Word |
English & Tamil Meaning |
|---|---|
| வாய்வெருவு - தல் | vāy-veruvu- v. <>id.+. intr. & intr. 1. To speak incoherently, as in delirium; வாய்பிதற்றுதல். அருவிசோர் வேங்கடம் நீர்மலை யென்று வாய்வெருவினாள் (திவ். பெரியதி. 8, 2, 3). வெருவாதாள் வாய்வெருவி (திவ். பெரியதி. 5, 5, 1). --intr. 2. See வாய்குளிறு-, 2. |
| வாய்வேக்காடு | vāy-vēkkāṭu n. <>id.+. Thrush, a disease of the mouth, Aphthae; வாய்முழுதும் வெந்தாற்போலிருக்கும் நோய்வகை. (M. L.) |
| வாய்வேக்காளம் | vāy-vēkkāḷam n. <>id.+. Ulceration of the mouth, Stomatitis; வாய்ப்புண். (M. L.) |
| வாய்வை - த்தல் | vāy-vai- v. <>id.+. intr. 1. To eat; புசித்தல். சிவன் வாய்வைப்பனோ வாலத்தில் (தனிப்பா. ii, 116, 295). 2. To blow, as a wind-instrument; 3. to taste; 4. To meddle; 5. To learn a little; to have a desultory knowledge; 1. To bite; 2. To hear; |
| வாயசபிண்டம் | vāyaca-piṇṭam n. <>vāyasa+. Ball of rice offered to crows in cirāttam; சிராத்தத்திற் காக்கைக்கிடும் சோற்றுத்திரளை. |
| வாயசம் | vāyacam n. <>vāyasa. 1. Crow ; காக்கை. பருந்தும் வாயசமு முட்கழுகும் (செவ்வந்தி. பு. உறையூரழித். 24). 2. See வாயசபிண்டம். Loc. |
| வாயசம்பண்ணு - தல் | vāyacam-paṇṇu- v. intr. <>வாயசம்+. 1. To cringe, behave obsequiously; to coax by words, gifts and stratagems; இச்சக மொழி முதலியவற்றால் பிறரை வசப்படுத்துதல். Loc. 2. To gather a ball of rice to be offered to crows, in cirāttam; |
| வாயசாராதி | vāyacārāti n. <>vāyasārāti. Owl; ஆந்தை. (யாழ். அக.) |
| வாயசி | vāyaci n. <>vāyasī. 1. Hen-crow; பெண்காக்கை. (இலக். அக.) 2. A variety of Indian houndsberry. |
| வாயடி 1 | vāy-aṭi n. <>வாய்+அடி-. Overbearing speech; browbeating by speech; bluff; வாயால் மருட்டுகை. வாயடி கையடி யடிக்காதே. |
| வாயடி 2 - த்தல் | vāy-aṭi- v. <>id.+. intr 1. See வாயடியடி-. திருவாய்ப்பாடியிற் பெண்பிள்ளைகளை வாயடித்துத் தம் திருவடிகளிலே வந்து விழும்படி வசீகரித்து (திவ். திருவாய். 4, 2, 2, ஆறா.) . 2. To beat one's mouth, as in grief; 3. To chatter; |
| வாயடியடி - த்தல் | vāyaṭi-y-aṭi- v. <>வாயடி+. tr. To overpower one's opponent by bluff; வாய்ப்பேச்சால் மருட்டி வெல்லுதல். --intr. To bluff; |
| வாயடை 1 | vāy-aṭai n. <>வாய்+அடு1-. Food; உணவு. வாயடை யமிர்தம் (பரிபா. 2, 69). |
| வாயடை 2 | vāy-aṭai n. <>id.+அடை2-. Tetanus. See தாட்கிட்டிசன்னி. |
| வாயடை 3 - த்தல் | vāy-aṭai- v. tr. <>id.+ id. To silence, as an opponent, by arguments; பேசவொட்டாதபடி செய்தல். |
| வாயதம் | vāyatam n. <>vāyasa. Crow. See வாயசம், 1. வாயதம் வெருகு கூகை (திருவாலவா. 28, 64). |
| வாயம் | vāyam n. <>pāya. 1. Water; நீர். (யாழ். அக.) 2. Pouring; |
| வாயல் | vāyal n. <>வாயில். 1. Door, entrance; வாசல். (சங். அக.) 2. Side ; |
| வாயலம்பு - தல் | vāy-alampu v. intr. <>வாய்+. To wash or rinse one's mouth, as after a meal; உண்டபின் வாயைச் சுத்திபண்ணுதல். |
| வாயவி | vāyavi n. <>vāyavī North-west; வடமேற்றிசை. (யாழ். அக.) |
| வாயவிய நானம் | vāyaviya-nāṉam n. <>vāyavya+snāna. (šaiva.) See வாயவிய ஸ்நானம். (தத்துவப். 47, உரை.) . |
| வாயவியம் | vāyaviyam n. <>vāyavya. 1. That which pertains to the wind; வாயு சம்பந்தமானது. 2. A Purāṇa; 3. See வாயவி. 4. The 15th of the 15 divisions of the night; 5. See வாயவியஸ்நானம். (யாழ். அக.) 6. See வாயவியாஸ்திரம். |
| வாயவியஸ்நானம் | vāyaviya-snāṉam n. <>id.+snāna. Exposing oneself to the dust raised by cows' hoofs, considered a sacred bath, one of seven kinds of snāṉam, q.v.; ஸ்நானம் ஏழனுள் பசுத்திரள் செல்லுதலால் எழுகின்ற தூளி உடம்பிலெங்கும் படுவதாலாகிய ஸ்நானம். (W.) |
