Word |
English & Tamil Meaning |
|---|---|
| வாயிலாச்சீவன் | vāy-ilā-c-cīvaṉ n. <>id.+இல்2+ஆ-+. Animal, dumb creature; விலங்கு. |
| வாயிலாச்செந்து | vāyilā-c-centu n. <>id.+id.+id.+. See வாயிலாச்சீவன். . |
| வாயிலார்நாயனார் | vāyilār-nāyaṉār n. A canonized šaiva saint, one of 63; நாயன்மார் அறுபத்துமூவருள் ஒருவர். (பெரியபு.) |
| வாயிலாளன் | vāyil-āḷaṉ n. <>வாயில்+. Door-keeper; வாயில்காப்போன். (பிங்.) |
| வாயிலான் | vāyilāṉ n. See வாயிலார்நாயனார். தொன்மயிலை வாயிலான். (தேவா. 738, 8). . |
| வாயிலிற்கூட்டம் | vāyiliṟ-kūṭṭam n. <>வாயில்+. (Akap.) Reconciliation of lovers through the help of mediators; பாணன் முதலியோராற் கூடும் தலைவன்தலைவியரின் சேர்க்கை. (இலக். வி. 424.) |
| வாயிலெடு - த்தல் | vāyil-eṭu- v. tr. <>வாய்+. See வாயாலெடு-. . |
| வாயிலேபோடு - தல் | vāyil-ē-pōṭu- v. tr. <>id.+. 1. To interrupt, as a person, while speaking; பேசவொட்டாது குறுக்கிட்டுப்பேசித் தடை செய்தல். எது பேசினாலும் அவளை வாயிலேபோடுகிறான். 2. To misappropriate; |
| வாயிலோர் | vāyilōr n. <>வாயில். 1. Door-keepers; வாயில்காப்போர். வாயிலோயே வாயிலோயெ (சிலப். 20, 24. ). 2. Messengers; mediators; 3. A class of Tamil dancers; |
| வாயிற்காட்சி | vāyiṟ-kāṭci n. <>id.+. Apprehending faculty of the senses; இந்திரியக்காட்சி. (சி. சி. அளவை, 6, மறைஞா.) |
| வாயிற்கூத்து | vāyiṟ-kūttu n. <>id.+. A kind of dancing or acting; கூத்துவகை. வயிற் கூத்துஞ் சேரிப்பாடலும் (பெருங். உஞ்சைக். 37, 88). |
| வாயிற்சிகரி | vāyiṟ-cikari n. <>id.+சிகரி1. See வாயின்மடம். (சுக்கிரநீதி. 229.) . |
| வாயிற்படி | vāyiṟ-paṭi n. <>id.+படி3. Door-step, threshold; வீட்டுவாசலின் படி. மிருதி பதினெட்டு முயர் திருவாயிற் படியாக (குற்றா. தல. திருமால். 132). |
| வாயின்மறுத்தல் | vāyiṉ-maṟuttal n. <>id.+மறு-. (Akap.) Theme describing the refusal of the heroine to grant interview to her lover's messengers; தூதுவந்த பாணன் முதலியவர்க்குத் தலைவி முகங்கொடுக்க மறுத்தலைக் கூறும் அகத்துறை (தொல். பொ. 3, உரை.) |
| வாயின்மாடம் | vāyiṉ-māṭam n. <>id.+.மாடம்1. Tower over the entrance, as of a temple; கோபுரம். தீயழற் செல்வன் செலவுமிசை தவிர்க்கும் வாயின்மடாத்து (பெருங். மகத. 3, 31). |
| வாயினிலை | vāyiṉilai n. <>id.+நிலை. (Puṟap.) Theme of a poet asking the gatekeeper at the palace to announce his arrival to the king; அரசனிடத்துத் தன் வரவு கூறுமாறு வாயில்காப்போனுக்குப் புலவன் சொல்வதாகக் கூறும் புறத்துறை. (பு. வெ, 9, 2.) |
| வாயினேர்வித்தல் | vāyiṉērvittal n. <>id.+நேர்வி-. (Akap.) Theme of a lover persuading his messenger to deliver his lovemessage to his beloved; தலைவியிடம் தூது செல்லுமாறு தலைவன் தூதுவரை உடன்படுத்து வதைக் கூறும் அகத்துறை. (நம்பியகப். 96.) |
| வாயு | vāyu n. <>vāyu. 1. Wind, air; காற்று. (பிங்.) 2. An element, one of paṉcapūtam, q.v.; 3. Vāyu, the Wind-god, regent of the North-west, one of the aṣṭa-tikku-p-pālakar, q.v.; 4. The ten vital airs of the body. See தசவாயு. (சிலப். 3, 26, உரை.) 5. The windy humour, one of tiri-tōṣam, q.v.; 6. Vāyu, of six kinds, viz. acīraṇa-vāyu, utara-vāyu, karppa-vāyu, tamaraka-vāyu, pārica-vāyu, mēka-vāyu; 7. Flatulence; 8. Wind, gas generated in the bowels, etc,; 9. Gas; |
| வாயுக்குத்து | vāyu-k-kuttu n. <>வாயு+. 1. Pleurisy; pleuritis; sluggish liver; colic; வாயுநோய்வகை. (யாழ். அக.) 2. See வாய்வுக்குத்து, 1. |
| வாயுகண்டம் | vāyu-kaṇṭam n. <>vāyugaṇda. Indigestion; அசீரணம். (யாழ். அக.) |
| வாயுகணம் | vāyu-kaṇam n. <>id.+கணம்4. (Pros.) Metrical foot of two nēr and one nirai (- - o o), as tēmāṅkaṉi, considered inauspicious to commence a poem with, one of eight ceyyuṭkaṇam, q.v.; செய்யுட்கண மெட்டனுள் நூலின் முதற்சீராக அமைக்கத்தகாததும் நேர்நேர்நிரையென்னும் வாய்ப்பாடுடையதுமாகிய கணம். (இலக். வி. 800, உரை.) |
| வாயுகேது | vāyu-kētu n. <>vāyu-kētu. Dust; துகள். (யாழ். அக.) |
