Word |
English & Tamil Meaning |
|---|---|
| வாய்போடு - தல் | vāy-pōṭu- v. intr. <>id.+. To interject or interrupt a person when talking; ஒருவன் பேசுகையில் இடையிற்புகுந்து பேசுதல். |
| வாய்மட்டம் | vāy-maṭṭam n. <>id.+மட்டம்1. 1. Top-level, level up to the brim or mouth, as of a vessel; பாத்திரம் முதலியவற்றின் மேல்மட்டம். (W.). 2. A process in making golden beads; 3. Ring round the mouth of vessel; |
| வாய்மடி - தல் | vāy-maṭi- v. intr. <>id.+. To become blunt-edged; கூர்மழுங்குதல். ப்ருஹ் மாஸ்திரம் வாய்மடியச் செய்தே (ஈடு, 6, 1, ப்£.). |
| வாய்மடு - த்தல் | vāy-maṭu v. tr. <>id.+. To put into one's mouth; வாயினுட்கொள்ளுதல். அடியேன் வாய்மடுத்துப் பருகிக் களித்தேனே (திவ். திருவாய். 2, 3, 9). |
| வாய்மடை | vāy-maṭai n. <>id.+மடை1 Opening in the ridge of a field for the passage of water; செய்வரப்பில் நீர்பாயும் வழி. |
| வாய்மண்போடு - தல் | vāy-maṇ-pōṭu- v. intr. <>id.+. 1. To deprive a person of his means of livelihood; சீவனத்தைக் கெடுத்தல். Colloq. 2. To do a wicked act; |
| வாய்மணியம் | vāy-maṇiyam n. <>id.+. 1. Ordering persons about, without ability to extract work from them; வேலை வாங்கத் திறமையின்றி வாயாற் செய்யும் அதிகாரம். Colloq. 2. Authority, influence; |
| வாய்மதம் | vāy-matam n. <>id.+மதம்2. See வாய்க்கொழுப்பு. வாய்மதமோ வித்தைமதமோ (குற்றா. குற. 76, 1). . |
| வாய்மலர் - தல் | vāy-malar- v. tr. <>id.+. To speak; பேசுதல். மைந்தனார் வாய்மலருங்குரல் கேட்டு (திருவிளை. மண்சும. 19). |
| வாய்முட்டுக்காசு | vāy-muṭṭu-k-kācu n. <>id.+முட்டு+காசு3. Hush-money; இரகசியத்தை வெளியிடாதிருக்குமாறு கொடுக்கும் இலஞ்சம். |
| வாய்முட்டுப்போடு - தல் | vāy-muṭṭu-p-pōṭu- v. intr. <>id.+id.+ To bribe; to pay hush-money; இரகசியத்தை வெளியிடாதிருக்குமாறு இலஞ்சங் கொடுத்தல். |
| வாய்முத்தம் 1 | vāy-muttam n. <>id.+முத்தம்1. Kiss; முத்தம். |
| வாய்முத்தம் 2 | vāy-muttam n. <>id.+முத்தம்2. Tooth; பல். வாய்முத்தஞ் சிந்திவிடுமோ நெல்வேலி வடிவம்மையே (தனிப்பா.). |
| வாய்முத்து | vāy-muttu n. <>id.+முத்து4. See வாய்முத்தம1¢. வாய்முத் தார்த்தி னல்லது தீரா துயிர்க்கென (பெருங். இலாவாண. 16, 59). . |
| வாய்மூ - த்தல் | vāy-mū- v. intr. <>id.+. To excel in speech; பேச்சிற் சிறத்தல். வாய்மூத்தகுடி. (W.) |
| வாய்மூட்டுக்காசு | vāy-mūṭṭu-k-kācu n. <>id.+மூட்டு-+காசு3. See வாய்முட்டுக்காசு. . |
| வாய்மூடு - தல் | vāy-mūṭu- v. intr. <>id.+. 1. See வாய்புதை-. (யாழ். அக.) . 2. To cease speaking, crying, etc.; 3. To close, as a flower; |
| வாய்மூத்தவன் | vāy-mūttavaṉ n. <>வாய்மூ-. 1. One who is forward in speech; பேச்சில் முந்துவோன். (யாழ். அக.) 2. Chief speaker; |
| வாய்மூப்பன் | vāy-mūppaṉ n. <>id. 1. Excellent speaker; பேச்சிற் சிறந்தவன். 2. One who pleads the cause of another, advocate; |
| வாய்மூழ் - த்தல் | vāy-mūḻ- v. intr. <>வாய்+மூழ்3-. See வாய்மூடு-, 1. ஒளிறுவேன் மறவரும் வாய்மூழ்த்தனரே (புறநா. 336). . |
| வாய்மை | vāymai n. <>id. 1. Word; சொல். சேரமான் வாரா யெனவழைத்த வாய்மையும் (தனிப்பா. i, 97, 19.) 2. Ever-truthful word; 3. Truth; 4. (Buddh.) Sublime truths, numbering four, viz., tukkam, tukkōṟpatti, tukka-nivāraṇam. tukka-nivāraṇa-mārkkam; 5. Strength; |
| வாய்மொழி - தல் | vāy-moḻi- v. tr. <>id.+ 1. To speak; கூறுதல். வாய்மொழிந்துரைக்கலுற்றாள் (சீவக. 1707). 2. To consecrate by uttering sacred hymns; |
| வாய்மொழி | vāy-moḻi n. <>id.+மொழி2. 1. Speech; வார்த்தை 2. Oral declaration; 3. Truth; true word; 4. The Vēdas; 5. Tiruvāymoḻi. See திருவாய்மொழி. அவ்வாய்மொழியை யாரு மறையென்ப (பெருந்தொ. 1820). |
