Word |
English & Tamil Meaning |
---|---|
இன்ன | iṉṉa <>இ3. [M. iṉṉa.] adj. 1. Such; இத்தன்மையான. 2. Like, a sign of comparison; - pron. Such things; உவமவுருபு. (நன். 367.) |
இன்னணம் | iṉṉaṇam adv. <>இன்ன+வண்ணம் Thus; in such state; இவ்வாறு. ஈங்கிவளின்னண மாக (மணி. 8, 1). |
இன்னதல்லதிதுவெனமொழிதல் | iṉṉatallatitu-v-eṉa-moḻital n. <>இன்னது +. (Gram.) Making a definite statement about a thing where there is any room for doubt, that that is only this and not the other, one of 32 utti, q.v.; ஓர் உத்தி. (நன். 14.) |
இன்னது | iṉṉatu pron. <>இ3. 1. Such as this; இத்தன்மையுடையது. வளவயல் வைகலு மின்னதென்ப (சீவக. 64). 2. This thing; what follows; |
இன்னம் | iṉṉam adv. <>இன்னும். [K. innu, M. ini, Tu. nana.] See இன்னும். . |
இன்னமும் | iṉṉamum adv. Var. of இன்னும். See இன்னும். (கம்பரா. திருவடி. 59.) . |
இன்னயம் | iṉṉayam n. <>இன்1+நயம். Word of courtesy, of welcome; உபசாரவார்த்தை. (உரி. நி.) |
இன்னர் | iṉṉar n. <>இன்னல். Portent, foreboding; உற்பாதம். இன்ன லின்னரொடு (பரிபா.4, 19). |
இன்னல் | iṉṉal n. <>இன்ன்1+அல் neg. Un-pleasantness, trouble, pain, affliction; துன்பம். இன்னல்செ யிராவணன் (கம்பரா. மந்தரை. 39). |
இன்னன் | iṉṉaṉ n. <>இ3. See இன்னான்1. (பு. வெ. 244.) . |
இன்னா | iṉṉā n. <>இன்1+ஆ neg. 1. Those that cause misery; தீங்குதருபவை. (குறள், 32, அதி.) 2. Misery, distress; |
இன்னாங்கு | iṉṉāṅku n. <>இன்னாமை 1. Evil, hurt, injury; தீமை. இன்னாங்குசெய்வார் (நாலடி. 355). 2. Pain, remorse, suffering; 3. Aspersion, insult; harsh, cruel words; |
இன்னாங்கோசை | iṉṉāṅk-ōcai n. <>இன்னாங்கு+. Discord, harsh sound, cacophony; கடுமையான ஓசை. (திவா.) |
இன்னாதா - தல் | iṉṉātā- v. intr. <>இன்னாது+ஆ-. To suffer pain, to be miserable; துன்புறுதல். அவள் . . . இன்னாதாகிறாள் (ஈடு, 1, 4, 7). |
இன்னாது | iṉṉātu n. <>இன்னா-மை 1. Evil; தீது. பிறப்பின்னா தென்றுணரும் (நாலடி. 173). 2. Pain; |
இன்னாநாற்பது | iṉṉā-nāṟpatu n. <>id.+. An ancient didactic work by Kapilar consisting of 40 stanzas in each of which are mentioned certain outstanding causes of pain and suffering in general, one of patiṉeṇ-kīḻ-k-kaṇakku, q.v.; பதினெண்கீழ்க்கணக்குளொன்று. |
இன்னாப்பு | iṉṉāppu n. <>id. Sorrow, pain; துன்பம். இன்னாப்பாலே சொல்லுகிறார் (ஈடு, 5, 4, 3). |
இன்னாமை | iṉṉāmai n. <>இன்1+ஆ neg. Pain, distress, misfortune; துன்பம். இன்னாமை யின்ப மெனக்கொளின் (குறள், 630). |
இன்னார் | iṉṉār n. <>இன்னா-மை. Enemies; persons not agreeable; unfriendly people; பகைவர். இனியார்போன் றின்னாராய் (நாலடி, 378). |
இன்னாரினியார் | iṉṉār-iṉiyār n. <>இன்னார்+. 1. Foes and friends; பகைவரும் நண்பரும். துறவிகட்கு இன்னாரினியாரென்பதில்லை. 2. See இன்னாரினையார். Colloq. |
இன்னாரினையார் | iṉṉār-iṉaiyār n. <>இ3+. What sort of persons; such and such persons; இத்தன்மையுடையவர். இன்னாரினையாரென் றெண்ணுவா ரில்லைகாண் (திவ். நாய்ச். 7, 5). |
இன்னாலை | iṉṉālai n. Five-tubercled Spurge. See இலைக்கள்ளி. (மலை.) . |
இன்னான் 1 | iṉṉāṉ n. <>இ3. 1. Person of such a character; இத்தன்மையன். இனத்தானா மின்னா னெனப்படுஞ் சொல் (குறள், 453). 2. So and so; such a person. |
இன்னான் 2 | iṉṉāṉ n. <>இன்னா-மை. Tantaliser, Tormentor, persecutor; துன்பஞ்செய்பவன். புணர்வினின்னான் (ஐங்குறு. 150). |
இன்னிசை | iṉ-ṉ-icai n. <>இன்1+இசை. 1. Melody, harmony; இன்பவோசை. 2. Melody-type; 3. See இன்னிசைவெண்பா. (காரிகை, செய்யு. 4.) |
இன்னிசைகாரர் | iṉ-ṉ-icai-kārar n. <>இன்னிசை+. An ancient caste of bards; பாணர். (திவா.) |
இன்னிசைவெண்பா | iṉ-ṉ-icai-veṇpā n. <>id.+. Veṇpā of four lines in which the second line has four feet instead of three feet plus the taṉi-c-cīr; நான்கடியாய்த் தனிச்சீரின்றி வரும் வெண்பா. (காரிகை, செய். 4, உரை.) |
இன்னிசைவெள்ளை | iṉ-ṉ-icai-veḷḷai n. <>id.+. See இன்னிசைவெண்பா. (பிங்.) . |
இன்னிலை | iṉṉilai n. <>இல்1+நிலை. Life of a householder, home-life; கிருகஸ்தாச்சிரமம். (குறள், 45, உரை.) |