Word |
English & Tamil Meaning |
|---|---|
| வால் நறுக்கு | vāl-naṟukku n. <>id.+. Ola slip cut off from the lower end of a palmleaf; ஒலையின் அடிப்புறத்துண்டு. (W.) |
| வால் நீளம் | vāl-nīḷam n. <>id.+. See வால்வீச்சு. . . |
| வால்மரம் | vāl-maram n. <>id.+. Long pole attached to the pivot, used in a mill for grinding lime-mortar; சுண்ணாம்பரைக்கும் உருளை. கோத்த மரம். (கட்டடசா.15.) |
| வால்மிளகு | vāl-miḷaku n. <>Id.+. Cubeb, m. cl., Piper cubeba; கொடிவகை. (பதார்த்த. 953.) |
| வால்மீகபலம் | vālmīka-palam n. See வான்மீகபலம். (அரு. அக.) . |
| வால்மீகம் | vālmīkam n. <>Vālmīka. The Rāmāyaṇa, as composed by Vālmīki; வான்மீகிமுனிவர் இயற்றிய வடமொழி இராமாயணம். (W.) |
| வால்மீகி | vālmīki n. <>Vālmīki. A sage, the author of the Rāmāyaṇa; வடமொழியில் இராமாயணமியற்றிய முனிவர். |
| வால்மீன் | vāl-mīṉ. n. <>வால்2+மீன்1. See வால்நட்சத்திரம். (W.) . |
| வால்முளைத்தல் | vāl-muḷaittal n. <>id.+முளை1-. Becoming mischievous, as resembling a monkey; சேட்டை செய்கை. |
| வால்முறுக்கு - தல் | vāl-muṟukku- v. tr. <>id.+. To provoke, irritate, as an animal by twisting its tail; தூண்டிவிடுதல். |
| வால்வரிக்கொடுங்காய் | vāl-vari-k-koṭuṅkāy n. <>வால்1+வரி1+. Cucumber; வெள்ளரிக்காய். (சிலப், 16, 25, அரும்.) |
| வால்வீச்சு | vāl-vīccu n. <>வால்2+. 1. Measurement from front to rear, as of a house; வாசல்முதல் கொல்லயினெல்லைவரையுள்ள வீட்டின் நீட்சியளவு. 2. That which is long and narrow; |
| வால்வெடி - த்தல் | vāl-veṭi- v. intr. <>id.+. To lash the tail in rage, as a beast; கோபத்தினால் வாலைத்தூக்கி அடித்தல். வால் வெடிப்பனவாகிய சிங்கம் (சீவக.1902, உரை). |
| வால்வெள்ளி | vāl-veḷḷi n. <>id.+. See வால்நட்சத்திரம். (சங்.அக.) . |
| வால்வை - த்தல் | vāl-vai v. intr. <>id.+. Loc. 1. To add details; to give finishing touches ; வேண்டிய உருப்புகளைச் சேர்த்துப் பூரணஞ்செய்தல். 2. To exaggerate; |
| வாலக்கிரகம் | vāla-k-kirakam n. <>bāla+. Planetary influences said to cause ailments during childhood; குழந்தைப்பருவத்திற் பீடையை விளைவிக்கும் கிரகக்கோளாறு. |
| வாலகம் | vālakam n. <>vāla-ka. Tail; விலங்கின் வால். (w.) |
| வாலகன் | vālakaṉ n. <>bāla-ka. Youth; இளைஞன். வாலகருடன் பண்டு கண்டகதை யல்லவோ (திருவேங். சத.2) . |
| வாலகிரகக்கடி | vālakiraka-k-kaṭi n. <>வாலக்கிரகம்+கடி5. The evil spirit of vāla-k-kirakam; வாலக்கிரகமாகிய பேய.¢ மாளயத்தைச் செய்தோர் மைந்தர் வாவுமயில் வாகனன்றன் வாலகிரகக் கடியான் மாழ்கலில்லா ராவர் (சேதுபு.துரா சார.24). |
| வாலகிருமி | vāla-kirumi n. <>vālakrimi. Louse; பேன். (சங். அக.) |
| வாலகில்லியர் | vālakilliyar. n. <>Vālakhilya. A class of Rṣis of the size of a thumb; கட்டைவிரலளவு வடிவுடைய ஒருசார் முனிகணத்தார். அறுபதினாயிரம் வாலகில்லியரைக் கிருதுவினையணைந்து பெற்றாள் (கூர்மபு. பிரு. 8.) |
| வாலகிலர் | vālakilar n. See வாலகில்லியர். வாலகிலர்முனம் வாழ்த்த வந்து (இரகு. இலவண. 32) . . |
| வாலகிலியர் | vālakiliyar n. See வாலகில்லியர். வாலகிலியரும் வந்தீண்டி (பதினொ. திருக்கைலா.50). . |
| வாலசரம் | vālacaram n. A kind of paddy, as originally from Balasore, a town in Orissa; ஒரிஸ்ஸா நட்டிலுள்ள வாலசரம் என்ற ஊரிலிருந்து முதலிற் கொண்டுவரப்பெற்றுத் தமிழ்நாட்டிற் பயிரிடப்படும் ஒருவகை நெல். (W.) |
| வாலசரிதை நாடகம் | vāla-caritai-nāṭakam n. <>bāla+ carita+. Dances of Krṣṇa in His boyhood; கண்ணபிரான் இளமைப்பருவத்து நடித்த கூத்து. (சிலப்.17, கருப்பம்.பக்.442.) |
| வாலசிகிற்சை | vāla-cikiṟcai n. <>id.+. 1. Medical treatment of children; குழந்தை வைத்தியம். 2. Treatise on the medical treatment of children; |
| வாலசூரா | vālacūrā n. [T. vālarasi] (L.) 1. Fish-poison cedar, walsura; மரவகை. 2. Ochre-flowered fish-poison cedar. See மலைவிராலி. |
| வாலதி | vālati n. <>vāladhi. 1. Tail; வால். (பிங்.) விரியுரோம வாலதிகளில் (பாரத. காண்டவ. 18). 2. Tail of an elephant; |
