Word |
English & Tamil Meaning |
|---|---|
| விபூதிபோடு - தல் | vipūti-pōṭu- v. intr. <>id.+. 1. To sprinkle sacred ashes on another to the accompaniment of incantations; மந்திரித்துத் திருநீறு தூவுதல். 2. See விபூதியிடு-, 1. |
| விபூதிமொந்தன் | vipūti-montaṉ n. <>id.+. A variety of plantain, bearing ash-coloured fruits; சாம்பல் வர்ணமுள்ள காய்களையுடைய மொந்தன் வாழைவகை. (G. Tp. D. I, 137.) |
| விபூதியிடு - தல் | vipūti-y-iṭu- v. intr. <>id.+. 1. To smear sacred ashes; திருநீறு பூசுதல். 2. To give sacred ashes with incantations; |
| விபூதிவட்டகை | vipūtti-vaṭṭakai n. <>id.+. A vessel or cup to hold sacred ashes; திருநீறு வைக்கும் பாத்திரவகை. |
| விபூயம் | vipūyam n. <>vipūya. Reedy sugar-cane. See முஞ்சி, 1. (யாழ். அக.) |
| விபூஷணம் | vipūṣaṇam n. <>vi-bhūṣaṇa. Decoration, ornament; ஆபரணம். |
| விபேகம் | vipēkam n. See விவேகம். (சங். அக.) . |
| விபேகி | vipēki n. See விவேகி. (சங். அக.) . |
| விபேதனம் | vipētaṉam n. <>vi-bhēdana. Dividing, separating; பிரிக்கை. (யாழ். அக.) |
| விபோதம் | vipōtam n. <>vi-bhōda. Intelligence, wisdom; அறிவு. (யாழ். அக.) |
| விம்சதி | vimcati n. <>vimšati. Twenty; இருபது. |
| விம்பசாரகதை | vimpacāra-katai n. <>விம்பசாரன்+. A Buddhist poem on king Bimbasāra of Magadha, in Tamil; மகத வேந்தனான பிம்பசாரனைப்பற்றியச் செய்யுணடையிலுள்ள ஒரு தமிழ்ப் பௌத்தநூல். (மணி, 30, 9, கீழ்க்குறிப்பு.) |
| விம்பசாரன் | vimpacāraṉ n. <>Bimbasāra. A kind of Maghada, a contemporary and follower of the Buddha, who lived in the 6th cent. B. C.; கி. மு. ஆறாநூற்றாண்டில் மகத தேசத்தை யாண்டவனும் கௌதமபுத்தரிடாத்து உபதேசம் பெற்றவனுமான ஓரரசன். |
| விம்படம் | vimpaṭam n. <>vimbaṭa. Mustard; கடுகு. (மலை.) |
| விம்பப்பதிவிம்பநியாயம் | vimpa-p-pativimpa-niyāyam n. <>bimba + prati-bimba+. The nyāya of an original and its multifarious images, as in a mirror; கண்ணாடி முதலிய வற்றில் ஒன்றன் வடிவம் பலதிறப்பட்டுக் காணப்படுதல் போன்ற நியாயநெறி. விம்பப்பதிவிம்பநியாயத்தால் . . . எண்ணிறந்த போகவிளைவு கூடுதல். (வேதா. சூ.136). |
| விம்பப்பிரதிவிம்பபாவம் | vimpa-p-pirativimpa-pāvam n. <>id.+ id.+ bhāva. (Rhet.) State of two things being different and yet the same, as a thing and its reflection in a mirror; ஒரு உருவமும் அதன் பிரதிபிம்பமும்போல வேற்றுமைப்பட்டிருந்தும் ஒன்றாயிருக்குந் தன்மை. (அணியி.18, பக்.13.) |
| விம்பம் | vimpam n. <>bimba. 1. Disc, as of the sun, moon, etc.; வட்டம். தார்மார்பமு முகவிம்பமும் (தக்கயாகப்.10). 2. Form, shape, figure; 3. Image, idol; 4. Shadow, reflection; 5. Body; 6. Light, splendour; 7. A common creeper of the hedges. 8. A mineral poison. |
| விம்பமுத்திரை | vimpa-muttirai n. <>விம்பம்+. (šaiva.) A hand-pose in worship; முத்திரைவகை. (செந். x, பக்.425.) |
| விம்பி - த்தல் | vimpi- 11 v. intr. <>id. To be reflected, as an image; பிரதிபலித்தல். (W.) |
| விம்பிகை | vimpikai n. <>bimbikā. A common creeper of the hedges; See கொவ்வை. (மலை.) |
| விம்பு | vimpu n. <>vimbu. Areca palm. See கமுகு. (யாழ். அக.) |
| விம்மட்டம் | vimmaṭṭam n. See விம்மிட்டம். Loc. . |
| விம்மம் | vimmam n. <>விம்மு-. 1. See விம்மல், 1. விம்ம முறுதல் வினாவது முடைத்தோ (பெருங். வத்தவ. 6, 37). . 2. See விம்மல், 2. விம்மமுறுவள். (பெருங். இலாவாண. 16, 99). |
| விம்மல் | vimmal n. <>id. 1. Sobbing; தேம்பியழுகை. (பிங்.). 2. Distress; 3. Despondency; 4. Being puffed up or swollen; 5. Elation of spirits; 6. Sounding; 7. Sound of lute strings; |
