Word |
English & Tamil Meaning |
|---|---|
| வானி 2 | vāṉi n. <>vāhinī. Army; படை. (பிங்.) பாண்டவர் வானி குலைந்தவே (சேதுபு. இராமதீ. 34). |
| வானி 3 | vāṉi n. <>yavānī. Bishop's weed. See ஓமம்1. |
| வானிதம் | vāṉitam n. prob. phāṇita. Fine sugar; மணல் போன்று நுண்ணிதாயிருக்குஞ் சர்க்கரை. (நாமதீ¦ப. 409.) |
| வானிதி | vāṉiti n. Realgar. See மனோசிலை. (சங். அக.) |
| வானியம் | vāṉiyam n. <>vānya. Tree; மரம். (யாழ். அக.) |
| வானிரியம் | vāṉiriyam n. Pink-tinged white sticky mallow. See பேராமுட்டி. (சங். அக.) |
| வானிழல் | vāṉiḻal n. <>வான்1+நிழல். Voice from heaven. See அசரீரி, 2. வெருளின் மெய்ம்மொழி வானிழல் கூறிய பொருளி னாகும் (பெரியபு. பாயி. 9). |
| வானிற்கெற்பத்தி | vāṉiṟ-keṟpatti n. prob. id.+ கெற்பம். Pearl oyster; முத்துச்சிப்பி. (யாழ். அக.) |
| வானிறை | vāṉiṟai n. <>id.+நிறை1-. Rain-laden cloud; நீர்நிறைந்த மேகம். சாய னினது வானிறை யென்னும் (பரிபா. 2, 56). |
| வானீரம் | vāṉīram n. <>vānīra. Common rattan of South India. See வஞ்சிக்கொடி. (பிங்.) |
| வானீளம் | vāṉīḷam n. <>வால்2+நீளம். Length of a house. See வால்வீச்சு. மனைவானீளத்துக்குக் கிழக்கும் (S. I. I. iii, 214). |
| வானுலகம் | vāṉ-ulakam n. <>வான்1+. See வானுலகு. . |
| வானுலகு | vāṉ-ulaku n. <>id.+. 1. Celestial world, Svarga; சுவர்க்கம். (பிங்.) 2. Heaven; |
| வானேறு | vāṉ-ēṟu n. <>id.+ ஏறு3. Thunderbolt; இடியேறு. வானேறு புரையுநின் (புறநா. 265). |
| வானோங்கி | vāṉ-ōṅki n. <>id.+ ஒங்கு-. Banyan. See ஆல்1, 2. (நாமதீப. 281.) |
| வானோர் | vāṉōr n. <>id. Celestials; தேவர். வானோர் தங்கள் வடிவின் (சிலப். பதிகம், 52). |
| வானோர்க்கிறை | vāṉōrkkiṟai n. <>வானோர்+இறை1. See வானோர்கோமான். (உரி. நி.) . |
| வானோர்கிழவன் | vāṉōr-kiḻavaṉ n. <>id.+. See வானோர்கோமான். வானோர் கிழவனின் வரம்பின்று பொலிய (பெருங். நரவாண. 4, 55). . |
| வானோர்கோமான் | vāṉōr-kōmāṉ n. <>id.+. Indra; இந்திரன். (சூடா.) |
| வானோர்மாற்றலர் | vāṉōr-māṟṟalar n. <>id.+. (யாழ். அக.) 1. Asuras; அசுரர். 2. Rākṣasas; |
| வானோர்முதல்வன் | vāṉōr-mutalvaṉ n. <>id.+. 1. Brahmā, as first among the celestials; பிரமன். (சூடா.) 2. See வானோர்கோமான். |
| வானோர்முதுவன் | vāṉōr-mutuvaṉ n. <>id.+. 1. See வானவர்முதுவன், 1. (நாமதீப. 55.) . 2. Cēra; |
| வாஜபேயம் | vājapēyam n. <>vājapēya. A Vēdic sacrifice. See வாசபேயம். |
| வாஜீப் | vājīp n. <>U. wājib. 1. Excuse, putting off; போக்கு. (C. G.) 2. Propriety of conduct. |
| வாஜீப்சொல்(லு) - தல் | vājīp-col- v. intr. <>வாஜீப்+. To put off payment of a debt or demand with some excuse; கொடுக்க வேண்டிய பாக்கித்தொகைக்குப் போக்குக் கூறுதல். |
| வாஸ்தவம் | vāstavam n. <>vāstava. Reality, truth; மெய்ம்மை. தர்ப்பணத்தினிற் களிம்பு வாஸ்தவம் (கைவல். சந். 69). |
| வாஸ்து | vāstu n. <>vāstu. 1. Housesite, plot of ground, house; மனை. 2. See வாஸ்துபுருஷன். |
| வாஸ்துசாந்தி | vāstu-cānti n. <>id.+. A ceremony to appease vāstu-puruṣaṉ: வாஸ்துபுருஷனைக் குறித்துச்செய்யுஞ் சாந்திவகை. |
| வாஸ்துபுருஷன் | vāstu-puruṣaṉ n. <>id.+. The archetype or ideal pattern of a house, personified as a deity; tutelary deity of a house; கிருகதேவதை. |
| வி 1 | vi. . The compound of வ் and இ. . |
| வி 2 | vi part. 1. Ending of the verbal noun; தொழிற்பெயர் விகுதி. 2. Suffix indicating form of a causative verb; |
| வி 3 | vi <>vi. n. 1. Heaven; விசும்பு. (யாழ். அக.) 2. Bird; 3. Wind; 4. Eye; 5. Direction; 6. Beauty; Prefix signifying privation, opposition, change, abundance, etc; |
