Word |
English & Tamil Meaning |
---|---|
இறைமையாட்டி | iṟaimai-y-āṭṭi n. இறை-மை+ஆள்-. 1. Lady, mistress; தலைவி. (திவா.) 2. Queen; |
இறைமொழி | iṟai-moḻi n. <>இறை2+. Answer, reply; மறுமொழி. அன்பர் கேட்க விறை மொழி மொடுத்து (திருவிளை. மண். 112). |
இறையமன் | iṟai-yamaṉ n. <>இறை1+. Saturn whose elder brother is Yama; சனி. (பரிபா. 11, 8.) |
இறையவன் | iṟaiyavaṉ n. <>இறை-மை. 1. Chief; தலைவன். 2. God; 3. A leader among the gods; |
இறையனார் | iṟaiyaṉār n. <>id. A poet in the time of the third Saṅgam at Madura, popularly identified with šiva; கடைச்சங்கத்தார் காலத்துப் புலவருள் ஒருவர். (குறுந். 2.) |
இறையனாரகப்பொருள் | iṟaiyaṉār-aka-p-poruḷ n. <>இறையனார்+. A grammar on Akapporuḷ by iṟaiyaṉār; இறையனாரியற்றிய களவியல். |
இறையாயிரங்கொண்டான் | iṟai-y-āyi-raṅ-koṇṭāṉ n. <>இறை2+. Large granary as in Srīraṅgam temple and in the Ramnad palace, in which paddy spread over the floor to the thickness of one iṟai or an inch would amount to 1,000 kalam; ஓர்விரலிறைக்கு ஆயிரங்கலநெற் கொள்ளுங் களஞ்சியம். (கோயிலொ. 63.) |
இறையால் | iṟaiyāl n. <>Port. real. [M. iṟayāl.] 1. An ancient coin of Ceylon of the value of 1s. 6d.; பழைய இலங்கைநாணயவகை. (J.) 2. Sum of money amounting to twelve annas; |
இறையான் | iṟaiyāṉ n. <>இறை1. šiva; சிவன். (திவ். பெரியதி. 5, 1, 8.) |
இறையிலி | iṟai-yili n. <>இறை2 + இல் 2. [M. iṟayali.] Land that is tax-free; வரி நீக்கப் பட்ட நிலம். அறத்திற்குவிட்ட இறையிலி நிலங்களும் (சீவக. 76, உரை). |
இறையிழிச்சு - தல் | iṟai-y-iḻiccu- v. intr. <>id.+. See இறையிழித்து-. இறையிழிச்சிச் சிலா லேகைசெய்து கொடுத்தோம். (S.I.I. iii, 6). |
இறையிழித்து - தல் | iṟai-y-iḻittu- v. intr. <>id.+. To exempt from payment of taxes; வரி நீக்குதல். இறையிழித்திச் சிலாலேகை செய்துகொடுத்தோம். (S.I.I. iii, 4). |
இறையுணர்வு | iṟai-y-uṇāvu n. <>இறை1+. Knowledge concerning the Supreme Being; பதிஞானம். (பிங்.) |
இறையெண்ணு - தல் | iṟai-y-eṇṇu- v. tr. <>இறை2+. To count by the joints or lines on the fingers; விரலியறையாற் கணக்கிடுதல். (W.) |
இறையோன் | iṟaiyōṉ n. <>இறை1. 1. God; கடவுள். (திவ். திருவாய். 1, 3, 2.) 2. šiva; |
இறைவரை | iṟai-varai n. <>இறை2+. Moment of time; காணப்பொழுது. இதோ ரிறைவரை யாகும் (கந்தபு. மோன. 8). |
இறைவன் 1 | iṟaivaṉ n. <>இறு1. God, the all-abiding; எப்பொருளிலுந் தங்குதலுடைய கடவுள். (சிலப். 10, 184, உரை.) |
இறைவன் 2 | iṟaivaṉ n. <>இறை1. 1. Chief, master, superior; தலைவன். இவ்வூ ரிறைவனை யிழந்து (சிலப். 22, 144). 2. Supreme God; 3. Viṣṇu; 4. šiva; 5. Brahmā; 6. King; 7. Husband; lord, in relation to a wife; 8. Elder, venerable person; 9. Preceptor; 10. Wiry indigo. See சிவனார்வேம்பு. (மூ. அ.) |
இறைவனிம்பம் | iṟaivaṉimpam n. <>இறைவன்2+ nimba. Wiry indigo. See சிவனார் வேம்பு. (மலை.) . |
இறைவனெண்குணம் | iṟaivaṉ-eṇ-ku-ṇam n. <>id.+. The eight attributes of God, viz., பவமின்மை, இறவின்மை, பற்றின்மை, பெயரின்னை, உவமையின்மை, வினையின்மை, குறைவிலறிவுடைமை, கோத்திரமின்மை. (பிங்.) |
இறைவாகனம் | iṟai-vākaṉam n. <>இறை1+. Bull, šiva's vehicle; இடபம். (பிங்.) |
இறைவி | iṟaivi n. fem. of. இறைவன்2. 1. Pārvatī; உமை. (பிங்.) 2. Goddess Durga; 3. Mistress, lady, queen; |
இறைவிழுத்து - தல் | iṟai-viḻuttu- v. intr. <>இறை2+. To exempt from payment of taxes; வரிநீக்குதல். சந்திராதித்தவரை இறைவிழுத்திக்கொடுத்தோம். (S.I.I. iii, 80). |
இறைவை 1 | iṟaivai n. <>இறை5-. 1. Kind of basket; புட்டில். (திவா.) 2. Receptacle for drawing water for irrigation purposes, as a well basket; |
இறைவை 2 | iṟaivai n. <>இற-.+ Ladder; ஏணி. ஏறுதற்கமைத்த . . . இறைவையின் (இரகு. யாக. 104). |