Word |
English & Tamil Meaning |
|---|---|
| வாய்ப்பூட்டுக்காசு | vāyppūṭṭu-k-kācu n. <>வாய்ப்பூட்டு+காசு3. See வாய்முட்டுக்காசு. . |
| வாய்ப்பூட்டுச்சட்டம் | vāyppūṭṭu-c-caṭṭam n. <>வாய்ப்பூட்டு+. Law restraining or prohibiting public speech; பொதுக்கூட்டங்களிற் பேசுவதைத் தடுக்குஞ் சட்டம். Mod. |
| வாய்ப்பெட்டி | vāy-p-peṭṭi n. <>வாய்+பெட்டி1. See வாய்க்கூடு. (W.) . |
| வாய்ப்பெய் - தல் | vāy-p-pey- v. tr. <>id.+. To take in, as food; to eat; வாயிலிட்டுத் தின்னுதல். நிணம் வாய்ப்பெய்த பேய்மகளிர் (மதுரைக். 25). |
| வாய்ப்பேச்சு | vāy-p-pēccu n. <>id.+. 1. Utterance; word of mouth; வாயினாற்பேசுகை. பின்னையொன்றும் வாய்ப்பேச்சில¦ரானால் (அருட்பா, ii, திருவிண். 3). 2. Mere words, vain utterance; |
| வாய்ப்பை | vāyppai n. perh. வாய்2-.[M.vāypa.] Debt; கடன். (நாமதீப. 628.) |
| வாய்ப்பொய் | vāy-p-poy n. <>வாய்+. White lie; lie uttered with a good intention; மெய்ம்மையின்பாற் படும் பொய். துன்ப மோட்டு வாய்ப்பொய்யலாற் பொய்யொன்றுஞ் சொல்லார் (தணிகைப்பு. நாட். 48). |
| வாய்ப்பொன் | vāy-p-poṉ n. <>id.+. Horse's bit; கடிவாளத்தின் ஒருறுப்பு. உன்னி வாய்ப்பொன் கறித்திட (இரகு. நகர. 51). |
| வாய்பாடு | vāy-pāṭu n. <>id.+. 1. Formula; symbolic expression; குறியீடு. 2. Table, as of multiplication; 3. Idiom; cant; 4. Practice, custom, usage; 5. Skill in speech; 6. Mannerism in discourses; |
| வாய்பாறு - தல் | vāy-pāṟu- v. intr. <>id.+. To babble; to chatter; அலப்புதல். ஸாரதீ ஸாரதீ என்று வாய்பாறிக்கொண்டிறே பையல்கள் வருவது (ஈடு, 3, 6, 10). |
| வாய்பிதற்று - தல் | vāy-pitaṟṟu- v. intr. <>id.+. To speak incoherently; நாக் குமுறிப் பேசுதல். |
| வாய்பிள - த்தல் | vāy-piḷa- v. intr. <>id.+. 1. To open one's mouth wide; to gape; அங்காத்தல். (நாமதீப. 711.) 2. To be nonplussed; 3. To plead inability; 4. To die, used in contempt; |
| வாய்பினற்று - தல் | vāy-piṉaṟṟu v. intr. <>id.+. See வாய்பிதற்று-. (யாழ். அக.) . |
| வாய்புதை - த்தல் | vāy-putai- v. intr. <>id.+. To cover one's mouth with the palm of this right hand, as a mark of respect in the presence of one's superiors; பெரியார்முன்னிலையில் மரியாதைக்குறியாக வாயை வலக்கையால் மூடிக்கொள்ளுதல். |
| வாய்புலற்று - தல் | vāy-pulaṟṟu v.<>id.+. intr 1. To repeat often; பலகாற் சொல்லுதல். ஸத்துக்கள் . . . வாய்புலற்றும்படியான தேசமானால் (ஈடு, 2, 3, 11) --intr. 2. See வாய்பிதற்று-. |
| வாய்பூசறு - த்தல் | vāy-pūcaṟu- v. intr. <>id.+. See வாய்பூசு-, 1. (யாழ். அக.) . |
| வாய்பூசு - தல் | vāy-pūcu- v. intr. <>id.+. 1. To wash or rinse one's mouth; வாய்கழுவுதல். புகுமதத்தால் வாய்பூசி (திவ். இயற். 3, 70). 2. To sip water ceremonially; to perform ācamaṉam; 3. See வாய்முட்டுப்போடு-. (W.) 4. To flatter; |
| வாய்பேசு - தல் | vāy-pēcu- v. intr. <>id.+. To brag, boast; இடம்பமாகப் பேசுதல். எங்களை முன்ன மெழுப்புவான் வாய்பேசு நங்காய் (திவ். திருப்பா. 14). |
| வாய்பொத்து - தல் | vāy-pottu- v. intr.<>id.+. See வாய்புதை-. கைகட்டி வாய்பொத்தி நிற்பாரை (அருட்பா, vi, உறுதிகூறல். 9). . |
| வாய்பொருத்து - தல் | vāy-poruttu- v. intr.<>id.+. See வாய்புதை-. (யாழ். அக.) . |
| வாய்பொருமு - தல் | vāy-porumu- v. intr. <>id.+. See வாய்குளிறு-. (யாழ். அக.) . |
| வாய்போக்கு - தல் | vāy-pōkku- v. intr. <>id.+. To give one's word lightly; எளிதில் வாங்குக்கொடுத்தல். பார்ப்பானுக்கு வாய்போக்காதே, ஆண்டிக்கு அது தானும் சொல்லாதே. |
