Word |
English & Tamil Meaning |
|---|---|
| விண்ணப்பம் | viṇṇappam n. <>Pkt. viṇṇappa <>vijāpana. 1. Supplication, respectful representation; பெரியோர்முன் பணிந்து கூறும் அறிவிப்பு. அடியேன் செய்யும் விண்ணப்பமே (திவ். இயற். திருவிருத். 1). 2. Recitation of sacred hymns in the presence of the deity; 3. Petition; |
| விண்ணப்பி - த்தல் | viṇṇappi- 11 v. intr. <>விண்ணப்பம். 1. To supplicate; பெரியோர் முன் பணிந்தறிவித்தல். என் பிழையன்றென . . . நின்னடிக்கே விண்ணப்பித்திருந்தேன் (அருட்பா, vi, பிள்ளைப்பெரு. 92). 2. To sing sacred hymns in the presence of the deity; 3. To petition; |
| விண்ணபத்திரம் | viṇṇa-pattiram n. See விண்ணப்பப்பத்திரம். (யாழ். அக.) . |
| விண்ணமங்கலம் | viṇṇamaṅkalam n. A region to which excommunicated Paraiyas are said to go when they die ; சாதியினின்று விலக்கப்பட்ட பறையர் இறந்தபின் செல்வதாகக் கருதப்படும் ஸ்தானம். (E. T. vi, 92.) |
| விண்ணல் | viṇṇal n. Citronella-grass. See காவட்டம்புல். (மலை.) |
| விண்ணவன் | viṇṇavaṉ n. <>விண்1. 1. Celestial being ; தேவன். (சிலப். 10, 189.) 2. Arhat; |
| விண்ணவிணை - த்தல் | viṇṇaviṇai- 11 v. intr. cf. விண்விணை-. To throb, as the eye; to be dazzled by the light ; மிக்க ஒளியால் கண்தெறித்தல். (தொல். எழுத். 482, உரை.) |
| விண்ணா | viṇṇā n. Christmas rose. See கடுரோகிணி. (மலை.) |
| விண்ணாங்கு | viṇṇāṅku n. A kind of treel; மரவகை. (யாழ். அக.) |
| விண்ணாணக்காரன் | viṇṇāṇa-k-kāraṉ n. <>விண்ணாணம்1 + காரன்1. (W.) 1. Ostentatious person; குடம்பக்காரன். 2. Witty person; |
| விண்ணாணம் 1 | viṇṇāṇam n. <>Pkt. viṇṇāṇa. vijāna. 1. Knowledge, wisdom; விஞ்ஞானம். (பி.வி. 2, உரை.) 2. Fashion; taste; stylishness; 3. Artfulness; 4. Pretentions to refinement; ostentation; |
| விண்ணாணம் 2 | viṇṇāṇam n. perh. விள்-+நாணம். Shame; bashfulness; நாணம். (யாழ். அக.) |
| விண்ணு | viṇṇu n. <>Viṣṇu. Viṣṇu; திருமால். விரிந்தெங்குஞ் சென்றமையால் விண்ணுவுமாய் (யாப். வி.84). |
| விண்ணுகம் | viṇṇukam n. Indian nightshade. See முள்ளி. (மலை.) |
| விண்ணுலகம் | viṇ-ṇ-ulakam n. <>விண்1+. 1. Svarga; சுவர்க்கம். (பு.வெ. 10, காஞ்சிப். 4, உரை.) 2. Heaven; |
| விண்ணுலகு | viṇ-ṇ-ulaku n. <>id.+. See விண்ணுலகம். (பிங்.) விண்ணுலகே யொக்கும் விழைவிற்றால் (நாலடி, 233). . |
| விண்ணெனல் | viṇ-ṇ-eṉal n. 1. Onom. expr. signifying (a) tinkling, as of a bell; ஓசைக்குறிப்பு. விண்ணெனத் தார்மணி யார்ப்ப (திருவாலவா. 28. 29): (b) being made public; (c) throbbing, as the eye; (d) great speed; (e) tightness; |
| விண்ணேறு | viṇ-ṇ-ēṟu n. <>விண்1+ஏறு3. Thunder; இடி. (பிங்.) |
| விண்ணோர் | viṇṇōr n. <>id. Celestials; தேவர். விண்ணோர் பாவை. (சிலப்.11, 214). |
| விண்பகல் | viṇ-pakal n. perh. id.+பகு2-. Bamboo, as piercing the sky; மூங்கில். (மலை.) |
| விண்பல் | viṇpal n. See விண்டல். (சங். அக.) . |
| விண்மணி | viṇ-maṇi n.<>விண்1+. Sun, as the gem of the sky; சூரியன். (பிங்.) விண்மணி பொய்ப்பினும் பொய்யாநின் வாய்மை (வெங்கைக்கோ. 283). |
| விண்மருந்து | viṇ-maruntu n. prob. id.+. Mercury; பாதரசம். (M. N.) |
| விண்மீன் | viṇ-miṉ n. <>id.+மீன்1. Star; நட்சத்திரம். (சூடா.) |
| விண்முழுதாளி | viṇ-muḻutāḷi n. <>id.+ முழுது + ஆளி1. Indra, as ruling the entire Svarga; இந்திரன். (பிங்.) |
| விண்மூத்திரம் | viṇ-mūttiram n. <>vinmūttra. A hell; நரகவகை (சி.போ, 2, 3, புதுப் பக்.204.) |
| விண்விண்ணெனல் | viṇ-viṇ-ṇ-eṉal n. Onom. expr. signifying (a) the sound of thrumming, as of the strings of a lute; யாழ் நரம்பு முதலியன இசைத்தற்குறிப்பு: (b) throbbing pain, as of a boil; |
