Word |
English & Tamil Meaning |
|---|---|
| விருந்தர் | viruntar n. <>id. See விருந்தினர். (W.) . |
| விருந்தனை | viruntaṉai n. perh. id. Wife; மனைவி. (பிங்.) |
| விருந்தாகம் | viruntākam n. <>vrntāka. Indian kales. See சேம்பு, 1. (மூ. அ.) |
| விருந்தாட்டு | viruntāṭṭu- n. <>விருந்து+. 1. Giving feasts, feasting; விருந்தளிக்கை. 2. Annual festival; |
| விருந்தாடி | viruntāṭi n. <>விருந்தாடு-. See விருந்து, 2. (W.) . |
| விருந்தாடு - தல் | viruntāṭu- v. intr. <>விருந்து+. To go as a guest; விருந்தாகப்போதல். Madr.¢ |
| விருந்தாரம் | viruntāram n. <>vrndāra. (சங். அக.) 1. Beauty; அழகு. 2. Excellence; |
| விருந்தாவனம் | viruntāvaṇam n. <>brndā-vana. Brndāvaṉam, the scene of Krṣṇa's sports, near Gōkula on the banks of the Jumna; கண்ணபிரான் விளையாடியதும் யமுனைக்கரையி லுள்ளதுமான ஒரு தலம். விருந்தாவனத்தே கண்டோமே (திவ். நாய்ச். 14). |
| விருந்தாளி | viruntāḷi n. <>விருந்து + ஆளி1. Guest; அதிதி. (W.) |
| விருந்தாற்று - தல் | viruntāṟṟu- v. intr. <>id.+. See விருந்திடு-. (ஐங்குறு. 1, உரை.) . |
| விருந்திடு - தல் | viruntiṭu- v. intr. <>id.+. To give a feast; to show hospitality; நண்பர்க்கு உணவளித்து உபசரித்தல். |
| விருந்தினன் | viruntiṉaṉ n. <>id. 1. Newcomer; புதியவன். விருந்தின னிவனு மன்றி (சீவக. 1647). 2. Guest; |
| விருந்து | viruntu n. [T. vindu, M. virunnu.] 1. Feast, banquet; அதிதி முதலியோர்க்கு உணவளித் துபசரிக்கை. யாதுசெய் வேன்கொல் விருந்து (குறள், 1211). 2. Guest; 3. Newcomer; 4. Newness, freshness; 5. (Pros.) Poetic composition in a new style; |
| விருந்துக்கூடம் | viruntu-k-kūṭam n. <>விருந்து + கூடம் 1. Banqueting hall; விருந்தினரை உபசரிக்கும் மாளிகைப்பகுதி. (கட்டட. நாமா. 1.) |
| விருந்துசொல்(லு) - தல் | viruntu-col- v. tr. <>id.+. To invite to a feast; விருந்துக்கழைத்தல். |
| விருந்துவை - த்தல் | viruntu-vai- v. intr. <>id.+. To give a feast; விருந்தூண் அளித்தல். Loc. |
| விருந்தூட்டு | viruntūṭṭu n. <>id.+. Feeding of guests; விருந்தினருக்கு உணவளிக்கை. இவ்விருந்தூட்டு முட்டில் (S. I. I. iii, 13). |
| விருந்தை | viruntai n. <>brndā. Sacred basil. See துளசி, 1. (மூ. அ.) |
| விருந்தோம்பல் | viruntōmpal n. <>விருந்து + ஓம்பு-. Welcoming and entertaining guests; புதிதாக வருபவரை உண்டி முதலியவற்றால் உபசரிக்கை. (குறள்.) |
| விருந்தோர் | viruntōr n. <>id. 1. Newcomers; புதியவர். (சூடா.) 2. Guests; |
| விருப்பம் | viruppam n. <>விரும்பு-. 1. Desire, liking; ஆசை. (சூடா.) 2. Love, affection; 3. Attachment; |
| விருப்பன் | viruppaṉ n. <>id. 1. One who has desires; ஆசை யுள்ளவன். 2. One who likes; lover; |
| விருப்பு | viruppu n. <>id. See விருப்பம். விருப்பறாச் சுற்றம் (குறள், 522). . |
| விருப்புவெறுப்பு | viruppu-veṟuppu n. <>விருப்பு+. Desire and aversion; like and dislike; வேண்டுதல் வேண்டாமை. |
| விருபன் | virupaṉ n. perh. vi-rūpa. cf. இரும்பன். A kind of rat; வெள்ளெலி. (சது.) |
| விரும்பன் | virumpaṉ n. <>விரும்பு-. See விருப்பன். துறையூர் விரும்பா (தேவா. 1005, 4). . |
| விரும்பார் | virumpār n. <>id.+ ஆ neg. Enemies; பகைவர். விரும்பா ரமரிடை வெல்போர் வழுதி (பு. வெ. 10, 2, கொளு). |
| விரும்பு - தல் | virumpu- 5 v. tr. 1. To wish, desire, long for; to covet; to love, like; ஆசைப்படுதல். நனிவிரும்பு தாளாண்மை நீருமமிழ் தாய்விடும் (நாலடி, 200). 2. To think intensely of; |
| விருமதரு | virumataru n. <>brahma-taru. Battle of Plassey tree. See புரசு 3. (மலை.) |
| விருமமூலி | viruma-mūli n. prob. brāhmi + mulī. A prostrate herb. See பிரமி 2. (சங். அக.) |
