Word |
English & Tamil Meaning |
|---|---|
| விண்விணை - த்தல் | viṇviṇai- 11 v. intr. cf. விண்ணவினை-. To throb, as the eye; கண் முதலியன தெறித்தல். (தொல்.எழுத். 482, உரை.) |
| விண்வீழ்கொள்ளி | viṇ-viḻ-koḷḷi n. <>விண்1+வீழ்-+. Meteor; shooting star; விண்ணினின்று விழும் நட்சத்திரம்போன்ற சுடர். (சூடா.) |
| வித்தகம் 1 | vittakam n. <>vitta-ka. 1. Knowledge; wisdom; ஞானம். 2. Learning; 3. See வித்தம்1, 3. (பிங்.) 4. A hand-pose. |
| வித்தகம் 2 | vittakam n. <>vidagdha. 1. Skill, ability; சாமர்த்தியம். வித்தகமும் விதிவசமும் வெவ்வேறே புறங்கிடப்ப (கம்பரா. கார்முக. 19). 2. Accomplishment; perfection; 3. Wonder; 4. Greatness; 5. Goodness; 6. Regularity, as of form, symmetry; 7. cf. vyakta. Fine, artistic work; minute workmanship; |
| வித்தகன் 1 | vittakaṉ n. <>vitta-ka. Wise person; பேரறிவாளன். |
| வித்தகன் 2 | vittakaṉ n. <>vidagdha. 1. Skilful, able person; வல்லவன். வித்தகர் நேர்விட்ட கோழிப் புறங்கண்டும் (பு. வெ. 12, வென்றிப். 6). 2. Mysterious person; 3. Bhairava; 4. Artificer; |
| வித்தகன் 3 | vittakaṉ n. cf. vrtta-ka. 1. Messenger; தூதன். (சூடா.) 2. Shepherd; |
| வித்தம் 1 | vittam n. <>vitta. 1. Wisdom, knowledge; ஞானம். (சூடா.) 2. Wealth, money; 3. Gold; 4. Good fortune; |
| வித்தம் 2 | vittam n. perh. viddha. Derision; பழிப்பு. (சூடா.) |
| வித்தம் 3 | vittam n. prob. urnda. Company, crowd; கூட்டம். (உரி.நி.) |
| வித்தம் 4 | vittam n. <>vrtta. A cast in dice play; சூதிற் சிறுதாயம். வித்தத்தாற் றொற்றான்போல் (கலித். 136, 8). |
| வித்தரம் | vittaram n. <>vistara. 1. Extension, expansion, width; அகலம். நீளம் வித்தரமொடுயர்ச்சி (பாரத. இராசசூ. 8). 2. A hell; |
| வித்தரி - த்தல் | vittari- 11. v. tr. <>வித்தரம். 1. To expand; பெருக்குதல். 2. To expound; to narrate in detail; |
| வித்தன் 1 | vittaṉ n. <>vitta. (யாழ். அக.) 1. Learned man, man of knowledge; பண்டிதன். 2. cf. vitta-da. Benefactor; |
| வித்தன் 2 | vittaṉ n. <>viddha. One who is absorbingly interested; ஈடுபாடுடையன். (ஈடு.) |
| வித்தன் 3 | vittaṉ n. <>vrtta. Ascetic, one who performs penance; தவசி. (யாழ். அக.) |
| வித்தாண்மை | vittāṇmani n. prob. வித்தம்1+ஆள்-. Wisdom; புலமை. (யாழ். அக.) |
| வித்தாயம் | vittāyam n. <>வித்தம்2+ஆயம்1. See வித்தம். வித்தாய மிடைத்தங்கக் கண்டவன் (கலித். 136, 9). . |
| வித்தாரக்கள்ளி | vittāra-k-kaḷḷi n. <>வித்தாரம்+கள்ளி2. Woman of great cunning; மாய்மாலக்காரி. Colloq. |
| வித்தாரக்காரன் | vittāra-k-kāraṉ n. <>id.+காரன்1. Boaster; இடம்பப்பேச்சுள்ளவன். |
| வித்தாரகவி | vittāra-kavi n. <>vistāra-kavi. 1. See வித்தாரம், 2. (திவா.) . 2. Poet capable of composing a lengthy poem on a single theme; |
| வித்தாரம் | vittāram n. <>Pkt. vitthara <>vistāra. 1. Expansiveness; extensiveness; விரிவு. வித்தாரமாக மதுராபுரியின் முந்நீரைவிட (திருவிளையா. பயகர. 9). 2. Lengthy poem on a single theme, one of four kavi, q.v.; 3. A treatise on architecture, one of 32 ciṟpa-nūl, q.v.; 4. Learning; scholarship; |
| வித்தாரி | vittāri n. <>வித்தாரம். Learned person; விற்பன்னன். (யாழ். அக.) |
| வித்தி 1 | vitti n. cf. vyasta. Partition; குடும்பசொத்தைப் பிரித்துக்கொள்கை. Rd. |
