Word |
English & Tamil Meaning |
|---|---|
| விடாய் 2 - த்தல் | viṭāy- 11 v. intr. <>விடாய்1. 1. To thirst; தாகமெடுத்தல். விடாய்ந்த காலத்திலே வாய் நீரூறுதற்கு (மலைபடு. 136, உரை.) 2. To grow faint and weary; to be tried out; 3. To long for; |
| விடாய் 3 | viṭāy n. prob. விடை1. Holiday; விடுமுறை நாள். (W.) |
| விடாய் 4 - த்தல் | viṭāy- 11 v. intr. <>Hind. badāi. To be haughty; to be stiff with pride; கருவங்கொள்ளுதல். Loc. |
| விடாய்ப்பு | viṭāyppu n. <>விடாய்2-. 1. Thirsting; தாகமெடுக்கை. 2. Being tired; 3. Desire, longing; |
| விடாயன் | viṭāyaṉ n. <>விடாய்1. 1. Thirsty person; தாகமுள்ளவன். விடாயன் தண்ணீர்ப் பந்தலிலே வரக்கொள்ளச் சாலுருண்டு கிடந்தாற் போலே (ஈடு, 1, 4, 4). 2. Man faint with fatigue; 3. cf. விடையன்2. Sensualist; voluptuary; |
| விடாயாற்றி | viṭāy-āṟṟi n. <>id.+ ஆற்று-. 1. Rest, repose, as relief from weariness; இளைப்பாறல். 2. That which affords rest or relief; 3. Festivities within the temple following the main festival, when the moveable image of the deity is supposed to take rest; |
| விடாயுதம் | viṭāyutam n. <>viṣāyudha. Snake, serpent; பாம்பு. (சங். அக.) |
| விடாயெடு - த்தல் | viṭāy-eṭu- v. intr. <>விடாய்1+. See விடாய்2-. தண்ணீர் விடாயெடுத்தால் (இராமநா. யுத்த. 59). . |
| விடாரகம் | viṭārakam n. <>vidāraka. See விடாலகம். (யாழ். அக.) . |
| விடாலகம் | viṭālakam n. <>vidālaka. 1. Cat; பூனை. (சூடா.) 2. Yellow orpiment. |
| விடாலம் | viṭālam n. <>vidāla. 1. See விடாலகம், 1. (சங். அக.) . 2. Eye-ball; |
| விடானி | viṭāṉi n. prob. viṣāṇī. Square spurge. See சதுரக்கள்ளி. (சங். அக.) |
| விடி 1 - தல் | viṭi- 4 v. intr. <>vyuṣṭi. [T. vidiyu.] 1. To dawn; to break, as the day; உதயமாதல். வெஞ்சுடர் தோன்றி விடிந்ததை யன்றே (சீவக. 219). 2. To come to an end; to be ended or finished; 3. To see better days; |
| விடி 2 | viṭi n. <>விடி1-. See விடிகாலை. விடி பகலிரவென் றறிவரிதாய (திவ். பெரியதி. 4, 10, 8). . |
| விடி 3 | viṭi n. <>விடு1-. 1. [T. vidi, K. Tubidi, M. vidu.] Odd item, not one of a set; single article; தனிப்பட்டது. (C. G.) 2. Curtain; |
| விடி 4 - த்தல் | viṭi- 11 v. intr. <>விட்டி-. To void excrement; மலங்கழித்தல். |
| விடி 5 | viṭi n. [M. vidi.] Sebestan. See நறுவிலி, 4. (M. M. 802.) |
| விடிகாலை | viṭi-kālai n. <>விடி1-+காலை1. Break of day; பொழுது விடிகின்ற நேரம். Colloq. |
| விடிகுண்டு | viṭi-kuṇṭu n. <>விடி2+குண்டு1. Gun fired at the break of day, as time-signal; போது விடிதற்குறியாக இதும் அதிர்வெடி. |
| விடிசங்கு | viṭi-caṅku n. <>id.+சங்கு2. Conch blown at the dawn of day, especially in the month of Mārkaḻi; மார்கழி மாதத்து உதயகாலத்து ஊதப்பதும் சங்கம். Loc. |
| விடிநிலா | viṭi-nilā n. <>id.+. Moon rising in the small hours of the morning; பின்னிரவில் உதிக்குஞ் சந்திரன். (W.) |
| விடிமீன் | viṭi-mīṉ n. <>id.+மீன்1. See விடிவெள்ளி. விடிமீன் முளைத்த தரளம் (கல்லா. 17, 12). . |
| விடியல் 1 | viṭiyal n. <>விடி1-. Break of day; dawn. See விடிகாலை. வைகுறு விடியன் மருதம் (தொல். பொ. 8). |
| விடியல் 2 | viṭiyal n. <>விடி4-. 1. Voiding excrement; மலவிசர்ச்சனம். 2. Purging; |
| விடியல் 3 | viṭiyal n. <>விடு1-. cf. வெடி. Open space or place; வெளியிடம். (பிங்.) |
| விடியல்வைகறை | viṭiyal-vaikaṟai n. <>விடியல்1+. Twilight before break of day; பொழுது விடிதற்கு முன்னர்த்தாகிய வைகறை. பிரம்பின் றிரள்கனி பெய்து விடியல் வைகறை யீடூஉ மூர (அகநா. 196). |
| விடியற்கருக்கல் | viṭiyaṟ-karukkal n. <>id.+. Darkness preceding break of day; விடிதற்கு முன்னுள்ள இருட்பொழுது. |
