Word |
English & Tamil Meaning |
|---|---|
| வாயவியாஸ்திரம் | vāyaviyāstiram n. <>id.+astra. A mystic missile presided over by Vāyu; வாயுதேவனை அதிதேவதையாகக்கொண்ட அம்பு. |
| வாயன் | vāyaṉ n. <>வாய். (அரு. நி.) 1. Messenger; தூதன். 2. cf. ஆயன். Shepherd; |
| வாயனதானம் | vāyaṉa-tāṉam n. <>vāyana+dāna. Presentation to Brahmans, of the naivēttiyam, at the end of a pūjā; நைவேத்திய பண்டங்களைத் தானமாகப் பிராமணர்களுக்கு வழங்குகை. |
| வாயனம் | vāyaṉam n. <>vāyana 1. A kind of sweetmeat; ஒருவகை இனிப்பான தின்பண்டம். 2. See வாயனதானம். |
| வாயாகு - தல் | vāy-āku- v. intr. <>வாய்+. To come true; உண்மையாதல். யானறிந் தேனது வாயாகுதலே (தொல். பொ. 261, உரை). |
| வாயாங்காரம் | vāy-āṅkāram n. <>id.+. See வாய்க்கொழுப்பு. (யாழ். அக.) . |
| வாயாடி | vāyāṭi n. <>வாயாடு-. 1. Talkative, loquacious person; babbler; chatterbox ; அலப்புவோன் 2. Eloquent or clever speaker; |
| வாயாடு - தல் | vāy-āṭu- v. intr. <>வாய்+. 1. To speak cleverly or eloquently; வாசாலகமாய்ப் பேசுதல். 2. To speak frivolously; to babble; 3. To be frequently munching; |
| வாயார | vāy-āra adv. <>id.+ஆர்1-. 1. With a full voicel; முழுக்குரலோடு. வாயார நாம் பாடி (திருவாச. 7, 15). 2. With a full mouth; |
| வாயாலுருட்டு - தல் | vāyāl-uruṭṭu v. <>id.+. intr. 1. See வாயடியடி-. --intr. . 2. See வாயடியடி-. |
| வாயாலெடு - த்தல் | vāyāl-eṭu- v. intr. <>id.+. To vomit; சர்த்திசெய்தல். (நாமதீப. 600.) |
| வாயாவி | vāy-āvi n. <>id.+. 1. Yawn; கொட்டாவி. (W.) 2. Breath; |
| வாயாவிபோக்கு - தல் | vāyāvi-pōkku- v. intr. <>வாயாவி.+. 1. To yawn; கொட்டாவி விடுதல். 2. To speak in vain, as wasting one's breath; |
| வாயிதா | vāyitā n. <>U. wāidā. See வாய்தா. Loc. . |
| வாயிதாப்பணம் | vāyitā-p-paṇam n. <>வாயிதா+பணம்2. Kist; வரிப்பணம். Tj. |
| வாயில் | vāyil n. <>வாய்+இல்1. [T. vākili, K. bāgil, Tu. bākil.] 1. Gate, portal, doorway; கட்டடத்துள் நுழையும் வாசல். அடையா வாயிலவ னருங்கடை (சிறுபாண். 206). 2. The five organs of sense, as avenues to the self; 3. The five objects of sense; 4. Way; 5. Opening; 6. Place; 7. Cause; 8. Means; 9. Remedy; 10. King's court; 11. See வாயில் காப்பான். வாயில் விடாது கோயில் புக்கு (புறநா. 67). 12. Messenger; 13. (Akap.) One who mediates between lovers; 14. Ability; 15. Door; 16. Origin, history; |
| வாயில்காப்பான் | vāyil-kāppāṉ n. <>வாயில்+கா-. Door-keeper; வாசலிற் காவல்செய்வோன். வாயில்காப்பானே மணிக்கதவம் தாள்திறவாய் (திருப்பா.16). |
| வாயில்மண்போடு - தல் | vāyil-maṇ-pōtu- v. intr. <>வாய்+மண்+. To cause ruin; கேடுவிளைத்தல். அவர் கடம்வாயில் ... மண்போட்டான் (தனிப்பா, i, 238, 8). |
| வாயில்மண்விழுதல் | vāyil-maṇ-viḻutal n. <>id.+id.+. Being completely ruined; முற்றுங் கேடுறுகை. |
| வாயில்விழைச்சு | vāyil-viḻaccu n. <>id.+. Saliva, spittle; உமிழ்நீர். வாயில்விழைச்சிலை யெச்சில் (ஆசாரக். 8). |
| வாயில்வேண்டல் | vāyil-vēṇṭal n. <>வாயில்+. (Akap.) Theme describing the request of a mediator to a heroine to give audience to her lover; தலைவனுக்கு முகங்கொடுக்குமாறு தலைவியைப் பாணன் முதலிய தூதுவர் வேண்டிக்கொள்வதைக் கூறும் அகப்பொருட்டுறை. (நம்பியகப். 95.) |
| வாயிலடி - த்தல் | vāyil-aṭi- v. tr. <>வாய்+அடி-. To ruin; முற்றுங் கெடுத்தல். |
