Word |
English & Tamil Meaning |
|---|---|
| விடைகொடு - த்தல் | viṭai-koṭu- v. intr. <>விடை+. 1. To answer; மறுமொழி சொல்லுதல். 2. To grant leave or permission; |
| விடைகொள்(ளு) - தல் | viṭai-koḷ- v. intr. <>id.+. 1. To get permission; to take leave of, as when departing; வெளியேற உத்தரவு பெறுதல். யானும் விடைகொள்ளத் தந்தருளுகென்றனள் (தக்கயாகப். 288). 2. To arrive; |
| விடைகோள் | viṭai-kōḷ n. <>விடை1 + கோள1¢. See விடைதழால். கதழ்விடைகோட் காண்மார் (கலித். 103). . |
| விடைதழால் | viṭai-taḷāl n. <>id.+. Grappling and subduing enraged bulls, as by a suitor in a test of bravery; கோபமூட்டி விடப்பட்ட ஏற்றினைத் தழுவிப்பிடிக்கை. |
| விடைதுரத்துதல் | viṭai-turattutal n. <>id.+. Sending or driving away of the young ones by the mother animal or bird after their tutelage is over ; வளர்ந்து பெரிதான குட்டி அல்லது குஞ்சைத் தாய்விலங்கு அல்லது பறவை தன்னினின்று அகற்றுகை. |
| விடைப்பாகன் | viṭai-p-pākaṉ n. <>id.+பாகன். šiva, as riding the bull Nandi ; சிவபிரான். விமலா விடைப்பாகா (திருவாச. 1, 34). |
| விடைப்பு 1 | viṭaippu- n. <>விடை1-. 1. Separating, dividing ; வேறுபடுத்துகை. விடைப்பருந்தானை வேந்தன் (சீவக. 555). 2. Removal ; |
| விடைப்பு 2 | viṭaippu n. <>விடை1-. 1. Manifestation of anger ; கோபங்காட்டுகை. 2. Arrogance ; |
| விடைப்பு 3 | viṭaippu n. <>விடை1-. Fault, error ; குற்றம். (யாழ். அக.) |
| விடைப்பேறு | viṭai-p-pēṟu n. prob. விடை1+. An ancient tax; பழைய வரிவகை. (S. I. I. ii, 115.) |
| விடைமுகன் | viṭai-mukaṉ n. <>id.+ முகம். Nandi, as having the face of a bull; நந்தி. விடைமுக னுரைத்தசொல் வினவி (கந்தபு. விடை. 23). |
| விடைமுரிப்பு | viṭai-murippu n. <>id.+. Hump of an ox ; எருத்தின் திமில். (திவா.) |
| விடையதிகாரி | viṭai-y-atikāri n. <>விடை1+. See விடையிலதிகாரி. இப்படிக்கு விடையதிகாரி உய்யக்கொண்டான் எழுத்து (S. I. I. iii, 36). . |
| விடையம் 1 | viṭaiyam n. <>viṣaya. 1. Objects of sense; காட்சிப் பொருள். விடையமறுத்து (காசிக. அக. விந். 14). 2. See விடயம், 1, 4. 3. Country; |
| விடையம் 2 | viṭaiyam n. <>viṣā. Atis. See அதிவிடையம். (அரு. அக.) . |
| விடையவன் | viṭaiyavaṉ n. <>விடை. 1. Siva ; சிவபிரான். விடையவனே விட்டிடுதி கண்டாய் (திருவாச. 6, 1). 2. Varuṇa; |
| விடையன் 1 | viṭaiyaṉ n. <>id. See விடையவன், 1. ஒற்றைவிடையனு நான்முகனும் (திவ். பெரியாழ். 4, 10,4). . |
| விடையன் 2 | viṭaiyaṉ n. <>விடை4-. Sensualist ; காமுகன். Loc. |
| விடையாத்தி | viṭaiyātti n. . Corr. of விடாயாற்றி. |
| விடையாயம் | viṭai-y-āyam n. <>விடை+ஆயம். Herd of cows with a bull in their midst ; ஏற்றையுடைய ஆனிரை. வேற்காளை விடையாயங் கொள்கென்றான் வேந்து (பு. வெ. 1, 1.) |
| விடையிலதிகாரி | viṭayil-atikāri n. <>விடை1+அதிகாரி. Officer who issues the royal orders ; அரசாணை விடுக்கும் அதிகாரி. விடையிலதிகாரிகள் உய்யக்கொண்டானும் (S. I. I. iii, 36). (T. A. S. i, 166.) |
| விடையுச்சன் | viṭai-y-uccaṉ n. <>விடை1+உச்சம். Moon ; சந்திரன். (நாமதீப. 97.) |
| விடையூர்தி | viṭai-y-ūrti n. <>id.+. Siva, as riding the bull Nandi ; சிவபிரான். விடையூர்தியருளா லுலவுவீர் (தாயு. சித்தர். 3). |
| விடையோன் | viṭaiyōṉ n. <>id. See விடையவன், 1. விடையோன் யாகசாலை புக (தக்கயாகப். 728). . |
| விண் 1 | viṇ n. cf. viṣnu-pada. [T. M. viṇṇu K. Tu. binnu.] 1. Sky; ஆகாசம். விண்பொரு புகழ் விறல்வஞ்சி (புறநா. 11). 2. Heaven ; 3. Cloud; |
| விண் 2 | viṇ n. prob. வில். A contrivance in a paper kite ; காற்றாடிப்பட்டத்தின் ஒருகருவி. (யாழ். அக.) |
