Word |
English & Tamil Meaning |
|---|---|
| வாழ்த்தெடு - த்தல் | vāḻtteṭu-. v. tr. <>வாழ்த்து+எடு-. To praise; துதித்தல். சுரிசங்கம் . . . யாதென்று வாழ்த்தெடுப்பேன் (குலோத். கோ. 321). |
| வாழ்நர் | vāḻnar n. <>வாழ்-. Inhabitants, residents; வாழ்வோர். தென்புல வாழ்நர்க் கருங்கட னிறுக்கும் பொன்போற் புதல்வர் (புறநா. 9). |
| வாழ்நாள் | vāḻ-nāḷ n. <>id.+. Lifetime; ஆயுட்காலம். வாழ்நாட் கலகா வயங்கொளி மண்டலம் (நாலடி, 22). |
| வாழ்முதல் | vāḻ-mutal n. <>id.+. God, as the source or first cause of existence; [வாழ்வுக்கு முதற்காரணன்] கடவுள். மற்றடியேன்றன்னைத் தாங்குநரில்லையென் வாழ்முதலே (திருவாச. 6, 23). |
| வாழ்வரசி | vāḻvaraci n. <>வாழ்வு+அரசி. See வாழ்கிறவள். Loc. . |
| வாழ்வாட்டி | vāḻ-v-āṭṭi n. <>id.+ஆள்-. See வாழ்கிறவள். (சங். அக.) . |
| வாழ்வாடிச்சி | vāḻ-v-āṭicci n. <>id.+ஆடு-. See வாழ்கிறவள். (யாழ். அக.) . |
| வாழ்வி - த்தல் | vāḻvi- 11 v. tr. Caus. of வாழ்-. 1. To cause or help one to live; வாழவைத்தல். வாழ்விப்பா னெண்ணமோ (அஷ்டப். நூற்றெட். 47). 2. (Legal)To deliver possession through court; |
| வாழ்விப்பு | vāḻvippu n. <>வாழ்வி-. (Legal.) Delivery of possession through court; கோர்ட்டு மூலமாகச் சொத்தை உரியவனிடம் ஒப்படைக்கை. |
| வாழ்விழ - த்தல் | vāḻviḻa- v. intr. <>வாழ்வு+இழ-. 1. To be widowed; அமங்கலியாதல். 2. To become a widower; |
| வாழ்விழந்தவள் | vāḷviḷantaval n. <>வாழ்விழ-. Widow; அமங்கலி. (யாழ். அக.) |
| வாழ்வினை | vāḻ-viṉai n. <>வாழ்-+. Objectives of human pursuit. See. புருஷார்த்த ஸ்வரூபம். ஊழ்வினையும் வாழ்வினையு மோதுங் குருகையர்கோன் . . . வேதத்தியல் (திவ். திருவாய். தனியன்.) . |
| வாழ்வு | vāḻvu n. <>di. 1. Prosperity, happiness, felicity; happy life; நல்வாழ்க்கை. என்னிதன் மேலவட் கெய்தும் வாழ்வென்றாள் (கம்பரா. மந்தரை. 49). 2. Livelihood, living, career; 3. Endowment of land for maintenance; See சீவிதம்,. 3. மன்னிங்கு வாழ்வு தருதும் (சீவக. 2347). 4. Residing; 5. Residence; 6. Town; 7 High state or position; 8. Wealth; 9. Course, system; |
| வாழ்வுதாழ்வு | vāḻvu-tāḻvu n. <>வாழ்வு+. Prosperity and adversity; ஒருவனது வாழ்க்கையில் ஏற்படும் செல்வநிலையும் வறுமைநிலையும். |
| வாழகம் | vāḻakam n. Konkany resin; வெள்ளைக்குங்கிலியம். (மலை.) |
| வாழபுட்பி | vāḻapuṭpi n. <>வாலபுட்பி. Arabian jasmine; See முல்லை, 1. (மலை.) . |
| வாழாக்குடி | vāḻā-k-kuṭi n. <>வாழ்-+ஆ neg.+குடி4. See வாழாவெட்டி. (யாழ். அக.) . |
| வாழாக்கேடி | vāḻa-k-kēṭi n. <>id.+id.+கேடு. Unmarried woman; spinster; விவாக மில்லாதிருப்பவள். (யாழ். அக.) |
| வாழாக்கொடி | vāḻā-k-koṭi n. <>id.+id.+. See வாழாவெட்டி. Loc. . |
| வாழாத்திப்போளம் | vāḻātti-p-pōḻam n. cf. வாலதிப்போளம். Gum-myrrh; சாம்பிராணி வகை. (J.) |
| வாழாதவள் | vāḻātavaḷ n. <>வாழ்-+ஆ neg. Loc. 1. See வாழாவெட்டி. . 2. Widow; |
| வாழாவெட்டி | vāḻāveṭṭi n. <>id.+ஆ neg.+வெட்டி. Married woman not living with her husband; grass-widow; கணவனோடு சேர்ந்து வாழப்பெறாதவள். Loc. |
| வாழி | vāḻi <>வாழ்-. v. opt.-int. Optative meaning 'may you prosper'; 'வாழ்க' என்னும் பொருளில் வரும் வியங்கோட்சொல். (நன். 168.) தடமலர்த்தாள் வாழி (திருவாச. 24, 6). 2.-intr. An expletive; |
| வாழி - த்தல் | vāḻi- 11 v. intr. <>id. To be over-luxuriant in growth and unproductive; மதர்த்துப்போதல். (யாழ். அக.) |
| வாழித்திருநாமம் | vāḻi-t-tirunāmam n. <>வாழி+. Poem of salutation to the Acāryas; ஆசாரியரை வாழ்த்தும் பாடல். Vaiṣṇ. |
| வாழிப்பு | vāḻippu n. <>வாழி-. Overluxuriant growth; மதர்ப்பு.(யாழ். அக.) |
| வாழிய | vāḻiya <>வாழ்-. v. opt. 1. See வாழி. (நன். 168) . -intr. An expletive; |
| வாழும்பாம்பு | vāḻum-pāmpu n. <>id.+. Cobra believed to grow short with age and live in houses or house-sites. See மனைப்பாம்பு, 2. . |
