Word |
English & Tamil Meaning |
|---|---|
| வாய்கன - த்தல் | vāy-kaṉa- v. intr. <>id.+. To articulate indistinctly, as when speaking with the mouth full of food; தெளிவின்றிப் பேசுதல். (J.) |
| வாய்காட்டு - தல் | vāy-kāṭṭu- v. intr. <>id.+. 1. To wag one's tongue; அதிகப்பிரசங்கமாய்ப் பேசுதல். (யாழ். அக.) 2. To cringe; |
| வாய்குமட்டல் | vāy-kumaṭṭal n. <>id.+. Nausea; வாந்தியெடுக்க வருகை. (M. L.) |
| வாய்குளிரப்பேசு - தல் | vāy-kuḷira-p-pēcu- v. intr. <>id.+குளிர்-+. To be honey-tongued; மேலுக்கு இனிமையாகப் பேசுதல். Loc. |
| வாய்குளிறு - தல் | vāy-kuḷiṟu- v. intr. <>id.+ (W.) 1. To bawl out; சத்தமிடுதல். 2. To cry out in sleep, as from fear; |
| வாய்கூப்பு - தல் | vāy-kūppu- v. tr. <>id.+. To praise; துதித்தல். மருதிடத்தா னென்றொருகால் வாய்கூப்ப (பதினொ. திருவிடை. மும்மணி. 29). |
| வாய்கூம்பு - தல் | vāy-kūmpu- v. intr. <>id.+. To close, as petals of a flower; குவிதல். ஆம்பல்வாய் கூம்பினகாண் (திவ். திருப்பா. 14). |
| வாய்கொடு - த்தல் | vāy-koṭu- v. intr. <>id.+. 1. To give word, promise; வாக்குத்தத்தஞ் செய்தல். 2. To engage one in talk; 3. To kindle of quarrel; to bandy words; |
| வாய்ச்சப்பை | vāy-c-cappai n. <>id.+ சப்பை1. 1. Foot-and-mouth disease. See காற்சப்பை, 1. (Cm. M. 247). 2. One who is not clever in speaking; |
| வாய்ச்சம்பிரதாயம் | vāy-c-campiratāyam n. <>id.+. 1. Cleverness in talking; பேச்சு சாமர்த்தியம். (யாழ். அக.) 2. Oral tradition; |
| வாய்ச்சாக்கூட்டம் | vāyccā-k-kūṭṭam n. prob. id. Tooth; பல். (யாழ். அக.) |
| வாய்ச்சாலக்கு | vāy-c-cālakku n. <>id.+. See வாய்ச்சாலகம். . |
| வாய்ச்சாலகம் | vāyccālakam n. <>vācālaka. Skill in speech, eloquence, fluency in speech; சொல்வன்மை. (W.) |
| வாய்ச்சான்பிழைச்சான் | vāyccāṉ-piḻaiccāṉ n. <>வாய்2-+ பிழை-. Precarious affair; matter of neck or nothing; நிச்சயமற்றது. |
| வாய்ச்சி | vāycci n. <>vāsī. 1. Adze; மரத்தைச் செதுக்கும் ஆயதம். வாய்ச்சி வாயுறுத்தி மாந்தர் மயிர்தொறுஞ் செத்தினாலும் (சீவக. 2825). 2. Instrument for cutting the surface of bricks; |
| வாய்ச்சித்தலை | vāycci-t-talai n.<>வாய்ச்சி +தலை1. Flattened head; தட்டையான தலை. (யாழ். அக.) |
| வாய்ச்சுத்தம் | vāy-c-cuttam n.<>வாய் + சுத்தம்1. Truthfulness; பொய்சொல்லாமை. |
| வாய்ச்சொல் | vāy-c-col n. <>id.+ சொல்3. 1. Utterance, speech, word of mouth; வாயினின்று வருஞ் சொல். வாய்ச்சொற்க ளென்ன பயனுமில (குறள், 1100). 2. See வாய்ப்பேச்சு. 2. வாய்ச்சொல்லில் வீரரடீ (பாரதி. தேசீய. நடிப்பு. 1). 3. Utterance of an invisible speaker, considered as an omen. |
| வாய்ச்சொலவு | vāy-c-colavu n. <>id.+. (W.) 1. Prediction, augury; ஆருடஞ்சொல்லுகை. 2. Ominous utterance; |
| வாய்சலி - த்தல் | vāy-cali- v. intr. <>id.+. To be tired of speaking; பேசி வாயயர்தல். அவன் நெடுநேரம் பேசி வாய்சலித்தான். (W.) |
| வாய்சவக்களி - த்தல் | vāy-cavakkaḷi- v. intr. <>id.+. 1. To be insipid; ருசியின்றி யிருத்தல். 2. To be distasteful; |
| வாய்சளப்பு - தல் | vāy-caḷappu- v. intr. <>id.+. To chatter; to indulge in idle talk; வீண்பேச்சுப் பேசுதல். (யாழ். அக.) |
| வாய்சளி - த்தல் | vāy-caḷi- v. intr. <>id.+. See வாய்சவக்களி-. (யாழ். அக.) . |
| வாய்சோர் - தல் | vāy-cōr- v. intr. <>id.+. 1. To talk incoherently, as in delirium; வாய்பிதற்றுதல். வாய்சோர்ந் தரற்றா (பெருங். வத்தவ. 7, 25). 2. See வாய்தடுமாறு-, 2. (பெரியபு. ) 3. See வாய்சலி-. Loc. |
| வாய்த்தட்டுப்பலகை | vāy-t-taṭṭu-p-palakai n. <>id.+தட்டு2+. Eave-board, bargeboard; கூரையின் முகப்பில் தைக்கும் பலகை. Loc. |
| வாய்த்தல் | vāyttal n. See வாய்தல்1. (அரு. நி.) . |
| வாய்த்தலை | vāy-t-talai n. <>வாய்+தலை1. 1. Head-sluice of a channel; வாய்க்காலின் தலைப்பு மதகு. சுலைசெய் வாய்த்தலை (சீவக. 40). 2. Source; |
