Word |
English & Tamil Meaning |
|---|---|
| வாராகன் | vārākaṉ n. <>Vārāha. Viṣṇu, as having assumed the form of a boar; பன்றியவதாரமெடுத்த திருமால். வாராக வாமனனே (அஷ்டப். திருவரங்கத்தந். 60). |
| வாராகி | vārāki n. <>vārāhī. 1.Vārāhi, Sakti of the Boar-form of Viṣṇu, one of catta-mātar, q.v.; சத்தமாதரில் வாரகாவதாரத்தின் சத்தி. 2. Sow; 3. Earth; 4. A bulbous plant; |
| வாராங்கனை | vārāṅkaṉai n. <>vārāṅganā. See வாரஸ்திரீ. (யாழ். அக.) . |
| வாராசனம் | vārācaṉam n. <>vār-āsana. Water-pot; நீர்க்குடம். (யாழ். அக.) |
| வாராடை | vārāṭai n. Leather strap. See வரடை. |
| வாராணசி | vārāṇaci n. <>Vārāṇasī. Benares. See வாரணாசி. (பிங்.) |
| வாராததனால்வந்ததுமுடித்தல் | vārā-tataṉāl-vantatu-muṭittal n. <>வா-+ஆ neg.+வா-+. (Gram.) A literary device by which the sense of a Sūtra defectively expressed is rendered complete; ஒரு பொருண்மைக்கு வேண்டும் இலக்கணம் நிரம்ப வாராதோர் சூத்திரத்தானே அங்ஙனம் வந்த பொருண்மைக்கு வேண்டும் முடிபு கொள்ளுந் தந்திர வுத்திவகை (தொல்.பொ.666). |
| வாராமற்பண்ணு - தல் | vārāmaṟ-paṇṇu- v. tr. prob. வா-+ஆ neg.+. To get by heart; மனப்படாஞ்செய்தல். Colloq. |
| வாராவதி | vārāvati n. perh. வார்4+ வதி4. [T. vāradhi, K. vārāvadi.] Bridge; பாலம். (W.) |
| வாராவந்தி | vārā-vanti n. <>வா-+ஆ neg.+வா-. That which comes or occurs of necessity; கட்டாயமாய் வருவது. (சங்.அக.) |
| வாராவரத்து | vārā-varattu n. <>id.+id.+. Unjust or inequitable acquisition or income; அநீதியாய் வந்தது. (யாழ். அக.) |
| வாராவரவு | vārā-varavu, n. <>id.+id.+. Rare visit; ஆபூர்வமான வருகை. வாராவரவாக வந்தருளு மோனருக்கு (தாயு.பைங்கிளி.51). |
| வாராவாரம் | vārā-vāram adv. <>வாரம்2+வாரம்2. Weekly; வாரந்தோறும். |
| வாராவாரி | vārā-vāri n. prob. வா-+ஆ neg.+ வாரி1. Plenty; மிகுதி. (யாழ். அக.) |
| வாராவுலகம் | vārā-v-ulakam n. <>id.+id.+. 1. See வாராக்கதி. . 2. Heaven, hero's heaven; |
| வாராவுலகு | vārā-v-ulaku n. <>id.+.id+. See வாராக்கதி. வாராவுலகருள வல்லாய்நீயே (தேவா. 300, 9). . |
| வாரானை | vārāṉai n. <>id. A section of piḷḷai-t-tamiḻ, in which an one-year old child is described as being invited by its mother and others to come to them, one of ten āṇ-paṟ-piḷḷai-t-tamiḻ , q.v. or peṇ-paṟ-pillai-t-tamiḻ; பிள்ளைத்தமிழில் ஆண் அல்லது பெண் குழந்தையைத் தன்னிடம் வருக என்று தாய் முதலியோர் அழைப்பதைக் கூறும் பருவம். (பிங்.) மாற்றாரிய முத்தமே வாரானை. (வச்சணந். செய்.8). |
| வாரானைப்பருவம் | vārāṉai-p-paruvam n. <>வாரானை+. See வாரானை. . |
| வாரி 1 | vāri n. <>வா-. 1. Income, resources; வருவாய். (பிங்.) புயலென்னும் வாரி (குறள்.14). 2. Produce; 3. Grain; 4. of. vārya. Wealth; |
| வாரி 2 | vāri n. <>வார்1-. 1. Pole for tightening a package or pack; மூட்டைகளை இறுக்கிக்கட்ட உதவும் கழி. Loc. 2. Lath tied length wise at the edge of a thatched roof; 3. Channel for draining off the rain water from a roof; waterway; 4. Plank across a dhoney; 5. Sluice; |
| வாரி 3 | vāri n. <>வாரு-. (W.) 1. cf. vārakīra. Comb; சீப்பு. 2. Rake; |
| வாரி 4 - த்தல் | vāri- 11 v. tr. <>vr. 1. To hinder, obstruct; தடுத்தல். (சூடா.) 2. To asseverate, swear; 3. To conduct, drive, as a horse; |
| வாரி 5 | vāri n. <>வாரி4-. 1. Impediment, obstruction; தடை. (சூடா.) 2. Wall, fortification; 3. Stadium; 4. Portion; |
| வாரி 6 | vāri n. <>vāri. 1. Water; நீர். (பிங்.) (தக்கயாகப்.67, உரை.) 2. Flood; 3. Sea; 4. Reservoir of water; 5. Literary work; 6. Sarasvatī; 7. A kind of lute; 8. Flute; pipe; 9. Kheddha; 10. Rope for tying an elephant; 11. Elephant-stable; |
