Word |
English & Tamil Meaning |
|---|---|
| விஷுசங்கிரமணம் | viṣu-caṅkiramaṇam n. <>viṣu +. See விஷுபுண்ணியகாலம். (C.G.) . |
| விஷுபுண்ணியகாலம் | viṣu-puṇṇiyakālam n. <>id.+. (Astron.) The time of the sun's entrance into either of the equinoctial signs Aries and Libra; மேஷம் அல்லது துலாத்தில் சூரியன் பிரவேசிக்குங் காலம். (பஞ்.) |
| விஷுவம் | viṣuvam n. <>viṣuva. Equinox. See சமராத்திரம். |
| விஷூசி | viṣūci n. <>viṣūci. Cholera; விஷபேதி. Loc. |
| விஸ்தரி - த்தல் | vistari- 11 v. tr. <>vistara. 1. To enlarge, amplify elaborate; பெருக்குதல். இராகத்தை விஸ்தரித்துப் பாடினான். 2. To expatiate upon; 3. To examine, as a witness; |
| விஸ்தரிப்பு | vistarippu n. <>விஸ்தரி-. 1. Amplification, elaboration; பெருக்குகை. 2. Expatiation; 3. Examination of a witness; |
| விஸ்தாரகுமாஸ்தா | vistāra-kumāstā n. <>விஸ்சாரம் +. Court-clerk who assists in examining witnesses; கோர்ட்டில் சாட்சி விசாரணை நடத்த உதவிபுரியும் குமாஸ்தா. Nā. |
| விஸ்தாரம் | vistāram n. <>vistāra. Expansiveness, extensiveness. See வித்தாரம், 1. |
| விஸ்தாரி | vistāri n. Learned person. See வித்தாரி. (யாழ். அக.) |
| விஸ்தி | visti n. Partition. See வித்தி1. |
| விஸ்தீரணம் | vistiraṇam n. <>vi-stirṇa. 1. Breadth; விசாலம். 2. Area; |
| விஸ்புரமுத்திரை | vispura-muttirai n. See விற்புரமுத்திரை . (செந். x , 424.) . |
| விஸ்போடம் | vispōṭam n. <>vi-sphōṭa. Boil; பிளவை. (சீவரட். 309). |
| விஸ்மிருதி | vismiruti n. <>vi-smrti. 1. Forgetfulness; மறதி. 2. Madness; |
| விஸர்க்கம் | visarkkam n. <>vi-sarga. See விசர்க்கம். . |
| விஸர்ஜ்ஜனம் | visarjjaṉam n. <>vi-sarjana. See விசர்ச்சனம். கங்கண விஸர்ஜ்ஜநம். . |
| விக்ஷேபம் | vikṣēpam n. <>vi-kṣēpa. 1. See விக்கேபம். . 2. Mutation, change; |
| வீ 1 | vi . The compound வீ of வ் and ஈ. . |
| வீ 2 - தல் | vi- 4 v. intr. prob. vi. 1. To perish; to cease; to disappear; அழிதல். வீயாச் சிறப்பின் (புறநா. 15). 2. To die; 3. To leave; 4. To change; to deviate, as from one's course; |
| வீ 3 - த்தல் | vi- 11 v. tr. Caus. of வ2-. To destroy; அழித்தல். ஏழுய ருலகமும் வீக்கின்றான் (கம்பரா. முதற்போ. 118). |
| வீ 4 | vi n. <>வீ2-. 1. Ruin, destruction; அழிவு. வீகலந்த மஞ்ஞை போல் (சீவக. 1104). 2. Death; 3. Separation, removal; 4. Drooping; languishing; 5. Flower; 6. Pollen; |
| வீ 5 | vi n. <>vi. Bird; பறவை. (பிங்.) |
| வீக்கம் 1 | vikkam n. <>வீங்கு-. 1. Enlargement, swelling, inflammation; உடலுறுப்பு வீங்குகை. கால் வீக்கம். 2. Contusion, Cellulitis; 3. Dropsy, Oedema; 4. Puffing of the limbs; 5. Abundance; 6. Crowd; 7. Greatness; 8. Pride; 9. Longing, hankering; |
| வீக்கம் 2 | vikkam n. <>வீக்கு1-. 1. Bond, tie; கட்டு. (சூடா.) 2. Trouble, obstacle; 3. Covering; packing; 4. Tightness; |
| வீக்கமிறங்குதல் | vikkam -iṟaṅkutal n. <>வீக்கம்1 +. Subsiding of a swelling and its transition from the upper to the lower parts of the body; உடலின் மேற்பகுதியிலிருந்த வீக்கங் குறைந்து மெல்ல மெல்லக் கீழ்நோக்கி யிறங்குகை. (W.) |
| வீக்கு 1 - தல் | vikku- 5 v. tr. 1. To tie up, blind; கட்டுதல். கச்சையும் வீக்கினன் (சீவக. 1836). 2. To control, restrain; 3. To hinder; 4. To strike; |
