Word |
English & Tamil Meaning |
|---|---|
| விரணம்போக்கி | viraṇam-pōkki n. <>விரணம்1+போக்கு-. Worm-killer. See ஆடு தின்னாப்பாளை. (W.) |
| விரணவாதம் | viraṇa-vātam n. <>id.+ வாதம்1. A disease; நோய்வகை. (கடம்ப. பு. இல¦லா. 123.) |
| விரணவைத்தியன் | viraṇa-vaittiyaṉ n. <>id.+. Surgeon; புண்ணுக்குச் சிகிற்சை செய்வோன். |
| விரத்தம் | virattam n. <>vi-rakta. 1. Renunciation; உலகப்பற்றுவிடுகை. (W.) 2. Dislike; |
| விரத்தன் | virattaṉ n. <>vi-rakta. 1. Manfree from worldly attachments; உலகப்பற்றில் லாதவன். விரத்தரிற் றலைவ னாகி (கந்தபு. கயமுகனுற். 31). 2. Male ascetic; 3. Man who has taken a vow of celibacy; |
| விரத்தி 1 | viratti n. Fem. of விரத்தன். (W.) 1. Woman free from worldly attachments; உலகப்பற்றில்லாதவள். 2. Female ascetic; 3. Woman who has taken a vow of celibacy; |
| விரத்தி 2 | viratti n. <>vi-rakti. 1. Freedom from worldy attachments; renunciation of worldly pleasures; பற்றின்மை. (சூடா.) 2. Dislike; |
| விரதங்கா - த்தல் | virataṅ-kā- v. intr. <>விரதம்1+. To observe a vow; நோன்பு மேற்கொண்டொழுகுதல். (W.) |
| விரதத்துவம் | viratattuvam n. <>id. State of self-inficted austerity; பட்டினி நோன்பு முதலியவற்றால் உடலை ஒறுக்கும் நிலை. (W.) |
| விரதநியமம் | virata-niyamam n. <>vrata+. 1. Observing austerities; நோன்போடு ஒழுகுகை. 2. Act of religious initiation; |
| விரதம் 1 | viratam n. <>vrata. 1. Religious vow, act of austerity; holy practice, as fasting, continence, etc.; நோன்பு. ஊக்கித்தாங் கொண்ட விரதங்கள் (நாலடி, 57). 2. Solemn vow, oath; 3. Penance, one of seven puṇṇiyam, q.v.; 4. A ceremony. |
| விரதம் 2 | viratam n. <>vi-rasa. Dislike, unpleasantness; அருவருப்பு. விரதமாயை புரிசகுனி (பாரத. நாடுகர. 32). |
| விரதம் 3 | viratam n. <>vi-rata. Stopping, desisting; ஒழிகை. மான்விரத்நோக்கியர் (பாரத. நாடுகர. 32). |
| விரதம்பிடி - த்தல் | viratam-piṭi- v. intr. <>விரதம்1+. To fast; பட்டினிகிடத்தல். (W.) |
| விரதமிறக்கு - தல் | viratam-iṟakku- v. intr. <>id.+. To celebrate the conclusion of a religious vow or fast with apppropriate ceremonies; சங்கற்பித்துக்கொண்டு நடத்தும் விரதத்தைச் சாந்திசெய்து முடித்தல். |
| விரதவுத்தியாபனம் | virata-v-uttiyāpaṉam n. <>vrata+udyāpana. Ceremonies at the conclusion of a viratam; விரதமுடிக்குஞ் சாந்திச்சடங்கு. (யாழ். அக.) |
| விரதன் | virataṉ n. <>விரதம்1. See விரதி. . |
| விரதி | virati n. <>vratin. 1. One who has taken a religious vow; நோன்பு மேற்கொண்டோன். விரிசடை விரதிகள் (தேவா. 700, 3). 2. One who has renounced the world; 3. Celibate student; |
| விரயம் | virayam n. <>vyaya. 1. Expenditure; செலவு. 2. Extravagance, waste, prodigality; 3. Purging; |
| விரல் | viral n. perh. விரவு-. [T. vrēlu, K. Tu. berel, M. viral.] 1. Finger; toe; கைகால் களினிறுதியில் ஐந்தாகப் பிரியும் உறுப்பு. விரலுளர் நரம்பின் (பொருந. 17). See விரற்கிடை. பாதாதி கேசாந்தம் முக்காலே நால்விரலே ஆறுதோரை உசரமும் (S. I. I. ii, 395). |
| விரல்நொடி 1 | viral-noṭi n. விரல்+. Snapping the fingers; விரலைச் சொடக்குகை. |
| விரல்நொடி 2 | viralnoṭi n. cf. விரற்கொடி. A plant growing in hedges and thickets. See நாயுருவி. (சங்.அக.) |
| விரல்முழி | viral-muḻi n. <>விரல்+முழி2. Knuckle; finger-joint; விரல்களின் சந்துப் பொருத்து. (W.) |
| விரல்விடு - தல் | viral-viṭu- v. intr. <>id.+. To count with one's fingers; கைவிரலைவிட்டு எண்ணுதல். Mod. |
| விரல்வை - த்தல் | viral-vai- v. intr. <>id.+. To be or attempt mischief; குறும்பு செய்தல். Loc. |
| விரலணி | viral-aṇi n. <>id.+அணி2. See விரலாழி. (சூடா.) . |
