Word |
English & Tamil Meaning |
|---|---|
| விற - த்தல் | viṟa- 12 v. intr. (K. veṟe.) 1. To be dense, close; to be intense; செறிதல். கலுழ்ந்துவீ ழருவிப்பாடு விறந்து (நெடுநல். 97). 2. To abound, increase; 3. To conquer; 4. To To fight; 5. To fear; |
| விறகாள் | viṟakāḷ n. <>விறகு+ஆள்2. Firewood seller, one who hawks firewood; விறகு சுமந்து விற்போன். விறகாளாய்ச் சாதாரி பாடுமாறும் (திருவாலவா. பதி. பாயி. 8). |
| விறகு | viṟaku n. perh. விற-. [M. viragu.] 1. Firewood, fuel; எரிக்குங் கட்டை. நாறு நறும் புகை விறகின் (சீவக. 131). 2. Sacrificial fuel. |
| விறகுக்கட்டு | viṟaku-k-kaṭṭu n. <>விறகு+. Bundle of firewood; கட்டிய விறகுத்தொகுதி. விறகுக்கட்டு மூன்று (S. I. I. iii, 188, 7). |
| விறகுக்கட்டை | viṟaku-k-kaṭṭai n. <>id.+. Stick of firewood; எரிக்கவுதவும் மரத்துண்டு. (W.) |
| விறகுகாடு | viṟaku-kāṭu n. <>id.+காடு1. 1. Heap of firewood, விறகின்தொகுதி. மரக்காடான விறகுகாடு எரிந்ததொத்தது (தக்கயாகப். 329, உரை). 2. Forest reserved for firewood; |
| விறகுதலையன் | viṟaku-talaiyaṉ n. <>id.+தலை. 1. See விறகாள். (W.) . 2. See விறகுவெட்டி. (யாழ். அக.) 3. Stupid person; |
| விறகுவெட்டி | viṟaku-veṭṭi n. <>id.+வெட்டு-. Wood-cutter; மரம் தறிப்பவன். |
| விறப்ப | viṟappa part. <>விற-. A particle of comparison; ஓர் உவமவாய்பாடு. (தொல். பொ. 287.) |
| விறப்பு | viṟappu n. <>id. 1. Crowdedness, density, intensity; செறிவு. (தொல். சொல். 347.) 2. Increase; 3. Strength; 4. Victory; 5. Battle; 6. Fear; |
| விறல் | viṟal n. cf. விற-. 1. Victory; வெற்றி. விறல¦னும் வேண்டாமை யென்னுஞ் செருக்கு (குறள், 180). 2. Bravery; 3. Strength; 4. Greatness; 5. Distinctive excellence; 6. Physical expression of emotion; |
| விறல் (லு) - தல் | viṟal- 5 v. intr. <>விறல். To rush forward with rage; கோபத்தோடு எதிர்த்துச் செல்லுதல். மதுரைமுன்னா விறலி வருகின்றதது (திருவிளை. மாயப்பசு. 9). |
| விறல்கோளணி | viṟal-kōḷ-aṇi n. <>id.+கோள்1+அணி2. (Rhet.) A figure of speech in which is described the heroic acts against an enemy or his allies; பகை அல்லது அதன் துணையின் மேற் செலுத்தும் பராக்கிரமத்தைக் கூறும் அணிவகை. (அணியி. 58.) |
| விறல்வென்றி | viṟal-veṉṟi n. <>id.+. Victory due to one's prowess; போர்வீரத்தாலுண்டாகிய வெற்றி. இன்னிசைய விறல்வென்றித்தென்னவர் வயமறவன் (புறநா. 380, 4). |
| விறலி | viṟali n. <>id. 1. Female dancer who exhibits the various emotions and sentiments in her dance; உள்ளக்குறிப்புப் புறத்து வெளிப்பட ஆடுபவள். (தொல். பொ. 91.) 2. Woman of the pāṇ caste; 3. Girl who is 16 years old; |
| விறலியாற்றுப்படை | viṟali-y-āṟṟu-p-paṭai n. <>விறலி+. (Puṟap.) Theme in which a viṟali who had been rewarded by a king directs another viṟali to the royal presence to obtain rewards; அரசன்பாற் பரிசில்பெற்ற ஓர் விறலி பரிசில்பெற விரும்பும் விறலியை அவன்பால் ஆற்றுப்படுத்தலைக் கூறும் புறத்துறை. (பு. வெ. 9, பாடாண். 31.) |
| விறலிவிடுதூது | viṟali-viṭu-tūtu n. <>id.+விடு-+. A poem in which a person who led the life of a profligate repents and sends a viṟali as a messenger to his wife to acquaint her with his good fortune in obtaining the patronage of a chieftain and to conciliate her; தூர்த்தனாய்த் திரிந்த ஒருவன் தான் கழிந்ததற் கிரங்கிப் பின் ஓர் தலைவனை யடுத்துப் பரிசில்பெற்றுத் தன் மனைவிபால் ஓர் விறலியைத் தூதனுப்புவதாகக் கூறும் பிரபந்தம். |
| விறலோன் | viṟalōṉ n. <>விறல். 1. Robust, strong man; திண்ணியன். (பிங்.) 2. Warrior; hero; 3. Arhat; |
| விறன்மிண்டநாயனார் | viṟaṉmiṭa-nāy-aṉār n. A canonized šaiva saint, a contemporary of Cuntaramūrtti-nāyaṉār, one of 63; நாயன்மார் அறுபத்துமூவருள் சுந்தரமூர்த்திகள் காலத்தவரான ஒரு சிவனடியார். (பெரியபு.) |
