Word |
English & Tamil Meaning |
|---|---|
| வியயஸ்தானம் | viyaya-stāṉam n. <>id.+. (Astrol.) Twelth house from the ascendant in a horoscope, indicating expenditure or loss; சாதகசக்கரத்தில் செலவழிவுகளைக் காட்டும் பன்னிரண்டா மிடம். |
| வியர் - த்தல் | viyar- 11 v. intr. cf. வியர்-. [K. bemar.] 1. To sweat, perspire; உடலின் மேற்புறத்து நீர்த்துளி தோன்றுதல்.முயங்கயான் வியர்த்தன னென்றனள் (குறுந்.84). 2. To feel irritated, as from envy; 3. To be angry; |
| வியர் | viyar n.<>வியர்-. 1. Perspiration; உடலின் மேற்புறத்துத் தோன்றும் நீ£த்துளி. குறுவியர் பொடித்த கோலவாண் முகத்தள் (மணி.18, 40). 2. Weariness, exhaustion; |
| வியர்த்தம் | viyarttam n.<>vyartha. 1.Absence of meaning ; பொருளின்மை. 2. Uselessness; |
| வியர்ப்பு | viyarppu n.<>வியர்-. 1.See வியர்வை. வெய்துண்ட வியர்ப்பல்லது (புறநா. 387). . 2. Anger; 3. Mark of anger; |
| வியர்வு | viyarvu n. See வியர்வை. . |
| வியர்வை | viyarvai n.<>வியர்-. 1.See வியர்,1. . 2. Mark or indication of wrath; |
| வியர்வைக்கட்டி | viyarvai-k-kaṭṭi n.<>வியர்வை+. Summer boil; கோடையில் வேர்வையால் உண்டாம் புண்கட்டி.(M.L.) |
| வியல் 1 | viyal n. cf. வியம்1. 1. Greatness; பெருமை. மூழ்த்திறுத்த வியன்றானை (பதிற்றுப். 33, 5). 2. Width, expansion, extension; vastness; 3 .Abundance; 4. Gold; 5. Forest, jungle; 6. Wooden tray; |
| வியல் 2 | viyal n. cf. வியம்2. Diversity; பல திறப்படுகை. வியன் கலவிருக்கையும் (சிலப்.5, 7). |
| வியல்கனா | viyalkaṉā n. prob. வியல்1+. kaṇā. Long pepper; See திப்பலி. (மலை.) |
| வியல்பூதி | viyalpūti n. <>id.+ பூதி2. Beal; வில்வம்.(மலை.) |
| வியலகம் | viyalakam n. <>id.+. See வியலிடம்,1. விரிகடல் வேலி வியலகம் விளங்க (சிறுபாண்.114). . |
| வியலிகை | viyalikai n. <>id. cf. வியத்திகை . Greatness; பெருமை (யாழ்.அக.) |
| வியலிடம் | viyal-iṭam n.<>id.+. 1.The wide world; பூமி. இவ்வயலிடத்தே (திருக்கோ.277). 2.Breadth; |
| வியலுள் | viyal-uḷ n. <>id.+ உள்2. Wide, open space; அகன்ற இடம். விழவுவீற் றிருந்த வியலுளாங்கண் (பதிற்றுப், 56, 1). |
| வியவகரி - த்தல் | viyavukari- 11v. tr. <>vyava-hr. 1.To speak, tell; பேசுதல். உலகத்தார் வியவகரிக்கும் அழகுடையது அது (தக்கயாகப்.142,உரை). 2. To discuss; |
| வியவகாரகாரணம் | viyavakāra-kāraṇam n.<>vyavahāra+. (Legal.) Cause of action; வியாச்சியமூலம். Nā. |
| வியவகார நிர்ணயம் | viyavakāra-nirṇayam n.<>vyavahāra-nirṇaya. A treatise on Hindu Law in Sanskrit, by varadarājar; வரதராஜர் என்பார் வடமொழியில் எழுதிய தருமநூல். |
| வியவகாரம் | viyavakāram n.<>vyavahāra. See விவகாரம். . |
| வியவகாரி | viyavakāri n.<>vyavahārin See விவகாரி. . |
| வியவசாயம் | viyavacāyam n.<>vyavasāya. 1. See விவசாயம். . 2. Wisdom; |
| வியவன் | viyavaṉ n.<>வியம்1. [K.besadavan.] 1. Servant; ஏவல்செய்வோன். இளையரை வியவரின் விடவே (சீவக.601). 2. Commander; person in authority; 3. Headman; 4. Strong, bold man; 5. Traveller; |
| வியவஸ்திதம் | viyavastitam n.<>vyavasthita. That which is settled, established or fixed; முடிவு செய்யப்பட்டது. வியவஸ்தித வசனம் (சிவசம.65). |
| வியவஸ்தை | viyavastai n.<>vyava-sthā. 1.Settlement, arrangement; முடிவான ஏற்பாடு. எம்மிலிசைந்து வியவஸ்தை செய்தோம்; (S.I.I.i,65). 2. Deed of agreement; 3. Written opinion on points of law with citation of the original texts on which it is based, submitted to a court by Hindu Law pandits; 4. Distinction; |
