Word |
English & Tamil Meaning |
|---|---|
| வாரம் 3 | vāram n. <>pāra. (பிங்.) 1. Boundary, limit; வரம்பு. 2. Bank, shore; |
| வாரம்படு - தல் | vāram-paṭu- v. intr. <>வாரம்2+. To be prejudiced or biassed; to show partiality; பட்சபாதமுறுதல். வாரம்பட்டுழித்தீயவு நல்லவாம் (சீவக. 888). |
| வாரம்பாடு - தல் | vāram-pāṭu- v. intr. <>வாரம்1+. (Dram.) To sing in accompaniment; பின்பாட்டுப் பாடுதல். வாரம்பாடுந் தோரிய மடந்தையும் (சிலப்.14, 155). |
| வாரம்பிரி - த்தல் | vāram-piri- v. tr. <>வாரம்2+. To divide the harvest between the cultivator and the landlord; சாகுபடி நெல் முதலியவறைக் குடிவார மேல்வார முதலிய விகிதப்படி பிரித்தல். |
| வாரம்வை - த்தல் | vāram-vai- v. intr. <>id.+. To be attached to; to have a strong liking for; to show concern; பிரியப்படுதல். என்கண்ணே வாரம்வைத்துக் காத்தனை (தாயு.பராபர.227). |
| வாரமரக்கலம் | vāra-marakkalam n. perh. id.+. A kind of tax; ஒருவகை வரி . (Insc. Pudu. 149.) |
| வாரமாதர் | vāra-mātar n. <>vāra+. See வாரஸ்திரீ. வாரமாதர் போன்ற (மேருமந்.வைசயந். 17) . . |
| வாரமிருத்தல் | vāram-iruttal n. <>வாரம்2+இரு-. Gathering of Vēdic scholars for being examined in the Vedas; வேத பரீக்ஷைக்காகக் கூடும் வேதவித்துக்களின் சபை. Nā. |
| வாரயம் | vārayam n. A prostrate herb. See பிரமி. (சங்.அக.) |
| வாரல்வலை | vāral-valai n. <>வாரு-+. Net; வலைவகை . |
| வாரவட்டை | vāra-v-aṭṭai n. <>வாரம்1+. See வாரை1, 3. . |
| வாரவாணம் | vāra-vāṇam n. <>vāra-vāṇa. 1. Quilted jacket; பஞ்சுபெய்து தைத்த மெய்ச்சட்டை. (W.) 2. Breast-plate; |
| வாரவாணி | vāra-vāṇi n. <>vāra-vāṇi. Harlot; வேசி. (யாழ்.அக.) |
| வாரவாரம் 1 | vāravāram n. prob. vāra-vāraṇa. Armour; கவசம். (சது.) |
| வாரவாரம் 2 | vāra-vāram adv. <>வாரம்2+வாரம்2. See வாராவாரம். Loc. . |
| வாரவிசேஷம் | vāra-vicēṣam n. <>vāra+. (Astrol.) Suitability of a particular day of the week for a particular purpose; இன்ன கிழமையில் இன்ன தொழில் செய்தற்குரியதென்னும் பொருத்தம். (சங்.அக.) |
| வாரவிலாசினி | vārā-vilāciṉi n. <>vāra-vilāsini. See வாரஸ்திரீ. (யாழ். அக.) . |
| வாரவோரை | vāra-v-ōrai n. <>vāra+hōrā. The first mukūrttam after sunrise; நாளின் முதல் முகூர்த்தநேரம். (பஞ்.) |
| வாரஸ்திரீ | vāra-strī n. <>vāra-strī. Harlot, prostitute; பொதுமகள். வாரஸ்திரீகளுக்குள் முக்யை யென்று (குருபரம். பக்.91). |
| வாராக்கதி | vārā-k-kati n. <>வா-+ஆ neg.+. Heaven, as the place from which there is no return; மோட்சம். வாராக்கதி யுரைத்த வாமன் (சீவக. 1247). |
| வாராகம் | vārākam n. <>Vārāha. 1. Viṣṇu's Boar-incarnation; திருமாலின் பன்றியவதாரம். வாராகமதாகி யிம்மண்ணை யிடந்தாய் (திவ்பெரியதி, 4, 7, 8). 2. A sanskrit astronomical treatise by varākamikirar; |
| வாராகரம் | vār-ākaram n. <>vār + ākara. Sea; கடல். வாராகர மேழுங்குடித்து. (திருப்பு. 1035). |
