Word |
English & Tamil Meaning |
|---|---|
| வியவு | viyavu n. cf. வியம்2. Diversity, variation; வேறுபாடு. ஒண்பொருள்க ளுலப்பில்லன வாய் வியவாய் (திவ். திருவாய். 7, 8, 3). |
| வியளம் | viyaḷam n. <>višeṣa. News; சமாசாரம். (J.) |
| வியன் 1 | viyaṉ n. <>viyat. cf. வியம்3. 1. Sky; ஆகாசம். வியனிடை முழுவதுகெட (தேவா. 883, 7). 2. cf. வியல்1. Greatness; 3. Excellence; 4. Wonderfulness; 5.Vastness; |
| வியன் 2 | viyaṉ n. <>வியம்2. Oddness of numbers; எண்ணின் ஒற்றை. (சினேந். 178.) |
| வியன்சங்கலிதம் | viyaṉ-caṅkalitam n. <>வியன்2+. (Math .) Odd terms forming a series; ஒற்றைப்பட்ட எண்களாலாகிய தொடர். (W.) |
| வியன்சமன் | viyaṉ-camaṉ n. <>id.+. (W.) 1. See வியன்சமன் சங்கலிதம். . 2. Equality and inequality; disparity; |
| வியன்சமன்சங்கலிதம் | viyaṉcamaṉ-caṅkalitam n. <>வியன்சமன்+. Series of odd numbers taken an even number of times, as 1, 3; 1, 3, 5, 7; ஒற்றையெண்கள் இரட்டைப்பட வருந் தொடர். (W.) |
| வியன்மணி | viyaṉ maṇi n. <>viyan-maṇi. Sun; சூரியன். (யாழ். அக.) |
| வியன்வியன்சங்கலிதம் | viyaṉ-viyaṉcaṅ-kalitam n. <>வியன்2+. Series of odd numbers taken an odd number of times, as 1, 3, 5; 1, 3, 5, 7, 9; ஒற்றையெண்கள் ஒற்றைப்பட வருந்தொடர். (W.) |
| வியனிலைமருட்பா | viyaṉilai-maruṭpā n. <>id.+நிலை.+. (Pros.) A kind of a maruṭpā in which the lines of veṇpā and āciriyappā are found confusedly mixed up; வெண்பாவடியும் ஆசிரியவடியும் ஒவ்வாதுவரும் மருட்பாவகை. (இலக். வி. 749, உரை.) |
| வியனிலைவஞ்சி | viyaṉilai-vaci n. <>id.+id.+வஞ்சி2. (Pros.) A kind of vaci verse with three metrical feet in each line; மூச்சீரடி வஞ்சிப்பா. (தொல். பொ. 350, உரை.) |
| வியனுலகம் | viyaṉ-ulakam n. <>வியன்1+. Celestial world; தேவலோகம். (சூடா.) |
| வியஷ்டி | viyaṣṭi n. <>vyaṣṭi. See வியட்டி. . |
| வியாக்கியாதா | viyākkiyātā n. <>vyākhyātā nom. sing. of vyākhyātr. Commentator, expositor; உரையாசிரியன். |
| வியாக்கியானம் | viyākkiyāṉam n. <>vyākhyāna. Exposition, explanation, comment, commentary; உரை. தமக்குத் தோன்றியவா றெல்லாம் . . . வியாக்கியானஞ்செய்து (சிவசம. 33). |
| வியாக்கியானன் | viyākkiyāṉaṉ n. <>வியாக்கியானம். See வியாக்கியாதா. (W.) . |
| வியாக்கியானி | viyākkiyāṉi n. <>id. See வியாக்கியாதா. (W.) . |
| வியாக்கியை | viyākkiyai n. <>vyākhyā. See வியாக்கியானம். நஞ்சீயர் செய்த வியாக்கியைகள் (உபதேசரத். 47). |
| வியாக்கிரகதி | viyākkira-kati n. <>vyāghra+ gati. Tiger-like pace of horse, one of five acuva-kati, q.v.; அசுவகதி. ஐந்தனுள் புலிபோற் பாயுங் கதி. |
| வியாக்கிரதலம் | viyākkira-talam n. <>vyāghra-dala. Castor plant. See ஆமணக்கு. (மூ. அ.) |
| வியாக்கிரதீபம் | viyākkira-tīpam n. <>vyāghra+. A kind of lamp waved before idols; அலங்காரதீபவகை. காதிடு வியாக்கிரதீபம் (பரத. ஒழிபி. 41). |
| வியாக்கிரநகம் | viyākkira-nakam n. <>id.+nakha. 1. Tiger's claw; புலியின் நகம். 2. Mysore-thorn. |
| வியாக்கிரபதன் | viyākkirapātaṉ n. <>Vyāghrapāda. A Rṣi; ஒரு முனிவன். வியாக்கிரபாதனெனும் பாவார் பெயரோதின பாரிடமே (கோயிற்பு. வியாக்கிர. 20). |
| வியாக்கிரபுச்சம் | viyākkira-puccam n. <>vyāghra-puccha. Castor plant. See ஆமணக்கு. (மூ. அ.) |
| வியாக்கிரம் | viyākkiram n. <>vyāghra. Tiger; புலி. (பிங்.) |
| வியாக்கிராசனம் | viyākkirācaṉam n. <>id.+ āsana. Tiger's skin, used as a seat; புலித்தோலாலான ஆசனம். |
| வியாக்கிரி | viyākkiri n. <>vyāghrī. A highly thorny plant. See கண்டங்கத்திரி. (மலை.) |
| வியாகம் | viyākam n. <>višākha. The 16th nakṣatra. See விசாகம். ஏழுநாள் திருவிழாச் செய்து பங்குனி வியாகம் ஆறாடுவதாகவும் (T. A. S. i, 6). |
| வியாகரணம் | viyākaraṇam n. <>vyākaraṇa. 1. Grammar, one of aṟupattunālukalai, q.v.; அறுபத்துநாலுகலைகளுள் ஒன்றான இலக்கணம். 2. Sanskrit grammar, one of six vētāṅkam, q.v.; |
