Word |
English & Tamil Meaning |
|---|---|
| வாய்ப்பந்தல் | vāy-p-pantal n. <>id.+. Empty, ostentatious word; bombast; ஆடம்பர வார்த்தை. அந்திவண்ணன் ரென்றும் . . . வாய்ப்பந்த லிடுவதன்றி (அருட்பா, vi, தத்துவ. 10). |
| வாய்ப்பலி | vāy-p-pali n. <>id.+பலி3. See வாய்க்கரிசி. (தக்கயாகப். 53, உரை.) . |
| வாய்ப்பறையறை - தல் | vāy-p-paṟai-y-aṟai- v. tr. <>id.+. To proclaim, as by beat of drum or tomtom; பலருமறிய வெளியிடுதல். வடுவுரை யாவர்பேர்ப்பார் வாய்ப்பறையறைந்து தூற்றி (சீவக. 211). |
| வாய்ப்பன் | vāyppaṉ n. prob. வாய்2-. A kind of cake; ஒருவகைப் பணிகாரம். (J.) |
| வாய்ப்பன்சட்டி | vāyppaṉ-caṭṭi n. <>வாய்ப்பன்+சட்டி1. A kind of earthen vessel with a rim; விளிம்புள்ள பானைவகை. (J.) |
| வாய்ப்பாட்டு | vāy-p-pāṭṭu n. <>வாய்+பாட்டு1. Vocal music; வாயாற்பாடும் பாட்டு. |
| வாய்ப்பாடம் | vāy-p-pāṭam n. <>id.+பாடம்2. 1. Lesson learnt by heart; பாராமற் சொல்லும்படி நெட்டுருப்பண்ணிய பாடம். 2. Lesson taught orally; |
| வாய்ப்பாடு | vāy-p-pāṭu n. <>id.+. 1. See வாய்பாடு, 1, 2. Mod. . 2. Anything to gratify the palate; |
| வாய்ப்பானை | vāy-p-pāṉai n. <>id.+. Babbler; அலப்புவோன். (W.) |
| வாய்ப்பிணி | vāy-p-piṇi n. <>id.+. Mouth disease; வாயிலுண்டாம் நோய். வாய்ப்பிணியர். (கடம்ப. பு. இல¦லா. 130). |
| வாய்ப்பியம் | vāyppiyam n. A treatise on Tamil grammar, now not extant, by Vāyppiyaṉ; வாய்ப்பியன் தெய்த ஒரு தமிழிலக்கண நூல். (யாப். வி. பக் 536.) |
| வாய்ப்பிரசங்கம் | vāy-p-piracaṅkam n. <>வாய்+. 1. Insincere, lip-deep talk; உட்கருத்தின்றி வாயினால்மாத்திரஞ் செய்யும் பிரசங்கம். (யாழ். அக.) 2. Extempore speech; 3. Oratory; |
| வாய்ப்பிறப்பு | vāy-p-piṟappu n. <>id.+. Word of mouth; saying; declaration; வாயிலிருந்து வருஞ் சொல். அவன் வாய்ப்பிறப்பைக் கேள். |
| வாய்ப்பு | vāyppu n. <>வாய்2-. 1. Favourability; favourable circumstance; அனுகூல நிலைமை. (ஈடு, 1, 9, ப்ர.) 2. Good chance or opportunity; 3. That which is appropriately formed or situated; 4. Fitness; suitability; 5. Beauty; 6. Surpassing excellence; 7. Wealth; 8. Fertility; 9. Profit, gain; 10. Fortune; |
| வாய்ப்புட்டில் | vāy-p-puṭṭil n. <>வாய்+புட்டில்1. see வாய்க்கூடு. (W.) . |
| வாய்ப்புண் | vāy-puṇ n. <>id.+. 1. Ulcer in the mouth, Stomatitis; உள்வாயில் தோன்றும் புண். 2. Inflammation of the tongue, Glossitis; 3. Wound caused by harsh words; |
| வாய்ப்புள் | vāy-p-puḷ n. <>id.+. Chance-heard word, considered a good omen; நற்சொல்லாகிய நிமித்தம். நல்லோர் வாய்ப்புள் (முல்லைப். 18). |
| வாய்ப்புற்று | vāy-p-puṟṟu n. <>id.+புற்று1. A disease of the mouth; வாயிலுண்டாம் நோய் வகை. புழுச்செறி வாய்ப்புற்றுநோயர் (கடம்ப. பு. இல¦லா. 137). |
| வாய்ப்புறம் | vāy-p-puṟam n. <>id.+. Lip; உதடு. வாய்ப்புறம் வெளுத்து (திவ். நாய்ச். 1, 8). |
| வாய்ப்பூச்சு | vāy-p-pūccu n. <>id.+. 1. Cleansing or rinsing one's mouth with water; வாயை நீரால் துடைக்கை. 2. Ceremonial sipping of water. 3. Glossing over or varnishing with words; |
| வாய்ப்பூட்டு | vāy-p-pūṭṭu n. <>id.+. 1. Joint of the jaw bones; தாடையெலும்பின் பொருத்து. 2. See வாய்க்கூடு. Loc. 3. Prohibition from speaking; 4. A defect of cattle, consisting of two curls on the lower jaw; 5. Bribe; 6. Pin pierced through the out-stretched tongue or run across the mouth from cheek to cheek of a person who is under a vow of silence; |
