Word |
English & Tamil Meaning |
|---|---|
| விரியோலை | viri-y-ōlai n. <>id.+. 1. Fully developed leaf of the palmyra tree; குருத்துவிரிந்து முதிரும் பனையோலை. 2. See விரியல், 5. (W.) 3. Palm-leaf mat; |
| விரிவாக | virivāka adv. <>விரிவு + ஆ 6-. In detail, elaborately; இந்த விஷயம் அந்த நூலில் விரிவாக எழுதப்பட்டிருக்கிறது. |
| விரிவு | virivu n. <>விரி 1-. 1. Expansion; breadth, width; அகற்சி. (பிங்.) 2. See விரிவுரை, 1. விரிவதிகாரம் (நன். 20). 3. Split, crack, as in a wall; |
| விரிவுரை | virivurai n. <>விரிவு + உரை 6. 1. Elaborate commentary; நூலின் விரிவான உரை. (நன். மயிலை. அரும்.) 2. Lecture; |
| விரீஇ | virīi n. <>vrīhi. See விரீகி, 1. நங்கை மார் விரீஇயுற்றவர் (சீவக. 89). . |
| விரீகி | virīki n. <>id. 1. Paddy; நெல். (திவா.) (சீவக. 89, உரை.) 2. Rice; 3. A kind of cardamom; |
| விரீடம் | virīṭam n. <>vrīdā. Shame; வெட்கம். (இலக். அக.) |
| விருக்கதேனீ | virukkatēṉī n. <>vrkṣādanī. Mistletoe. See புல்லுருவி. (மலை.) |
| விருக்கநாதன் | virukka-nātaṉ n. <>vrkṣanātha. See விருக்கபாகம். (மலை.) . |
| விருக்கபாகம் | virukka-pākam n. <>vrkṣa-pāka. Pipal. See அரசு1. (மலை.) . |
| விருக்கம் | virukkam n. <>vrkṣa. Tree; மரம். (சூடா.) |
| விருக்கவீடு | virukka-vīṭu n. <>விருக்கம் + வீடு. Hollow in a tree; மரப்பொந்து. (சங். அக.) |
| விருக்காதனி | virukkātaṉi n. <>vrkṣā-dana. Black neem tree. See கருவேம்பு, 2. (நாமதீப. 302.) |
| விருக்கு | virukku n. Vermilion. See சாதிலிங்கம். (சங். அக.) |
| விருகத்திரணம் | viruka-t-tiraṇam n. <>brhat-trṇa. Bamboo; மூங்கில். (மலை.) |
| விருகதூமம் | virukatūmam n. <>vrka-dhūmaka. A water-plant; நீர்மேற்படர்கொடி வகை. (மூ. அ.) |
| விருகம் 1 | virukam n. <>vrka. A kind of wild dog; செந்நாய். மையார் விருகந் துருவி மறைந்தே (கம்பரா.நகர்நீங்கு. 83, பி-ம்.). (பிங்.) |
| விருகம் 2 | virukam n. <>mrga. Animal, beast; மிருகம். பல்விருக மாகி (திருவாச, 1, 27). |
| விருகற்பதி | virukaṟpati n. <>Brhaspati. Jupiter; வியாழன். (யாழ். அக.) |
| விருகற்பாடல் | virukar-pāṭal n. See விருகற்பாடலி. (மலை.) . |
| விருகற்பாடலி | virukaṟ-pāṭali n. cf. vrhatpāṭali. Wood-apple. See விளா1. (சங். அக.) |
| விருகற்பாதம் | virukaṟ-pātam n. <>brhat-pāda. Banyan. See ஆல்1, 2. (யாழ். அக.) |
| விருகு | viruku n. <>வெருகு1. Long-rooted arum; வெருகு. (மலை.) |
| விருகோதரன் | virukōtaraṉ n. <>Vrkōdara. Bhīma, the second son of Pāṇdu, as having a belly like that of a wild dog: [செந்நாயது போன்ற வயிற்றை யுடையவன்] பீமன். (பிங்.) |
| விருச்சலாபம் | viruccalāpam n. perh. vrṣya-lābha. Cow's thorn. See நெருஞ்சி. (மலை.) |
| விருச்சி | virucci n. Castor plant. See ஆமணக்கு. (சங். அக.) |
| விருச்சிக்கரணி | viruccikkaraṇi n. cf. vrccikalī Turnsole. See தேட்கொடுக்கி, 1. (மலை.) |
| விருச்சிகம் 1 | viruccikam n. <>vršcika. 1. Scorpion; தேள். (திவா.) 2. Scorpio of the zodiac; 3. The eighth solar month; 4. Crab; |
| விருச்சிகம் 2 | viruccikam n. Purslane-leaved trianthema. See சாறணை. (மலை.) |
| விருச்சிகன் | viruccikaṉ n. See விரிச்சிகன் 1. (இலக். அக.) . |
| விருசகத்தி | virucakatti n. perh. வீரியம் + சகச்சிரம். cf. sahasravīryā. A kind of harialli grass. See விரியறுகு. (மலை.) |
| விருசம் 1 | virucam n. cf. vrša. Ginger plant. See இஞ்சி2, 1. (மலை.) |
