Word |
English & Tamil Meaning |
|---|---|
| வானமிருகம் | vāṉa-mirukam n. prob. வானம்2+. Bone of the musk-rat; கத்தூரி யெலும்பு. (யாழ். அக.) |
| வானர் | vāṉar n. <>வான்1. Celestials; தேவர். மான்முதல் வானர்க்கு (திருக்கோ. 155). |
| வானரக்கொடியோன் | vāṉara-k-koṭi-yōṉ n. <>வானரம்+கொடி. Arjuna, as having a monkey banner; [குரங்குக் கொடியை யுடையவன்] அருச்சுனன். (பிங்.) |
| வானரகதி | vāṉara-kati n. <>vānara+. Monkey-like pace of a horse, one of five acuva-kati, q.v.; அசுவகதி ஜந்தனுள் குரங்கைப் போல நடக்கும் நடை. (திவா.) |
| வானரநேயம் | vāṉara-nēyam n. cf. vānara-priya. Silvery-leaved ape-flower. See பழமுண்ணிப்பாலை. (மலை.) |
| வானரப்பகை | vāṉara-p-pakai n. <>வானரம்+. Crab; நண்டு. (சங். அக.) |
| வானரம் | vāṉaram n. <>vānara. Ape, monkey; குரங்கு. வானர முகள (சீவக. 1168). |
| வானரமகள் 1 | vāṉara-makaḷ n. <>வானரம்+. Female monkey; பெண்குரங்கு. வானரமகளி ரெல்லாம் வானவர் மகளிராய்வந்து (கம்பரா. திருமுடி. 7). |
| வானரமகள் 2 | vāṉ-aramakaḷ n. <>வான்1+ Celestial damsel; வானுலகத்துப்பெண். வானர மகள்கொல்லோ (இறை. 2, உரை, பக். 32). |
| வானரமங்கை | vāṉ-aramaṅkai n. <>id.+. See வானரமகள்2. வானரமங்கையரென வந்தணுகும் மவள் (திருக்கோ. 371). . |
| வானரேந்திரன் | vāṉarēṉtiraṉ n. <>vāna-rēndra. (யாழ். அக.) 1. Hanumāṉ; அனுமான். 2. Sugrīva; |
| வானலம் | vāṉalam n. <>vānala. Basil; துளசி. (யாழ். அக.) |
| வானவர்கோன் | vāṉavar-koṉ n. <>வானவர்+கோன்1. Indra, as king of the gods; இந்திரன். வானவர்கோன் . . . வணங்குந் தொழிலானை (திவ். இயற். 2, 17). |
| வானவர்நாடி | vāṉavar-nāṭi n. <>id.+நாடு. See வானரமகள்2. (திருமந். 1058.) . |
| வானவர்முதல்வன் | vāṉavar-mutalvaṉ n. <>id.+. Brahmā, as the first among the gods; பிரமன். (திவா.) |
| வானவர்முதுவன் | vāṉavar-mutuvaṉ n. <>id.+. 1. Brahmā; பிரமன். (பிங்.) 2. Cēra king; |
| வானவரம்பன் | vāṉa-varampaṉ n. <>வானம்1+வரம்பு. Cēra king; சேரன். வான வரம்பனை நீயோ பெரும (புறநா. 2). |
| வானவருறையுள் | vāṉavar-uṟaiyuḷ n. <>வானவர்+. Temple; கோயில். (திவா.) |
| வானவல்லி | vāṉa-valli n. <>வானம்1+. Streak or flash of lightning; மின்னற்கொடி. (சங். அக.) |
| வானவன் | vāṉavaṉ n. <>வான்1. 1. Celestial being; தேவன். நான்முகன் முதலா வானவர் தொழுதெழ (திருவாச. 4, 1). 2. Brahmā; 3. Indra; 4. Sun; 5. Cēra king; |
| வானவில் | vāṉa-vil n. <>வானம்1+. 1. Rain-bow, one of karantuṟaikōḷ, q.v.; கரந்துளைகோள்களிலொன்றான இந்திரவில். மதிப்புறங்கவைஇய வானவிற் போல (பெருங். இலாவாண. 19, 81). 2. (Jaina.) The first outer wall of the temple of Arhat, in camava-caraṇam, known as tūlicālam and having the splendour of a rainbow; |
| வானவூர்தி | vāṉa-v-ūrti n. <>id.+. Aerial car; ஆகாயவிமானம். வலவனேவா வானவூர்தி (புறநா. 27). |
| வானவெளி | vāṉa-veḷi n. <>id.+. Open quadrangle in a house; திறந்த வெளியாயிருக்கும் வீட்டின் உள்முற்றம். Loc. |
| வானாசி | vāṉāci n. prob. vākucī. Seed of scurfy pea; காற்போகரிசி. (மலை.) |
| வானாடு | vāṉāṭu n. <>வான்1+நாடு. 1. Svarga; சுவர்க்கம். வானாடும் மண்ணாடும் (திவ். பெரியதி. 4, 1, 3). 2. Heaven; |
| வானி 1 | vāṉi n. perh. id. 1. Canopy; மேற்கட்டி. (பிங்.) 2. Large banner, flag; 3. Tent; 4. The river Amrāvatī; 5. The river Bhavānī. 6. A tree; 7. Paper kite; 8. Streak of lightning; |
