Word |
English & Tamil Meaning |
|---|---|
| விருத்தி 3 | virutti n. A kind of winged myrobalan. See கருமருது. (மலை.) |
| விருத்திக்கடன் | virutti-k-kaṭaṉ n. <>விருத்தி 2+. Interest-bearing debt; வட்டிக்கு வாங்குங் கடன். குன்றா விருத்திக் கடன்கொண்டு (திருவிளை. உலவாக்கோட்டை. 7). |
| விருத்திசந்தி | virutti-canti n. <>vrddhi +. (Gram.) Sandhi or euphonic combination in Sanskrit of a or ā with ē or ai resulting in ai and secondly a or ā with ō or au resulting in au; அகர ஆகாரங்களில் ஒன்றன்முன் ஏகார ஐகாரங்களில் ஒன்று வந்தால் ஐகாரமாகவும், ஓகார ஔகாரங்களில் ஒன்று வந்தால் ஔகாரமாகவும் மாறும் வடமொழிச்சந்தி. |
| விருத்திசந்திரன் | virutti-cantiraṉ n. <>id.+. Waxing moon; வளர்பிறை. (C. G.) |
| விருத்திசூதகம் | virutti-cūtakam n. <>id.+. Pollution on account of birth of a child in a family; குடும்பத்திற் குழந்தை பிறந்ததாலுண்டாடந் தீட்டு. |
| விருத்தியன் | viruttiyaṉ n. <>bhrtya. Servant, slave; வேலையாள். (W.) |
| விருத்தியுபாயம் | virutti-y-upāyam n. <>விருத்தி 1+. Means of livelihood; சீவனஞ்செய்யும் வழி. |
| விருத்தியுரை | virutti-y-urai n. <>id.+ உரை6. See விருத்தி 1, 8. . |
| விருத்திரன் | viruttiraṉ n. <>vrtra. See விருத்திராசுரன். ஈங்குவன் விருத்திரனென்ப (திருவிளை. இந்திரன். 17). . |
| விருத்திராசுரன் | viruttirācuraṉ n. <>vrtrāsura. An Asura slain by Indra; இந்திரனால் வதையுண்ட ஓர்அசுரன். வீரமிக்க விருத்திராசுரனைக் கொன்ற வோதரும் பழியாலஞ்சி (திருவாலவா. 1, 2). |
| விருத்திராரி | viruttirāri n. <>vrtrāri. Indra, as the slayer of Virittirācuraṉ; [விருத்திராசுரனைக் கொன்றவன்] இந்திரன். (திவா.) |
| விருத்துப்பட்டிகை | viruttu-p-paṭṭikai n. perh. விருத்தி 1+. An ancient tax; பழையவரி வகை. (S. I. I. i, 103.) |
| விருத்தூண் | viruttūṇ n. <>விருந்து + ஊண். Fresh food; புத்துணவு. (இலக். அக.) |
| விருத்தை | viruttai n. <>vrddhā. 1. Aged woman; அதிக வயதானவள். (பிங்.) 2. (Erot.) A woman past her 55th year; |
| விருதம் | virutam n. cf. விருத்தம்1. White madar; வெள்ளெருக்கு. (சங். அக.) |
| விருதர் | virutar n. <>viruda. Warriors; வீரர். வாளிகொண்ட விருதர் (பாரத. வாரணா. 76). |
| விருதா | virutā <>vrthā. n. Uselessness, fruitlessness; that which is vain or profitless; வீண். --adv Uselessly; |
| விருதாவளி | virutāvaḷi n. <>birudāvaḷī. Detailed statement of titles; அரசர் முதலியோர் பெரும் பட்டவரிசை. |
| விருதாவன் | virutāvaṉ n. <>விருதா. Good-for-nothing fellow; பயனற்றவன். போக்கிடமற்ற விருதாவனை ஞானிகள் போற்றுத லற்றது (திருப்பு. 266). |
| விருது 1 | virutu n. <>birudu. [T. K. birudu.] 1. Title; பட்டம். தலம்புகழ் விருது (திருவாலவா. 46, 9). 2. Banner; 3. Trophy, badge of victory; 4. Pedigree, genealogy; |
| விருது 2 | virutu n. See விரதம் 1. (W.) . |
| விருதுக்கொடி | virutu-k-koṭi n. <>விருது 1+. Distinguishing ensign or banner; பிறர்க்கில்லாச் சிறப்பை அறிவித்தற்குரிய கொடி. |
| விருதுகட்டு - தல் | virutu-kaṭṭu- v. intr. <>id.+. To determine, resolve, as on a course of action; சங்கற்பித்துக்கொள்ளுதல். அட்டசித்தியு நலன்பருக்கருள விருதுகட்டியபொ னன்னமே (தாயு. அகிலா. 1). |
| விருதுகாளம் | virutu-kāḷam n. <>id.+ காளம் 4. Trumpet of victory; வெற்றிற்குறியாகிய காளம். (W.) |
| விருந்தம் 1 | viruntam n. <>vrnta. 1. Footstalk of leaves, flowers or fruits; பூ பழம் முதலியவற்றின் காம்பு. (தைலவ.) 2. Margosa; 3. Stand of pots, etc.; |
| விருந்தம் 2 | viruntam n. <>vrnda. 1. Circle of relatives; பந்துவர்க்கம். (சூடா.) அவர் விருந்தங்களுக்கும் (E. I. xxi, 188). 2. Herd, flock; 3. Heap; |
| விருந்தம் 3 | viruntam n. See விருந்தனை. (சூடா.) . |
| விருந்தமர்க்களம் | viruntamarkkaḷam n. <>விருந்து + அமர்க்களம். Stir and bustle of a feast; விருந்தாரவாரம். (W.) |
