Word |
English & Tamil Meaning |
|---|---|
| வாயுவாங்கி | vāyu-vāṅki n. <>வாயு+வாங்கு-. Air-pump; காற்றை வெளிச்செலுத்தவல்ல கருவி. Mod. |
| வாயுவிளங்கம் | vāyu-viḷaṅkam n. prob. id.+vidaṅga. 1. Small elliptic-cuspidate leaved windberry, 1. cl., Embelia ribes; கொடிவகை. (நாமதீப. 310.) 2. Windberry pepper-corn; |
| வாயுவின்கூறு | vāyuviṉ-kūṟu n. <>id.+. (šaiva.) Categories which partake of the nature of the element air, five in number, viz., ōṭal, naṭattal, niṟṟal, iruttal, kiṭattal, one of 11 divisions of puṟa-nilai-k-karuvi, q.v.; புறநிலைக்கருவி பதினொன்றனுள் வாயுவின் பகுதியாகிய ஓடல் நடத்தல், நிற்றல், இருத்தல், கிடத்தல் என ஐவகைப்பட்ட செயல். |
| வாயுவின்கோபம் | vāyuviṉ-kōpam n. <>id.+கோபம்1. See வாயுப்பொருமல். (யாழ். அக.) . |
| வாயுவுப்பி | vāyu-v-uppi n. <>id.+உப்பு-. Inflator for pumping air in; காற்றை யுட்செலுத்த வல்ல கருவி. Mod. |
| வாயுவுபத்திரவம் | vāyu-v-upattiravam n. <>id.+. Pain from flatulency; colic; வாதநோயாலுண்டாந் துன்பம். |
| வாயுவேகம் | vāyuvēkam n. <>id.+. Wind-like speed; காற்றின் வேகம்போன்ற விரைவு. (யாழ். அக.) |
| வாயுவேகி | vāyuvēki n. <>vāyu-vēgin. Extremely active person; மிக்க சுறுசுறுப்புள்ள வ-ன்-ள். (யாழ். அக.) |
| வாயுள்ளவன் | vāy-uḷḷavaṉ n. <>வாய்+உள்1. Man of inquiring spirit, pushful man; உசாவி அறிந்துகொள்ளக்கூடியவன். |
| வாயுறு - த்தல் | vāy-uṟu- v. <>id.+. intr. To preach or expound the truth; வாக்கினால் மெய்ம்மையை அறிவுறுத்துதல். வாயுறை வாழ்த்தே . . . வாயுறுத் தற்றே (தொல். பொ. 424). -tr. To feed; to administer, as medicine, by the mouth; |
| வாயுறை | vāyuṟai n. <>வாயுறு-. 1. Eating; உண்கை. வடுத்தீர் பகல்வாயுறை (சிறுபஞ். 69). 2. Food, fodder; 3. Harialli grass. 4. Ceremony of giving boiled rice to an infant for the first time. 5. Bolus of cooked rice; 6. Medicine; 7. See வாயுறைமொழி. (தொல். பொ. 423, உரை.) 8. A kind of ear-ring, worn by women; |
| வாயுறைமொழி | vāyuṟai-moḻi n. <>வாயுறை+மொழி2. Harsh but salutary words of advice; கேட்கும்போது வெவ்வியதாய்ப் பின்பு உறுதிதருஞ் சொல். (சி. போ. பா. 2, 2, பக். 165.) |
| வாயுறைவாழ்த்து | vāyuṟai-vāḻttu n. <>id.+. 1. (Puṟap.) Theme of wise men giving salutary advice to a chief nolens volens; தலைவன் வேண்டானாயினும் அவற்கு உறுதிமொழிகளைச் சான்றோர் கூறும் புறத்துறை. (தொல். பொ. 90.) 2. A variety of descriptive poetry, one of 96 pirapantam, q.v.; |
| வாயுஸ் தம்பனம் | vāyu-stampaṉam n. <>vāyu-stambhana. See வாயுத்தம்பம். (W.) . |
| வாயூற்று | vāyūṟṟu n. <>வாயூறு-. Profuse secretion of saliva; வாயில் உமிழ்நீர் சுரக்கை. (யாழ். அக.) |
| வாயூறு - தல் | vāy-ūṟu- n. <>வாய்+. intr. To water, as the mouth; to secrete profusely, as saliva in anticipation of food; உணவை நினைந்து உமிழ்நிர் சுரத்தல். அமரர்குழாம் வாயூற (அழகர்கல. 1). -tr. To long for, as wealth, fame, office, learning; |
| வாயெடு - த்தல் | vāy-eṭu- v. intr. <>id.+. 1. To begin to speak; பேசத்தொடங்குதல். 2. To speak aloud; to raise the voice; |
| வாயெழு - தல் | vāy-eḻu- v. intr. <>id.+. See வாயெடு-, 1. Loc. . |
| வாயைக்கட்டு - தல் | vāyai-k-kaṭṭu- v. <>id.+. intr. 1. To observe restrictions of diet; உணவிற் பத்தியமாக இருத்தல். 2. To stint one-self in the matter of food; 3. See வாய்கட்டு-, 2, 3.-tr. 4. See வாய்கட்டு-, 1, 2. |
| வாயொடுங்கு - தல் | vāy-oṭuṅku- v. intr. <>id.+. To be tongue-tied; to be rendered speechless; பேச்சடங்குதல். (யாழ். அக.) |
| வாயொலி | vāy-oli n. <>id.+. Poem; பாடல். கலியன் வாயொலிகள் (திவ். பெரியதி. 4, 5, 10). |
| வாயோடு | vāy-ōṭu n. <>id.+ ஓடு2 1. Neck of a broken pot; உடைந்த பானையின் வாய்ச்சில்லு. (திவ். திருமாலை, 5, வ்யா. பக். 29.) 2. Circular piece like the neck of a broken pot placed at the mouth of a mortar, while pounding paddy to prevent the grain from scattering; |
