Word |
English & Tamil Meaning |
|---|---|
| வித்தியாவினோதம் | vittiyā-viṉōtam n. <>vidyā+. Learning, considered as a pastime; கல்வியிற் போதுபோக்குகை. வித்தியா வினோதமுள்ள தேசமென்றும் (தக்கயாகப். 19, உரை). |
| வித்தியாவினோதன் | vittiyā-viṉōtaṉ n. <>id.+. One whose hobby is learning; one who revels in the enjoyment of learning; கல்வியாற் போதுபோக்குவோன். |
| வித்தியானுபானம் | vittiyāṉupāṉam n. <>id.+prob. anupālana. (யாழ். அக.) 1. Learning; கல்வி கற்கை. 2. Giving instruction; teaching; |
| வித்தயானுபோகம் | vittiyāṉupōkam n. <>id.+. Endowment of land for the encouragement of learning; கல்வியபிவிருத்திக்காக விடப்படும் மானியம். வாகூர் வித்தியாஸ்தாநத்துக்கு வித்தியானுபோகமாய் (S. I. I. ii, 517). |
| வித்தியாஸ்தானம் | vittiyā-stāṉam n. <>id.+. 1. The sources of knowledge, eighteen in number, viz., the four vēdas, six vēdāṅgas, mimāmsā, nyāya, dharma-šāstra, purāṇa, four npavēdas; நான்கு வேதம், ஆறு வேதாங்கம். மீமாஞ்சை, நியாயம் தருமசாத்திரம், புராணம், நான்கு உபவேதம் ஆகிய வித்தையின் பதினெட்டுத்துறைகள். வாகூர் வித்தியாஸ்தானத்துக்கு வித்தியானுபோகமாய் (S. I. I. ii. 517). (பெருங். பக். 738). 2. See வித்தியாசாலை. |
| வித்தியுத்சக்தி | vittiyut-cakti n. <>vidyut+. Electricity; மின்சாரம். Mod. |
| வித்தியுத்து | vittiyuttu n. <>vidyut. See வித்துத்து. (இலக். அக.) . |
| வித்தியேசுரன் | vittiyēcuraṉ n. <>vidyēšvara. Master of learning, learned man, scholar; கல்வியிற் சிறந்தோன். (W.) |
| வித்தியை | vittiyai n. <>vidyā. See வித்தை. . |
| வித்திரகம் | vittirakam n. cf. விசித்திரகம். White madar. See வெள்ளெருக்கு. (மூ. அ.) |
| வித்திரணம் | vittiraṇam n. <>vistirna. Extent; விஸ்தீரணம். (யாழ். அக.) |
| வித்திரதி 1 | vittirati n. <>vidradhi. Abscess, boil; புண். (பைஷஜ. 304.) |
| வித்திரதி 2 | vittirati n. <>vistrti. Spaciousness; extensiveness; விசாலம். (சங். அக.) |
| வித்திராவணம் | vittirāvaṇam n. <>vidrāvaṇa (யாழ். அக.) 1. Melting metals; உலோகம் முதலியவற்றை உருக்குகை. 2. Driving; |
| வித்திருதி 1 | vittiruti n. See வித்திரதி. Loc. . |
| வித்திருதி 2 | vittiruti n. See வித்திரதி. (யாழ். அக.) . |
| வித்தீசுரன் | vitticuraṉ n. See வித்தியேசுரன். (W.) . |
| வித்து 1 - தல் | vittu- 5 v. tr. [K. bittu.] 1. To sow; விதைத்தல். வித்திய உழவர் நெல்லொடு பெயரும் (ஐங்குறு. 3). 2. To spread, broadcast; 3. To impress on one's mind; |
| வித்து 2 | vittu n. <>வித்து-. cf. bīja. [T. M. Tu. vittu, K. bittu.] 1. See விதை, 1. சுரைவித்துப்போலுந்தம் பல் (நாலடி, 315). . 2. Semen virile; 3. Race, lineage; 4. Posterity; 5. Means, instrument; 6. Cause; |
| வித்துக்காளை | vittu-k-kāḷai n. <>வித்து+. Breeding bull; ஆனேறு. Nā. |
| வித்துசம் | vittucam n. Hedge bindweed. See தாளி. (மலை.) |
| வித்துத்து | vittuttu n. <>vidyut. Lightning; மின்னல். (சூடா.) |
| வித்துத்தெளி - த்தல் | vittu-t-teḷi- v. intr. <>வித்து+. To scatter seeds; to sow; விதையைத் தூவுதல். |
| வித்துப்பாடு | vittu-p-pāṭu n. <>id.+. Standard area for a specified quantity of seed; ஓரளவு விதை விதைத்தற்குரிய நிலம். பதினாழிக்காலால் எண்கல வித்துப்பாடும் (T. A. S. i, 7). |
| வித்துரு 1 | vitturu n. See வித்துருமம், 1. வித்துருவின் கொத்தொப்பானை (தேவா, 682, 4). . |
| வித்துரு 2 | vitturu n. See வித்துத்து. (பிங்.) . |
| வித்துருமம் | vitturumam n. <>vidruma. 1. Coral; பவளம். (திவா.) வாங்குகடல் வித்துருமமாலையொளி கால (திருவிளை. தடாதகை. 17). 2. Sprout, tender shoot; |
| வித்துவசனம் | vittuva-caṉam n. <>vidvajjana. Body of learned men; புலவர் திரள்வித்துவசன மில்லாத சபை யென்பர் (திருவேங். சத. 62). |
| வித்துவஞ்சம் | vittuvacam n. <>vidhvamsa. (யாழ். அக.) 1. Insult; அவமரியாதை. 2. Enmity; 3. Dislike; |
