Word |
English & Tamil Meaning |
|---|---|
| விடுதலைப்பத்திரம் | viṭutalai-p-pattiram n. <>விடுதலை+. Release deed; deed of discharge, as of mortgage, etc.; சொத்திற் பிறர்க்கு உரிமையில்லை யென்பதை உறுதிபடுத்தும் சாசனம். |
| விடுதா - தல் [விடுதருதல்] | viṭu-tā v. <>விடு-+. tr. To send, as a present ; கொடுத்தனுப்புதல். சிறு தொட்டில் . . . உனக்குப்பிரமன் விடுதந்தான் (திவ். பெரியாழ். 1, 3, 1). -intr. To advance unchecked; |
| விடுதி | viṭuti n. <>id. [T. viddi K. bidadi M. vidudi.] 1. Lodging place; place of temporary residence; choultry; தங்குமிடம். விடுதியே நடக்கவென்று நவிலுவீர் (பாரத. சூது. 165). 2. See விடுதலம், 2. Loc. 3. That which is solitary, separated or companionless; 4. Leave, permission; |
| விடுதிப்பூ | viṭuti-p-pū n. <>விடுதி+பூ. See விடுபூ. . |
| விடுதிமாடு | viṭuti-māṭu n. <>id.+. See விடுகோலெருது. . |
| விடுதியாள் | viṭuti-y-āḷ n. <>id.+ஆள். 1. Unemployed person; வேலையில்லாதவன். Colloq. 2. Single man, man without any domestic ties or duties; |
| விடுதீட்டு | viṭi-tīṭṭu n. <>விடு-+தீட்டு. Deed of gift; தானபத்திரம். நாயனார் பண்டாரத்தார்க்கு விடுதீட்டுக் குடுத்த பரிசாவது (S. I. I. v, 105). |
| விடுது | viṭutu n. <>id. 1. cf. விழுது. 1. Aerial root falling down from branch of banyan tree; ஆலம்விழுது. 2. Sounding lead; 3. Plumb-line; |
| விடுதுறை | viṭu-tuṟai n. <>id.+. Place for pause in reading, singing, etc.; வாசிக்கும் போது நிறுத்திப்படிக்கும் இடம். (யாழ். அக.) |
| விடுதோல் | viṭu-tōl n. <>id.+தோல். Epidermis; மேற்றோல். நரம்பொடு விடுதோல் . . . கழன்று (மணி. 20, 59). |
| விடுந்தலைப்பு | viṭun-talaippu n. <>id.+. Front end of a cloth, the ornamented end of a saree ; சீலையின் முன்றானை. (W.) |
| விடுநகம் | viṭu-nakam n. <>id.+நகம். Clamp consisting of two sticks, an instrument of torture ; கிட்டிக்கோல். கேளாதாரை வடுக விடுநகமிட்டு (ஈடு, 4,8,6). |
| விடுநாண் | viṭu-nān n. <>id.+நாண். Girdle, cord for the waist; அரைஞாண். (ஈடு, 2, 5, 5.) |
| விடுநிலம் | viṭu-nilam n. <>id.+. Waste land; தரிசுநிலம். விடுநில மருங்கிற் படுபுல் லார்ந்து (மணி. 13, 51). |
| விடுப்பு | viṭuppu n. <>விடு-. 1. Separation; நீக்கம். விடுப்பில் குணகுணி (வேதா. சூ. 127). 2. Inquisitiveness; 3. That which is strange or curious; 4. Desire; |
| விடுப்புக்காட்டு - தல் | viṭuppu-k-kāṭṭu- v. tr. <>விடுப்பு+. To present a curious or strange spectacle; வினோதக்காட்சி காட்டுதல். (W.) |
| விடுபடு - தல் | viṭu-paṭu- v. intr. <>விடு1-+. 1. To be left; to be abandoned, relinquished; நீக்கப்படுதல். 2. To be released, liberated, as from bondage or prison; |
| விடுபடை | viṭu-paṭai n. <>id.+. Missile; எறியப்படும் படை. (சுக்கிரநீதி, 328.) |
| விடுபதி | viṭupati n. <>viṭ-pati. Son-in-law; மருமகன். (யாழ். அக.) |
| விடுபாட்டு | viṭu-pāṭṭu n. <>விடு-+. Stray, occasional verse; தனிப்பாடல். |
| விடுபூ | viṭu-pū n. <>id.+பூ. Loose flower, as not strung in a garland; தொடுக்காத பூ. விடு பூத் தொடைப்பூக் கட்டுப்பூ (சிலப். 5, 14, உரை). |
| விடுபேறு | viṭu-pēṟu n. <>id.+. Endowment, as of lands, etc.; பிறர்க்கு உரிமையாய் விடப்பட்ட நிலம் முதலியன. (Insc.) |
| விடுமலர் | viṭu-malar n. <>id.+. 1. Blossom; மலர்ந்த பூ. விடுமலர்ப் பூங்கொடிபோல நுடங்கி (பரிபா. 12, 89) 2. See விடுபூ. |
| விடுமனை | viṭu-maṉai n. <>id.+. Vacant house-site ; காலிமனையிடம். Loc. |
| விடுமுறி | viṭi-muṟi n. <>id.+. 1. See விடுதலைப்பத்திரம். Loc. . 2. Divorce deed; |
| விடுமுறை | viṭu-muṟai n. <>id.+. Holiday; vacation; ஓய்வுநாள். Mod. |
| விடுவம் | viṭuvam n. <>viṣuva. Equinox; விஷுவம். அயனமே விடுவந் திங்கட் பிறப்பு (வேதாரணி. தோற்ற. 82). |
| விடுவாய் | viṭu-vāy n. <>விடு-+. Cleft, crevice in the surface of the earth; நிலப்பிளப்பு. கடுங்கதிரெறித்த விடுவாய் நிறைய (அகநா. 53). |
