Word |
English & Tamil Meaning |
|---|---|
| வாய்த்தாரை | vāy-t-tārai n. <>id.+தாரை2. (யாழ். அக.) 1. Edge, as of a weapon; ஆயுதத்தின் நுனி. 2. See வாய்க்கரை, 1. |
| வாய்த்தீர்த்தம் | vāy-t-tīrttam n. <>id.+. See வாய்நீர். வாய்த்தீர்த்தம் பாய்ந்தாட வல்லாய் வலம்புரியே (திவ். நாய்ச். 7, 6). . |
| வாய்த்துடுக்கு | vāy-t-tuṭukku n. <>id.+. 1. Rashness in speech; பேச்சிற்காட்டும் ஆத்திரம். 2. Arrogance in speech; |
| வாய்தடுமாறு - தல் | vāy-taṭumāṟu- v. intr. <>id.+. 1. To stutter; வாய்பதறுதல். (யாழ். அக.) 2. To make a verbal mistake; |
| வாய்தல் 1 | vāytal n.<>வாய்1-. Doorway, entrance; வாசல். ஒழுகு மாடத்து ளொன்பது வாய்தலும் (தேவா. 338, 7). |
| வாய்தல் 2 | vāytal n. <>ஆய்1-. Minuteness; நுணுக்கம். (அக. நி.) |
| வாய்தற்கூடு | vāytaṟ-kūṭu n.<>வாய்தல்1+. Door-frame; கதவினிலை. (யாழ். அக.) |
| வாய்தற்படி | vāytaṟ-paṭi n. <>id.+படி3. Door-step; கதவின் நிலைப்படி. (யாழ். அக.) |
| வாய்தா | vāytā n. <>U. waidā 1. Instalment; தவணை. (C. G.) 2. Due date, fixed date; 3. Granting time, adjourning; 4. Tax; kist; |
| வாய்தாரி | vāytāri n. See வாய்த்தாரை. (யாழ். அக.) . |
| வாய்தாரை | vāy-tārai n. See வாய்த்தாரை. (யாழ். அக.) . |
| வாய்திற - த்தல் | vāy-tiṟa- v. <>வாய்+. intr. 1. To open one's mouth; வாயை யகல விரித்தல். பணமென்றால் பிணமும் வாய்திறக்கும். 2. To blossom; to open, as a flower; 3. To break, as a boil; 4. To make a breach, as a flood; 1. To cause to open, as the petals of a flower; 2. To speak; |
| வாய்தீட்டு - தல் | vāy-tīṭṭu- v. tr. <>id.+. To sharpen the edge of, as a weapon; ஆயுத முதலியவற்றின் முனை தீட்டுதல். கன்மிசை யறிந்து வாய்தீட்டி (பெருங். இலாவாண. 4, 168). |
| வாய்ந்துகொள்(ளு) - தல் | vāyntu-koḷ- v. tr. <>வாய்1-+. To obtain by conquest; வென்று கைப்பற்றுதல். வாய்ந்துகொண் டடையார் வைவேல் (இரகு. குறைகூ. 7). |
| வாய்நாற்றம் | vāy-nāṟṟam n. <>வாய்+. 1. Sweet smell in the mouth; வாயின் மணம். (திவ். நாய்ச். 7, 1.) 2. Bad smell in the mouth; |
| வாய்நீர் | vāy-nīr n. <>id.+நீர்1. Saliva; spittle; உமிர்நீர். (யாழ். அக.) |
| வாய்நீளம் | vāy-nīḷam n. <>id.+. Caustic tongue; குறைகூறுந் தன்மை. |
| வாய்நெகிழ் - தல் | vāy-nekiḻ- v. intr. <>id.+. To open, as a flower; மலர்தல். செங்கழுநீர் வாய்நெகிழ்ந்து (திவ். திருப்பா. 14). |
| வாய்நேர் - தல் | vāy-nēr- v. tr. <>id.+. 1. To promise to give or bestow; தருவதாக வாக்களித்தல். அறைபறை மாயன் மணிவண்ணன் நென்னலே வாய்நேர்ந்தான் (திவ். திருப்பா. 16). 2. To vow to make a specific offering; 3. To give one's consent orally; |
| வாய்நோய் | vāy-nōy n. <>id.+. Mouth-disease, in cattle; மாட்டுக்கு வாயில் வரும் வியாதி. |
| வாய்ப்பக்காட்டு - தல் | vāyppa-k-kāṭṭu- v. tr. <>வாய்2-+. To indicate clearly; விளங்க உணர்த்துதல். வாய்ப்பக்காட்டல் பாயிரத் தியல்பே (நன். 47). |
| வாய்ப்பட்சி | vāy-p-paṭci n. <>வாய்+. Crow; காக்கை. தேமா வனந்தனிற் கூறுவாய்ப் பட்சியுறையும் (திருவேங். சத. 90). |
| வாய்ப்பட்டி | vāy-p-paṭṭi n. <>id.+பட்டி1. 1. Chatter-box, babbler; வாய்க்குவந்தபடி பேசுவோ-ன்-ள். வள்ளல்தெரியுமடி வாய்ப்பட்டி யென்றுரைத்தார் (ஆதியூரவதானி, 10). 2. One who eats whatever comes to hand; |
| வாய்ப்பட்டை | vāy-p-paṭṭai n. <>id.+பட்டை2. See வாய்ப்பட்டைக்கழி. . |
| வாய்ப்பட்டைக்கழி | vāyppaṭṭai-k-kaḻi n. <>வாய்ப்பட்டை+கழி4. Bamboo or piece of timber for supporting the tiles at the edge of a roof; கூரைமுகப்பில் ஓடுதாங்குவதற்கக வைக்கும் மூங்கில் அல்லது மரக்கட்டை. |
| வாய்ப்படு - தல் | vāy-p-paṭu v. intr. <>வாய்+. 1. To find a way; வழிப்படுதல். வந்தோர் வாய்ப்பட விறுத்த வேணி (புறநா. 343). 2. To be relished; |
