Word |
English & Tamil Meaning |
---|---|
இன்னினி | iṉṉ-iṉi adv. <>இனி + இனி. Now, even now, without a moment's delay; இப்பொழுதே. இன்னினியே செய்க வறவினை (நாலடி. 29). |
இன்னும் | iṉṉum adv. <>இனி+உம். 1. Still, yet; இவ்வளவு காலஞ் சென்றும். இன்னுந் தெரியவில்லை. 2. Again; 3. More than this; 4. Also, more than that, in addition to, in a conjunctive sense; |
இன்னுமின்னும் | iṉṉum-iṉṉum adv. <>இன்னும்+. More and more; மேன்மேலும். இன்னு மின்னுமெங் காம மிதுவே (பரிபா. 13, 64). |
இன்னுழி | iṉṉuḻi adv. <>இன்ன+உழி. In such a place; இன்ன இடத்து. இன்னுழி யகாது (தொல். பொ. 186, உரை). |
இன்னே | iṉṉē adv. <>இ3. 1. Now, at this moment; இப்பொழுதே. உற்றதின்னே யிடை யூறெனக்கு (சீவக. 226). 2. Here, in this place; 3. Thus, in this manner; |
இன்ஸாபு | iṉsāpu n. <>Arab. insaf. Justice; நியாயம். எனக்கு இன்ஸாபு செய்தால் போதும்; உபகாரமாகத் தாங்கள் ஒன்றும் செய்யவேண்டாம். Muham. |
இன்ஸான் | iṉsāṉ n. <>Arab. insan. Human being; மனிதன். தவறுவது இன்ஸானுக்கு இயற்கையே. Muham. |
இனக்கட்டு | iṉa-k-kaṭṭu n. <>இனம்+. 1. Bond of union between relatives; பந்துக்கட்டு. 2. Due respect among the several branches of a family; |
இனங்காப்பார் | iṉaṅ-kāppār n. <>id.+. Cowherds who protect cattle; கோவலர். இனங் காப்பார் குழறோன்ற (கலித். 143, 37). |
இனஞ்சனம் | iṉa-caṉam n. <>id.+. Kith and kin; relations; உற்றாருறவினர்.Colloq. |
இனத்தார்சனத்தார் | iṉattār-caṉattār n. <>id.+. See இனஞ்சனம் . |
இனத்தான் | iṉattāṉ n. <>id. Relative; உறவினன். Colloq. |
இனபந்து | iṉa-pantu n. <>id.+bandhu. Relative, connected by blood or marriage; சுற்றம். Colloq. |
இனம் | iṉam n. 1. [M. inam.] Class; group, division, kind; species; sort; வருக்கம். (நன். 91.) 2. Race, clan, tribe; 3. Comrades, associates; 4. Brotherhood, fellowship, society, company; 5. Pack, herd; 6. Associated items; 7. Ministers in council; 8. Equality; 9. Individual; |
இனம்பிரி - தல் | iṉam-piri- v. intr. <>இனம்+. To be separated from the class or company; துணைக்கூட்டத்தினின்று விலகுதல். |
இனமாற்றல் | iṉa-māṟṟal n. <>id.+. (Arith.) Reduction from one denomination to another; ஓரினக்கணக்கை மற்றோரினக்கணக்காக மாற்றுகை. |
இனமுறை | iṉa-muṟai n. <>id.+. Relationship of the same caste; ஒத்தசாதி. (C. G.) |
இனமொழி | iṉa-moḻi n. <>id.+. Indirect answer which is not a straight reply to the question asked, but a statement of something that may berelated to the subject of the question, as, for example, when questioned'Have you pulses to sell', to answer 'We have diamonds'; one of eightkind எண் வகை விடைகளுள் ஒன்று. (நன். 386.) |
இனமோனை | iṉa-mōṉai n. <>id.+. Consonantal alliteration in which the sounds of a class or group are repeated instead of, as usual, the same sound, of, three kinds, viz., வல்லினமோனை, மெல்லினமோனை, இடையினமோனை; இனவெழுத்தால் வரும் மோனை. (காரிகை, ஒழிபி. 6.) |
இனவரிக்காசு | iṉa-vari-k-kācu n. <>id.+. An ancient village rate; ஒரு பழையவரி. (I.M.P. Cg. 1068.) |
இனவழி | iṉa-vaḻi n. <>id.+. 1. Descent from the same line or ancestry; வமிசம்பரம்பரை. 2. Descent from the same breed, as of cattle; |
இனவழிக்கணக்கு | iṉa-vaḻi-k-kaṇakku n. <>id.+. Ledger; பேரேடு. |
இனவாரி | iṉa-vāri adv. <>id.+ U. wari. Distributively, according to items of different classes; இனம் இனமாய். |
இனவெதுகை | iṉa-v-etukai n. <>id.+. Rhyme in which the rhyming letters of the lines in a stanza are not the same, but are of the same class; this being of three kinds, viz., வல்லினவெதுகை, மெல்லினவெதுகை, இடையினவெதுகை; இனவெழுத்தால்வரும் எதுகை. (காரிகை, ஒழிபி. 6.) |