Word |
English & Tamil Meaning |
|---|---|
| வில்லவன் | villavaṉ n. <>id. 1. Cēra king, as having a banner with the figure of a bow; [விற்கொடி யுடையவன்] சேரன். வில்லவன் வந்தான் (சிலப். 27, 238). (திவா.) 2. Kāma, as having a sugarcane bow; |
| வில்லாச்சிரமம் | vil-l-ācciramam n. <>id.+ perh. āšrama. Testing one's skill in archery; விற்பரீட்சை. (யாழ். அக.) |
| வில்லாச்சிரமி | villāccirami n. <>வில்லாச்சிரமம். See வில்லாளன். (யாழ். அக.) . |
| வில்லாண்மை | vil-l-āṇmai n. <>வில்+. Skill in archery; விற்றிறமை. (W.) |
| வில்லார் | villār n. <>id. [K. billār.] (W.) 1. Bowmen; வில்லாளர். 2. Hunters; |
| வில்லாள் | vil-l-āḷ n. <>id.+. [K. billāḷ.] See வில்லாளன். (புறநா. 168, உரை.) . |
| வில்லாளன் | vil-l-āḷaṉ n. <>id.+ ஆள்-. Archer, one skilled in archery; விற்றோழிலில் வல்லவன். சரந்துரந்த வில்லாளனை (திவ். பெரியாழ். 2, 1, 10). |
| வில்லாளி | vil-l-āḷi n. <>id.+ id. See வில்லாளன். . |
| வில்லி 1 | villi n. <>id. [K. billa.] 1. See வில்லாளன். மும்மதிலெய்த வில்லி (திருவாச. 9, 5). . 2. Kāma; 3. Vīrabhadra; 4. Arjuna; 5. Member of the Iruḷa caste. 6. Hunter; |
| வில்லி 2 | villi n. <>வில்லிபுத்தூரர். See வில்லிபுத்தூராழ்வார், 2. காதைக் குறித்துத் தோண்டி யெட்டினா லறுப்பதற்கு வில்லியில்லை (தமிழ்நா. 230). . |
| வில்லிங்கம் | villiṅkam n. See வில்லங்கம். (C. G.) . |
| வில்லிடு - தல் | vil-l-iṭu v. intr. <>வில்+. To shine, sparkle; ஒளிவீசுதல். பொலஞ்செய் கோதை வில்லிட (சிலப். 29, கந்துக வரி.). |
| வில்லிபாரதம் | villi-pāratam n. <>வில்லி2+. The epic poem Mahā-bhārata in Tamil viruttam, by Villi-puttūrar; வில்லிபுத்தூரர் விருத்தப்பாவில் இயற்றிய மகாபாரதநூல். |
| வில்லிபுத்தூர் | villiputtūr n. šrivilliputtūr, the birthplace of Periyāḻvār and āṇṭāḷ; பெரியாழ்வாரும் ஆண்டாளும் அவதரித்த தலம். வில்லிபுத்தூர் விட்டுசித்தன் (திவ். திருப்பல்.12). |
| வில்லிபுத்தூரர் | villiputtūrar n. <>வில்லிபுத்தூர். See வில்லிபுத்தூராழ்வார். . |
| வில்லிபுத்தூராழ்வார் | villiputtūr-āḻvār n. <>id.+. 1. Periyāḻvār, as born in šrīvilliputtūr; பெரியாழ்வார். 2. A poet, the author of the Tamil Mahā-bhārata, 14th C.; |
| வில்லிமை | villimai n. <>வில்லி1. Skill in archery; விற்றிறமை. மிறைத்தார் புரமெய்த வில்லிமை (பதினென். திருவேகம். திருவந். 59). |
| வில்லியடி | villi-y-aṭi n. <>வில்லி1+ அடி 3. Indistinct footprint, as of a man of the Iruḷa caste; உள்ளங்கால் பதியாத அடிச்சுவடு. Loc. |
| வில்லியர் | villiyar n. <>id. 1. See வில்லார். (W.) . 2. Iruḷas, a tribe of hunters inhabiting the Nilgiris and the adjacent plains; |
| வில்லியாதன் | villi-y-ātaṉ n. perh. id.+ ஆதன்1. A chief of Māvilaṅkai near Tiṇdivaṉam; திண்டிவனத்தருகிலுள்ள மாவிலங்கை என்ற நகரத்தில் வாழ்ந்த ஒரு தலைவன். (புறநா. 379.) |
| வில்லுமன் | villumaṉ n. Rose-coloured sticky mallow. See சிற்றாழட்டி, 2. (மலை.) . |
| வில்லுவம் | villuvam n. <>vilva. Bael. See வில்வம், 1. (பிங்.) |
| வில்லுழு - தல் | vil-l-uḻu- v. intr. <>வில்+. To earn one's living as a bowman; விற்போர் செய்து வாழ்தல். வில்லுழு துண்மார் (புறநா.170). |
| வில்லுறுதி | villuṟuti n. <>வில்லூதி. See வில்லூதிப்பட்டு. Loc. . |
| வில்லூதி | villūti n. <>Port. villudo. See வில்லூதிப்பட்டு. (W.) . |
| வில்லூதிப்பட்டு | villūti-p-paṭṭu n. <>வில்லூதி+. A kind of cloth; ஒருவகைச் சகலாத்து. (W.) |
| வில்லூர்தி | villūrti n. See வில்லூதி. . |
| வில்லூன்றிப்புழு | vil-l-ūṉṟi-p-puḻu n. <>வில்+ஊன்று-+. A kind of worm which moves in an undulating manner; உடலை மேலும் கீழுமாக நெளித்து வளைந்து வளைந்து செல்லும் ஒருவகைப் புழு. (ஞானா, 20, உரை.) |
| வில்லேப்பாடு | vil-l-ēppāṭu n. <>id.+. Bowshot; அம்புவிழும் எல்லை. வில்லேப்பாட்டிடை யெவ்வெம் மருங்கினுந் தெரிவோற்கு (பெருங். உஞ்சைக். 53, 68). |
| வில்லேருழவர் | vil-l-ēr-uḻavar n. <>வில்லேருழவு. 1. Bowmen; ¢வீரர். வில்லெ ருழவர்பகைகொளினுங் கொள்ளற்க (குறள், 872). 2. Hunters; 3. Inhabitants of the desert tract; |
