Word |
English & Tamil Meaning |
|---|---|
| விகவெனல் | vikaveṉal n. Expr. of swift movement; விரைந்து செல்லுதற் குறிப்பு. விகவென்று வந்தான். Loc. |
| விகற்பக்காட்சி | vikaṟpa-k-kāṭci n. <>விகற்பம்+. Differentiated knowledges. See சவிகற்பக்காட்சி. (யாழ். அக.) |
| விகற்பத்தின்முடித்தல் | vikaṟpattiṉmuṭittal n.<>id.+. (Gram.) A literary device by which the same conclusion is reached in manifold ways, one of 32 utti, q.v.; உத்திமுப்பத்திரண்டனுள் விளங்குதற்பொருட்டுப் பலதிறப்பட்ட வாய்பாட்டாற் பொருளை முடித்துக்காட்டும் உத்திவகை. (நன். பொது. 14.) |
| விகற்பநடை | vikaṟpa-naṭai n. <>id.+. (Rhet.) A kind of fancy verse; மிறைக்கவிவகை. (பிங்.) |
| விகற்பம் | vikaṟpam n. <>vi-kalpa. 1. Variety, diversity; difference; வேறுபாடு. பெயர்வரிய சங்கற்ப விகற்பமெலாம் பின்னிலலாம் (திருக்காளத். பு. ஞானயோக. 33). 2. Difference of opinion, misunderstanding; 3. (Log.) Differentiated knowledge. 4. False notion or fancy; 5. Doubt as to the nature of an object perceived; 6. Mistake, error; 7. (Gram.) Permissive option or alternative; 8. Kind, species; |
| விகற்பமில்லாக்காட்சி | vikaṟpam-illā-k-kāṭci n. <>விகற்பம்+இன்-மை+. (Log.) Indefinite knowledge in which only the bare existence of a thing is apprehended. See நிர் விகற்பக்காட்சி. பொருளினுண்மை மாத்திரத்தின் விண்டலில்லா வறிவாகும் விகற்பமில்லாக் காட்சியே (சி. சி. அளவை, 3). |
| விகற்பவுணர்வு | vikaṟpa-v-uṇarvu n. <>id.+. Differentiated knowledge. See சவிற்பக்காட்சி. ஐந்துண் டவ்விகற்பவுணர்வினுக்கு (சி. சி. அளவை, 3). |
| விகற்பி - த்தல் | vikaṟpi- 11 v. <>vi-kalpa. tr. 1. To discriminate and discern; பகுத்தறிதல். 2. To differentiate; 1. To differ; 2. (Gram.) To admit of an option or alternative; |
| விகற்பு | vikaṟpu n. <>id. 1. Diversity. See விகற்பம், 1. மதிவிகற்பாற் பிணங்குஞ் சமயம் பலபல வாக்கி (திவ். இயற். திருவிருத். 96). 2. (Gram.) See விகற்பம், 7. ஏவல்முன் வல்லின மியல்பொடு விகற்பே (நன். 161). |
| விகாசம் | vikācam n. <>vi-kāsa. 1. Blossoming; மலர்ச்சி. புஷ்ப விகாசம். 2. Bloom, as of countenance; 3. Evolution, one of two māyātarumam, q.v.; |
| விகாதம் | vikātam n. <>vi-ghāta. 1. Obstacle; impediment; hindrance; opposition; இடையூறு. வரும்விகாதத்தைத் தீர்த்து (இராமநா. ஆரணி. 7). 2. Destruction, ruin; failure; |
| விகாதி - த்தல் | vikāti- 11 v. tr. <>id. To impede, hinder, obstruct, oppose; தடை செய்தல். (யாழ். அக.) |
| விகாய் | vikāy n. A tree; ஒருமரம். (சங். அக.) |
| விகாரசன்னி | vikāra-caṉṉi n. <>விகாரம்1+சன்னி1. Epilepsy, convulsions; இழுப்புநோய் வகை. (W.) |
| விகாரப்புணர்ச்சி | vikāra-p-puṇarcci n. <>id.+. (Gram.) Combination of words with augmentation, change or elision of letters, opp. to iyalpu-puṇarcci; நிலைமொழிவருமொழிகளின் முதலிடைகடைகளில் வரும் தோன்றல் திரிதல் கெடுதல்களாகிய சந்திவேறுபாடு. (நன். 154.) |
| விகாரம் 1 | vikāram n. <>vi-kāra. 1. Change, alteration, transformation; வேறுபாடு. விலங்கிய விகாரப்பாட்டின் (கம்பரா. கடறாவு. கடவுள்வா.). 2. (Gram.) Change in the form of words, allowed as poetic licence. 3. (Gram.) Change in the letters of words in canti, of three kinds, viz., tōṉṟal, tirital, keṭutal; 4. Perturbation, agitation; 5. Distortion, contortion; ugliness; 6. Evil disposition, of eight kinds, viz., kāmam, kurōtam, lōpam, mōkam, matam, māṟcariyam, iṭumpu, acūyai; 7. Lasciviousness; |
