Word |
English & Tamil Meaning |
|---|---|
| விக்ரமம் | vikramam n. See விக்கிரமம். திருவிக்ரமமின்று படும்படியே (தக்கயாகப். 215). . |
| விக்கல் | vikkal n. <>விக்கு-. cf. hikkā. [T. vekkillu K. bikkalu M. ekkil.] Hiccup; தொண்டை விக்குகை. நெஞ்சே விக்கல் வராது கண்டாய் (அருட்பா, vi, நெஞ்சொடுகிள. 10). |
| விக்கல்மாந்தம் | vikkal-māntam n. <>விக்கல்+. A kind of convulsion attended with hiccup, common among children; குழந்தைகளுக்கு விக்கலுடன் வரும் ஒருவகை மாந்தநோய். |
| விக்கனம் | vikkaṉam n. See விக்கினம். விக்கனங்க ளந்தொண்டர்க் கடாமைச் சென்றாண்டருள் (மருதூரந். 28). . |
| விக்கிதம் | vikkitam n. A pace of a horse, one of paca-tārai, q.v.; பஞ்சதாரைகளுள் ஒன்றான குதிரைநடை. (பு. வெ. 12, வென்றிப். 13, உரை.) |
| விக்கியாதம் | vikkiyātam n. <>vi-khyāta. Fame; கீர்த்தி. (சங். அக.) |
| விக்கியாதன் | vikkiyātaṉ n. <>vī-khyāta. Well-known person; famous man; கீர்த்தி வாய்ந்தவன். (யாழ். அக.) |
| விக்கியாதி | vikkiyāti n. <>vi-khyāti. See விக்கியாதம். (யாழ். அக.) . |
| விக்கியாபனம் | vikkiyāpaṉam n. <>vijāpana. See விஞ்ஞாபனம். (யாழ். அக.) . |
| விக்கியானம் | vikkiyāṉam n. <>vi-jāna. See விஞ்ஞானம். (சங். அக.) . |
| விக்கியானி | vikkiyāṉi n. <>vi-jānin. Learned person; கல்வியாளன். |
| விக்கிரகம் | vikkirakam n. <>vi-graha. 1. Figure, shape, form, image; உருவம். (பிங்.) 2. Idol; 3. Body; 4. Likeness; 5. (Gram.) Separation of a compound word into its component parts; 6. Enmity, one of aracaraṟu-kuṇam, q.v.; 7. Fight, battle; |
| விக்கிரகவணக்கம் | vikkiraka-vaṇakkam n. <>விக்கிரகம்+. Idol-worship, idolatry; தெய்வபிம்பங்களை வைத்துப் பூசிக்கை. |
| விக்கிரகாராதனை | vikkirakārātaṉai n. <>vigraha+ārādhanā. See விக்கிரகவணக்கம். . |
| விக்கிரம | vikkirama n. <>vi-krama. The 14th year of the Jupiter cycle; ஆண்டு அறுபதனுள் பதினான்காவது. |
| விக்கிரமசகம் | vikkirama-cakam n. <>vikrama+. See விக்கிரமசகாப்தம். (பஞ்.) . |
| விக்கிரமசகாப்தம் | vikkirama-cakāptam n. <>id.+. The era of Vikkiramātittiyaṉ which begins in 57 B. C.; கி.மு. 57இல் தொடங்குவதும் விக்கிரமாதித்தியன் பெயரால் வழங்குவதுமான ஆண்டுமானம். |
| விக்கிரமசிங்கன் | vikkirama-ciṅkaṉ n. <>id.+. See விக்கிரமார்க்கன். (W.) . |
| விக்கிரமசேனன் | vikkirama-cēṉaṉ n. <>id.+. See விக்கிரமார்க்கன். (W.) . |
| விக்கிரமசோழன் | vikkirama-cōḻaṉ n. <>id.+. A Cōḻa king who reigned during the early part of the 12th C.; 12ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலாண்ட ஒரு சோழவரசன். |
| விக்கிரமசோழனுலா | vikkirama-cōḻaṉ-ulā n. <>விக்கிரமசோழன்+. An ulā poem by Oṭṭakkūttar on Vikkirama-cōḻaṉ; விக்கிரம சோழன்மீது ஒட்டக்கூத்தர் இயற்றிய உலாப்பிரபந்தம். |
| விக்கிரமம் | vikkiramam n. <>vi-krama. 1. Valour, courage, heroism, prowess; பராக்கிரமம். உன்னுடைய விக்கிரம மொன்றொழியாமல் (திவ். பெரியாழ். 5, 4, 6). 2. Great physical strength; 3. Cleverness; 4. Stepping; |
| விக்கிரமன் 1 | vikkiramaṉ n. <>vi-krama. 1. Man of valour; warrior; வீரன். மேதிச்சென்னி விக்கிரமன் (திருவாத. பு. திருவம்பல. 39). 2. See விக்கிரமார்க்கன். விக்கிரமசகம். |
| விக்கிரமன் 2 | vikkiramaṉ n. <>Tri-vikrama. See திரிவிக்கிரமன். (தக்கயாகப். 611, உரை.) . |
| விக்கிரமாதித்தவருஷம் | vikkiramātitta-varuṣam n. <>vikramāditya+. See விக்கிரமசகாப்தம். (W.) . |
