Word |
English & Tamil Meaning |
|---|---|
| வாய்க்காரன் | vāy-k-kāraṉ, n. <>id.+காரன்1. 1. Clever speaker; talkative man; பேச்சில் வல்லவன். Loc. 2. Man who is arrowgant in speech; 3. Man given to scandal-mongering; 4. A sub-division of Paḷḷa caste; |
| வாய்க்காரி | vāykkāri, n. Fem. of வாய்க்காரன். 1. Clever speaker; talkative woman; பேச்சில் வல்லவள். Loc. 2. Woman who is arrogant in speech; 3. Woman given to scandal-mongering; |
| வாய்க்கால் | vāy-k-kāl, n. <>வாய்+கால்1. 1. Water-course, channel, canal; கால்வாய். செய்விளைக்கும் வாய்க்கா லனையார் தொடர்பு (நாலடி, 218). 2. The 10th nakṣatra. |
| வாய்க்காலுக்குப்போ - தல் | vāykkāluk-ku-p-pō-, v. intr. <>வாய்க்கால்+. Lit., to go to a channel. [வாய்க்காற் பக்கத்திற்குப் போதல்] To go to stool; |
| வாய்க்கிரந்தி | vāy-k-kiranti, n. <>வாய்+கிரந்தி1. Thrush, a disease, Apthae; வாய்ப்புண். (கடம்ப. பு. இல¦லா. 124.) |
| வாய்க்கிலைகெட்டவன் | vāykkilai-keṭṭa-vaṉ, n. <>id.+இலை+. 1. Very poor man, as being too poor to buy betel-leaf; பெருந்தரித்திரன். 2. Useless Person; |
| வாய்க்கிறுது | vāy-k-kiṟutu, n. <>id.+. 1. Arrogant speech; செருக்கான பேச்சு. அவன் வாய்க்கிறுது பேசுகிறான். 2. Unsuitable, inappropriate work; |
| வாய்க்குட்டு | vāy-k-kuṭṭu, n. <>id.+குட்டு3. See வாய்ச்சாலகம். . |
| வாய்க்குட்பேசு - தல் | vāykkuṭ-pēcu-, v. tr. & intr. <>id.+பேசு-. To mumble, mutter; முணுமுணுத்தல். |
| வாய்க்குருவி | vāy-k-kuruvi, n. <>id.+. Toy-whistle; விளையாட்டு ஊதுகுழல். Loc. |
| வாய்க்குவழங்காமை | vāykku-vaḻaṅ-kāmai, n. <>id.+வழங்கு-+ஆ neg. 1. Un-palatability; சுவையற்றதாகை. (W.) 2. Being unspeakably vulgar; |
| வாய்க்குற்றம் | vāy-k-kuṟṟam, n. <>id.+. 1. Slip of the tongue, lapsus linguae; தன்னையறியாமற் பேச்சில் நேரும் பிழை. (W.) 2. Error in speech; |
| வாய்க்கூடு | vāy-k-kūṭu, n. id.+. Small basket or other contrivance for muzzling an animal; விலங்கின் வாயின்மேலிடுங் கூடு. Tinn. |
| வாய்க்கூடை | vāy-k-kūṭai, n. <>id.+ கூடை1. See வாய்க்கூடு. (W.) . |
| வாய்க்கூலி | vāy-k-kūli, n. <>id.+. Bribe, hush-money; இலஞ்சம். (W.) |
| வாய்க்கேள்வி | vāy-k-kēḷvi, n. <>id.+. 1. Royal command, proclamation; அரசனின் கட்டளை. நிவந்தஞ்செய்த நம் வாய்க்கேள்விப்படி (S. I. I. ii, 306). 2. Hearsay; |
| வாய்க்கேள்வியர் | vāykkēḷviyar, n. <>வாய்க்கேள்வி. Those who execute royal commands; இராசகட்டளைகளை நிறைவேற்றுவோர். மணிக்கையை வாங்கென்று வாய்க்கேள்வியர்க்கு வருதி செய்தான் (தனிப்பா.). |
| வாய்க்கொழுப்பு | vāy-k-koḻuppu, n. <>வாய்+. Arrogance in speech, insolence in language; மதியாது பேசுகை. |
| வாய்க்கொள்ளாதபேச்சு | vāy-k-koḷḷāta-pēccu, n. <>id.+கொள்-+ஆ neg.+. Unspeakably vulgar talk; அசப்பியப் பேச்சு. (யாழ். அக.) |
| வாய்க்கோணல் | vāy-k-kōṇal,. n. <>id.+. A disease; நோய்வகை. (கடம்ப. பு. இல¦லா. 139.) |
| வாய்க்கோமாரி | vāy-k-kōmāri, n. <>id.+. A mouth-disease, in cattle; மாட்டுக்கு வாயில் வரும் நோய்வகை. (M. L.) |
| வாய்கட்டு - தல் | vāy-kaṭṭu-, v. <>id.+. tr. 1. To Silence; பேசாதிருக்கச் செய்தல். 2. To charm, as a snake or beast, so as to prevent its opening its mouth; 1. See வாயைக்கட்டு-, 1, 2. 2. To cover one's mouth with cloth, as a mark of respect; 3. To bind the mouth and chin of a corpse with a piece of cloth; |
| வாய்கரை | vāy-karai, n. <>id.+. Ghat, ford, landing place; இறங்கு துறை. நீஞ்சப் புக்கு வாய்கரையிலே தெப்பமிழப்பாரைப்போலே (திவ். திருக்குறுந். 10, வ்யா.). |
| வாய்கரையர் | vāy-karaiyar, n. <>id.+. Men with superficial knowledge; ஆழ்ந்தறிய மாட்டாது மேலெழுந்த ஞானமுள்ளவர்கள். ஈஸ்வர னரியனென்று ஜகத்தை வழியடித்துண்கிற வாய்கரை யரைப்போலன்றி (திவ். இயற். 2, 60. அப்பிள்ளாருரை). |
