாபாரம். வாணிகஞ்செய்வார்க்கு வாணிகம் (குறள், 120). 2. Gain, profit; |
| வாணிகவென்றி | vāṇika-veṉri, n. <>வாணிகம்+. (Puṟap.) Theme describing the selfless benefactions of merchant who has risen to prominence by his success in business; வாணிகத்தாற் சிறப்பெய்திய வணிகன் தனது பொருளிற் பற்றிலனாய்ப் பிறர் மிடியை நீக்கும் பெருந்தன்மையை எடுத்துக்கூறும் புறத்துறை (பு.வெ, 12, ஒழிபு, 2.) |
| வாணிகன் | vāṇikaṉ, n. <>id.cf. pāṇika. 1. Merchant, trader; வியாபாரி. அறவிலைவாணிகன் (புறநா.134). 2. Man of the trading caste; 3. Scales, balance; 4. Libra of the zodiac; |
| வாணிகேள்வன் | vāṇi-kēḷvaṉ, n. <>வாணி1 +. Brahmā; பிரமன். (சூடா.) |
| வாணிச்சி | vāṇicci, n. 1. See வாணிகச்சி. மதுரையிற் பிட்டுவாணிச்சி மகற்கு (தொல். பொ. 84, உரை). (நன். 144, மயிலை.) 2. See வாணியச்சி. |
| வாணிச்சிமேனி | vāṇicci-mēṉi, n. perh. வாணிச்சி +. Ruby; மாணிக்கம். (யாழ். அக.) |
| வாணிச்சியம் | vāṇicciyam, n. <>vāṇijya. Trade; வியாபாரம். (W.) |
| வாணிதம் | vāṇitam, n. cf. phāṇita. Toddy; கள். (பிங்.) |
| வாணிதி | vāṇiti, n. See வாணினி, 1, 2. (யாழ். அக.) . |
| வாணிபம் | vāṇipam, n. 1. See வாணிகம், 1. (W.) . 2. See வாணிகம், 2. |
| வாணிபன் | vāṇipaṉ, n. See வாணிகன், 1. (W.) . |
| வாணிமலர் | vāṇi-malar, n. <>வாணி1 +. White lotus; வெண்டாமரை. (மூ. அ.) |
| வாணிமன் | vāṇi-maṉ, n. <>id. + மன்2. See வாணிகேள்வன். பாணியாற் படைத்திலன் வாணிமன் (பாகவத.1, கண்ணபிரான். துவரை. 25). |
| வாணியச்சி | vāṇiyacci, n. Fem. of வாணியன். Woman of the oil-monger caste; செக்கார் சாதிப்பெண். |
| வாணியநகரத்தான் | vāṇiya-nakarattāṉ, n. <>வாணியன்+. See வாணியன். (I. M. P. Sm. 25.) . |
| வாணியம் | vāṇiyam, n. <>vāṇijya. 1. See வாணிகம், 1. (W.) . 2. See வாணிகம், 2. சிறுகாலை நாமுறுவாணியம் (தேவா. 259, 3). |
| வாணியன் | vāṇiyaṉ, n. <>வாணிகன். 1. See வாணிகன், 1. . 2. Oil-monger; |
| வாணியன் தாதன் | vāṇiyaṉ-tātaṉ, n. <>வாணியன் +. A poet said to be of oil-monger caste and a contemporary critic of Kampar; கம்பர்காலத்தில் அவர்க்கு எதிரியாயிருந்தவராகவும் செக்கார்குலத்தவராகவும் சொல்லப்படும் ஒரு புலவர் (தமிழ்நா. 83.) |
| வாணியன்பொருவா | vāṇiyaṉ-poruvā, n. 1. Anchovy, silvery, shot with gold and purple,Engraulis malabaricus; வெண்மையில் பொன்னிரேகையும் ஊதாரேகையுமுள்ள கடல்மீன் வகை. 2. Anchovy, bronze, Engraulis hamiltonii; |
| வாணிலை | vāṇilai, n. <>வாள்1+நிலை. (Puṟap.) Theme of sending in advance at an auspicious moment the sword of a king who intends to advance against his enemies; பகை மேற் படையெடுத்தலை விரும்பி வேந்தன் வாளைப் புறவீடுவிடுவதைக் கூறும் புறத்துறை (பு. வெ. 3, 4.) |
| வாணினி | vāṇini, n. <>vāṇinī. 1. Dancing woman; நாடகக்கணிகை. (W.) 2. Immodest woman; 3. Clever woman; |
| வாணீசன் | vāṇīcaṉ, n. <>Vāṇīšā. Brahmā; பிரமன். (யாழ். அக.) |
| வாணுதல் | vāṇutal, n. <>வாள்1+நுதல். 1. Bright forehead; ஒளிபொருந்திய நெற்றி. வாணுதல் விறலி (புறநா. 89). 2. Woman with a bright forehead; |
| வாத்தாட்டுப்பலகை | vāttāṭṭu-p-palakai, n. <>வாத்தாடு+. Eave-board. See வாய்த்தட்டுப்பலகை. |
