Word |
English & Tamil Meaning |
|---|---|
| விதந்து | vitantu n. <>vi-tantu. Widow; விதவை. Brāh. |
| விதந்தோது - தல் | vitantōtu- v. tr. <>வித1- + ஓது-. To make a specific mention of; சிறப்பாக எடுத்துச்சொல்லுதல். (நன்.108, உரை.) |
| விதப்பு 1 | vitappu n. <>id. 1. Specific mention; சிறப்பித்து எடுத்துச்சொல்லுகை. விதந்து கட்டிய வழக்கு. (திவா) 2. (Gram.) See விதப்பு விதி. (நன். 165, சங்கரநமச்.) 3. Detail; 4. Wonder; 5. A component part of a fortification; |
| விதப்பு 2 | vitappu n. <>வித2-. Abundance; மிகுதி. (திவா.) |
| விதப்பு 3 | vitappu n. <>விதுப்பு. 1. Haste; விரைவு. (நாமதீப. 562.) 2. Trembling; agitation; 3. Desire; |
| விதப்புவிதி | vitappu-viti n. <>விதப்பு1+. (Gram.) Special rule; சிறப்புவிதி. (நன்.165, சங்கரநாமச்.) |
| விதம் | vitam n. <>vidhā. 1. Form, manner, method; மாதிரி. பண்புசால் விதம்புலர்ந்த தென்னின் (கம்பரா. மூலபல. 79). 2. Kind, sort; 3. Way; 4. Rule; |
| விதம்பம் | vitampam n. A mineral poison. See கற்பரிபாஷாணம். (யாழ். அக.) |
| விதர்க்கணம் | vitarkkaṇam n. <>vi-tar-kaṇa. (யாழ். அக.) 1. Deliberation; ஆலோசனை. 2. Conversation; |
| விதர்க்கம் | vitarkkam n. <>vi-tarka. 1. Thought, idea; எண்ணம். (யாழ். அக.) 2. The sheath of mind. 3. Doubt; 4. Investigation; 5. Reason; |
| விதர்ப்பம் | vitarppam n. <>Vidarbha. The country of vidarbha, modern Berar, one of 56 tēcam, q.v.; தேசம் ஐம்பத்தாறனுள் ஒன்றானதும் தற்காலத்தில் பீரார் என்று வழங்குவதுமான நாடு. |
| விதர்ப்பு | vitarppu n. 1. cf. விதிர்ப்பு. 1. Fear; அச்சம். (யாழ். அக.) 2. Closeness; 3. cf. vidāra. Battle, fight; 4. Victory; |
| விதரணபுருஷன் | vitaraṇa-puruṣaṉ n. <>vi-taraṇa+. See விதரணன். (W.) . |
| விதரணம் | vitaraṇam n. <>vi-taraṇa 1. Grant, donation, gift; கொடை. (சூடா.) பாவலர்க்கு நாளும் விதரணஞ் செய்யவேண்டும் (திருவாலவா. 55, 26). 2. Generosity; 3. Discrimination; 4. See விதரணை, 2. Loc. |
| விதரணன் | vitaraṇaṉ n. <>விதரணம். 1. Generous man; கொடையாளன். 2. Eloquent man; 3. Clever man; |
| விதரணி | vitaraṇi n. <>id. See விதரணன், 1,2 Loc. . |
| விதரணிகன் | vitaraṇikaṉ n. <>id. See விதரணன், 1. விழைவுதரு பரிதிக்கு மனுநீதி மன்னர்க்கும் வீரவிதரணிகருக்கு மிக்க வொளி (அறப். சத. 43). . |
| விதரணை | vitaraṇai n. <>id. 1. See விதரணம்,1,2,3. (சங். அக.) . 2. Skill; |
| விதரம் | vitaram n. <>vi-dara. Cleavage; பிளப்பு. (சங். அக.) |
| விதலம் | vitalam n. <>vi-tala. A nether world, one of kiḻ-ēḻ-ulakam கீழேழுலகத்தொன்று. (திவா.) |
| விதலை 1 | vitalai n. perh. விதி£1¢-. [T.vidalu K. Tu. bede, M. vidaru.] Trembling, shivering; நடுக்கம். பனிப்படு பைதல் விதலைப் பருவத்து (பரிபா. 11, 75). |
| விதலை 2 | vitalai n. perh. vitalā. The earth; பூமி. விதலையின் விழுந்த மேவலனை . . . பிடித்து (பாரத.இராசசூ. 26). |
| விதலையாப்பு | vitalai-yāppu n. prob. விதலை1+. (Pros.) A mode of construction in which the central idea is conveyed by the words at the beginning, middle and end of a stanza; செய்யுளின் முதலும் இடையும் கடையும் பொருள்கொள்ளு முறை. (இறை, 56, உரை.) |
| விதவாகமனம் | vitavā-kamaṉam n. <>vidhavā+gamana Illicit intercourse with a widow; கைம்பெண்ணைச் சோரத்திற் புணர்கை. விதவாகமனமென்று மெண்ணாமலே (பிரபோத.6, 39). |
| விதவாகாமி | vitavā-kāmi n. <>vidhavā+ gāmin. One who has illicit intercourse with a widow; விதவையைச் சோரத்திற் புணர்வோன். (W.) |
| விதவாவிவாகம் | vitavā-vivākam n. <>id.+. Marriage of widow; கைம்பெண்ணை மணக்கை. |
