Word |
English & Tamil Meaning |
|---|---|
| வாரணன் | vāraṇaṉ n. <>vāraṇa. Gaṇēša ; கணபதி. வாரணன் குமரன் வணங்குங் கழற் பூரணன் (தேவா. 785,10). |
| வாரணாசி | vāraṇāci n. <>Vāraṇasī. Benares, situate between the rivers Varaṇā and Asī; காசி. வாரணாசியோர் மறையோம்பாளன் (மணி.13, 3). |
| வாரணாவதம் | vāraṇāvatam n. <>Vāraṇāvata. An ancient town on the Ganges, near Hastiṉāpura; அஸ்தினாபுரத்தை யடுத்துக் கங்கைக்கரையி லுள்ள பழைய ஊர். (பாரத.வாரணா.109.) |
| வாரணை | vāraṇai n. <>vāraṇa. Obstruction; தடை. (பிங்.) |
| வாரணையம் | vāraṇaiyam n. <>வாரணை. See வாரணை. (W.) . |
| வாரத்தண்டு | vārattaṇṭu n. See வாரத்தளகு (சங். அக.) . |
| வாரத்தளகு | vārattaḷaku n. Indian night-shade. See முள்ளி1, 2. (மலை.) |
| வாரத்திட்டம் | vāra-t-tiṭṭam n. <>வாரம்2+திட்டம்1 (R. T.) 1. Adjustment of the shares of the produce, as mēlvāram and kuṭivāram; மேல்வாரங் குடிவாரங்களின் பிரிப்பொழுங்கு. 2. A register kept by the village accountant of the respective shares of the produce assignable to the cultivators and proprietors; |
| வாரத்துக்குவளர் - த்தல் | vārattukku-vaḷar- v. tr. <>id.+. To raise, as fowls, pigs, etc., on an agreement to share the proceeds of the sale with the owner; விற்பதாற் கிடைக்கும் இலாபத்தைச் சொந்தக்காரனோடு பகுத்துக்கொள்வதாக ஒப்புக்கொண்டு கோழி பன்றி முதலியன வளர்த்தல். (W.) |
| வாரத்துண்டு | vāra-t-tuṇṭu n. <>id.+. 1. Deduction made from the cultivator's share and added to that of the landlord or the government; குடிவாரத்தினின்று கழித்துச் சர்க்கார் அல்லது நிலச்சுவான்தாரின் மேல்வாரத்தோடு கூட்டும் சிறுபகுதி. (R.T.) 2. Unrealised balance of the landlord's share of the produce; |
| வாரநாரி | vāra-nāri n. <>vāra-nārī. Prostitute; வேசி. (யாழ்.அக) |
| வாரப்பட்டா | vāra-p-paṭṭā, n. <>வாரம்2+பட்டா2. Rent-deed or paṭṭā fixing the amount of rent in kind; தானியக்குத்தகையாகக் கொடுக்கும் பட்டா. |
| வாரப்பட்டை | vāra-p-paṭṭai n. <>வாரம்1+பட்டை2. Bressummer, beam placed horizontally to support the roof above; மேற்கூரை தாங்கும் உத்திரம். |
| வாரப்படு - தல் | vāra-p-paṭu- v. intr. <>வாரம்2+. To show mercy; to pity; உருக்கங்கொள்ளுதல். (யாழ். அக.) |
| வாரப்பற்று | vāra-p-paṟṟu n. <>id.+. Lands held on the sharing tenure, a share of the produce being received by the government or landlord in kind, opp. to tīrvai-p-paṟṟu; சர்க்கார் அல்ல்து நிலச்சுவான்தார் வாரமாகத் தானியத்தைப் பெற்றுக்கொள்ளுமாறு விடும் நிலம். (C.G.) |
| வாரப்பாடு | vārappāṭu n. <>வாரப்படு-. 1. Love; அன்பு. அவனுக்கு அவளிடத்தில் வாரப்பாடு. 2. Pity, mercy; 3. Partiality, bias, prepossession; |
| வாரப்பிரிவு | vāra-p-pirivu n. <>வாரம்2+. Division of shares in cultivation; மேல்வாரங்குடிவாரங்களின் பிரிவு. (R. T.) |
| வாரபுசை | vārapucai n. <>vāra-buṣā. See வாரணபுசை. (சங். அக.) . |
| வாரம் 1 | vāram n. prob. வார்1-. 1. Mountain slope; மலைச்சாரல். (பிங்.) வாரமதெங்கும் . . . பண்டிகளூர (இரகு. திக்கு. 258). 2. Verandah of a house; 3. Side; 4. (Mus.) Mellifluous song; 5. (Pros.) A member of kali verse; 6. (Drama.) Song of an accompanist sung as a relief to the chief singer; 7. Song in praise of a deity; 8. (Nāṭya.) A kind of dance; |
| வாரம் 2 | vāram n. <>vāra. 1. Days of the week, numbering seven, viz., āti-vāram, cōma-vāram, maṅkaḷa-vāram, caumiya-vāram, kuru-vāram, cukkira-vāram, caṉi- vāram; ஆதிவாரம் சோமவாரம் மங்களவாரம் சௌமியவாரம் குருவாரம் சுக்கிரவாரம் சனிவாரம் என்ற ஏழ கிழமைகள். 2. Week; 3. Proprietorship, ownership; 4. Tax; 5. Hire, rent; 6. Lease of land for share of the produce; 7. Share of a crop or the produce of a field, of two kinds, viz.,mēlvāram,kuṭivāram; 8. Share, portion; 9. Half, moiety; 10. Love; 11. Partiality; 12. Impediment, obstacle; 13. Screen; 14. Doorway; 15. Multitude; crowd; 16. Sea; 17. Vessel; 18. Turn, time; 19. Vēdic chant or recitation; |
