Word |
English & Tamil Meaning |
---|---|
இறைக்குத்து | iṟai-k-kuttu n. <>இறை1+. Fixed gaze of the eyes at the approach of death; சாகுந் தருணத்திற் கண்விழி அசைவற்று நிற்கை. Loc. |
இறைகாவல் | iṟai-kāval n. <>இறை2+. Police cess, an ancient rate paid towards the cost of watch and ward in a village; தலையாரிக்குரிய வரி. (I.M.P. Tp. 121-2.) |
இறைகிழவன் | iṟai-kiḻavaṉ n. <>id.+. Ruler endowed with all kingly qualities; அரசனாதற்றன்மையையுடையவன். நில்லாத் தானை யிறைகிழவோயே (பதிற்றுப். 54, 17). |
இறைகுத்து - தல் | iṟai-kuttu- v. tr. <>இறை2+. To dip the finger into a fluid to ascertain its depth; விரலிறையா லளவிடுதல். (W.) |
இறைகூடு - தல் | iṟai-kūṭu- v. tr. <>இறை1+. To rule over, exercise authority; அரசாளுதல். (பொருந. 79.) |
இறைகூடை | iṟai-kūṭai n. <>இறை5-+. Water-basket made of palmyra leaves for baling out water for irrigation purposes; நீரிறைக்கும் கூடை. (திவா.) |
இறைகூர் - தல் | iṟai-kūr- v. intr. <>இறை2+. To dwell, abide; தங்குதல். (ஐங்குறு. 142.) |
இறைச்சி | iṟaicci n. [T. eṟaci, M. iṟacci.] 1. Flesh; மாமிசம். இறைச்சிகுன் றாக்கினானே (சீவக. 801) 2. See இறைச்சிப்பொருள். 3. Distinctive features of each of the ain-tiṇai relating to five tracts of land; 4. That which is agreeable, pleasing; |
இறைச்சிகுத்தி | iṟaicci-kutti n. <>இறைச்சி+. Spit, rod for holding meat while roasting; இறைச்சியைக்குத்தி வாட்டுங் கருவி. (W.) |
இறைச்சிப்பொருள் | iṟaicci-p-poruḷ n. <>id.+. (Akap.) Suggestive meaning conveyed indirectly by reference to the distinctive features of the tract of land; கருப்பொருளினுள்ளே கொள்ளும் பொருள். (தொல். பொ. 299.) |
இறைச்சிப்போர் | iṟaicci-p-pōr n. <>id.+ போர். The body, considered as a mass of flesh; உடம்பு. இறைச்சிப்போ ரிதனை யென்றான் (சீவக. 1585). |
இறைசூதன் | iṟai-cūtaṉ n. <>இறை1+ sūta. Brahmā so called from his having been, on one occasion, the charioteer of šiva; பிரமன். (பிங்.) |
இறைஞ்சலர் | iṟaicalar n. <>இறைஞ்சு-+அல் neg. Enemies, foes or adversaries, as those who do not yield or submit; பகைவர். இறைஞ்சலர்க் கெழிலியே றனையாண் (பாரத. பதினேழா. 241) |
இறைஞ்சார் | iṟaicār n. <>id.+ ஆ neg.+ See இறைஞ்சலர். . |
இறைஞ்சி | iṟaici n. <>id. Bark of a certain tree, used for clothing. See மரவுரி. (திவா.) . |
இறைஞ்சு - தல் | iṟaicu- 5 v. intr. 1. To hang low, as a cluster of coconuts; to bow, bend; தாழ்தல். குலையிறைஞ்சிய கோட்டாழை (புறநா. 17, 9). 2. To fall down; -tr To make obeisance to; to pay reverence; to worship by bowing or prostrating; |
இறைப்பாரம் | iṟai-p-pāram n. <>இறை1+. Burden of government, responsibility of the king for the welfare of his subjects; பல்லுயிரைக் காக்கின்ற அரசன் பொறுப்பு. இறைப்பார மெல்லாம் . . . பூட்டி (சீவக. 475). |
இறைப்பிளவை | iṟai-p-piḷavai n. <>இறை2+. Eruption in the finger joints or between the fingers at the roots; கையிறையில்வரும் ஒரு வகைப் புண். |
இறைப்பு | iṟaippu n. <>இறை5- Drawing out and pouring water; நீர் இறைக்கை. |
இறைப்புப்பட்டரை | iṟaippu-p-paṭṭarai n. <>இறைப்பு+. Land exclusively irrigated from wells; கிணற்றுப்பாய்ச்சலுள்ள நிலம். (C.G.) |
இறைபயப்பது | iṟai-payappatu n. <>இறை2+ Indirect answer to questions; குறிப்பாகப் பொருளை விளைக்கும் விடை. (தொல். சொல். 13.) |
இறைமகன் | iṟai-makaṉ n. <>இறை1+. 1. King; அரசன். இன்னுயிராகி நின்றா னிறைமகன் (சூளா. நகர. 31). 2. Ganēša, son of iṟai, i.e. šiva; |
இறைமரம் | iṟai-maram n. <>இறை5-+. 1. Three poles united at the top to support a basket in irrigation; இறைகூடை தாங்கும் மரம். (W.) 2. Well-sweep; 3. Long, boat-shaped wooden trough suspended for watering fields; |
இறைமை | iṟai-mai n. <>இறை1. 1. Kingly superiority, eminence, celebrity; தலைமை. வீரங் குறைவரே யிறைமைபூண்டோர் (கம்பரா. மூலபல. 46). 2. Government, dominion; 3. Divinity, divine nature; |