Word |
English & Tamil Meaning |
|---|---|
| விளக்குப்பாடம் | viḷakku-p-pāṭam n. <>id.+பாடம்2. Lesson learnt at night under a lamp; இரவிலேற்றிய தீபத்தின் முன்னிருந்து பிள்ளைகள் படிக்கும் பாடம். Loc. |
| விளக்குப்பாதம் | viḷakku-p-pātam n. <>id.+பாதம்1. 1. See விளக்குத்தண்டு. (W.) . 2. Foot of the lamp-stand; |
| விளக்குப்பார் - த்தல் | viḷakku-p-pār- v. intr. <>id.+. See விளக்கேற்று-. Loc. . |
| விளக்குப்பிணம் | viḷakku-p-piṇam n. <>id.+. Darkness; இருட்டு விளக்குப்பிணம் போலே காணவொண்ணாதபடி (ஈடு, 5, 7, 4). |
| விளக்குப்புறம் | viḷakku-p-puṟam n. <>id.+புறம்1. Endowment for lights in a temple; கோயிலில் விளக்கிடுதற்கு விடப்பட்ட இறையிலி நிலம். நந்தா விளக்குப்புற மாகென (சீவக. 2564). |
| விளக்குப்பொருத்து - தல் | viḷakku-p-poruttu- v. intr. <>id.+. See விளக்கேற்று-. (W.) . |
| விளக்குப்போடு - தல் | viḷakku-p-pōṭu- v. intr. <>id.+. See விளக்கேற்று-. . |
| விளக்குமாடம் | viḷakku-māṭam n. <>id.+மாடம்1. 1. Niche in a wall for lamps; தீபம் வைப்பதற்கான சுவர்ப்புரை. (W.) 2. Place for lights in a temple; |
| விளக்குமாற்றுக்கட்டை | viḷakkumāṟṟu-k-kaṭṭai n. <>விளக்குமாறு+. 1. Old and worn-out broom; தேய்ந்த துடைப்பம். 2. A term of reproach; |
| விளக்குமாறு | viḷakku-māṟu n. <>விளக்கு-+. Broom; துடைப்பம். (தைலவ.) |
| விளக்குறு - த்தல் | viḷakkuṟu- v. tr. <>id.+உறு-. To brighten, give splendour to; ஒளிபெறச் செய்தல். நிலம் விளக்குறுப்ப (மதுரைக். 705). |
| விளக்கெண்ணெய் | viḷakkeṇṇey n. <>விளக்கு+. 1. Castor oil, as used for lamps; விளக்கிடுவதற்கு உதவும் ஆமணக்கெண்ணெய். Colloq. 2. Medicinal, castor oil; 3. Oil extracted from neem seeds; |
| விளக்கேற்றிவை - த்தல் | viḷakkēṟṟi-vai- v. <>id.+ஏற்று-+. intr. 1. See விளக்கேற்று-. . 2. To help to marry; To set up, establish; |
| விளக்கேற்று - தல் | viḷakkēṟṟu- v. intr. <>id.+. To light lamps; தீபத்தை யேற்றுதல். |
| விளக்கைக்குளிரவை - த்தல் | viḷakkai-k-kuḷira-vai- v. intr. <>id.+. See விளக்கணை-. Loc. . |
| விளக்கைச்சமனஞ்செய் - தல் | viḷakkai-c-camaṉa-cey- v. intr. <>id.+. See விளக்கணை. Loc. . |
| விளக்கைச்சமனம்பண்ணு - தல் | viḷakkai-c-camaṉam-paṇṇu- v. intr. <>id.+. See விளக்கணை-. Loc. . |
| விளக்கைநிறுத்து - தல் | viḷakkai-niṟuttu- v. intr. <>id.+. See விளக்கணை-. Loc. . |
| விளகம் | viḷakam n. <>bhallālāka. Marking-nut tree. See சேங்கோட்டை, 2. (மலை.) |
| விளங்கம் | viḷaṅkam n. <>vidaṅga. Small elliptic cuspidate-leaved windberry. See வாயுவிளங்கம், 1. (மலை.) |
| விளங்கவை - த்தல் | viḷaṅka-vai- v. tr. <>விளங்கு-+. 1. To make clear; தெளிவாக்குதல். 2. See விளங்கேற்றிவை. 3. To make illustrious or renowned; |
| விளங்கவைத்தல் | viḷaṅka-vaittal n. <>விளங்கவை-. Perspicity, clearness of expression, one of ten nūl-aḻaku, q.v.; நூலழகுபத்தனுள் கூறப்புகும் பொருளைத் தெளியச்சொல்லுவது. (நன். 13.) |
| விளங்கிப்பேர் | viḷaṅki-p-pēr n. <>விளங்கு-+. History of lands, fields, etc., given in the old settlement register; முதற் பைசல் கணக்கிலுள்ள நிலவிவரணச் சரித்திரம். Loc. |
| விளங்கிழை | viḷaṅkiḻai n. <>id.+இழை. Woman, as wearing bright jewels; பெண். விளங்கிழை தமியளானாள் (சீவக. 303). |
| விளங்கு 1 - தல் | viḷaṅku- 5 v. [T. veḷuṅgu, K. beḷagu, M. viḷaṅṅuga.] 1. To shine; பிரகாசித்தல். பகல்விளங்குதியாற் பல்கதிர் விரித்தே (புறநா. 8). 2. To become renowned, illustrious; 3. To be polished; 4. To be clear or plain; 5. To be prosperous, successful; 6. To excel, become great; To know; |
